Thalapathy 69: திடீரென முடிவை மாற்றிய விஜய்... தளபதி 69 இயக்குநர் லிஸ்ட்டில் இன்னொரு பிரபலம்..?

சென்னை: விஜய் அரசியலுக்கு வரவிருப்பதால் இனி சினிமாவில் நடிக்கப் போவதில்லை என முடிவெடுத்துள்ளார். தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்துக்குப் பின்னர் இன்னும் ஒரேயொரு மூவியில் மட்டும் கமிட்டாகியுள்ளார். அதன்படி தளபதி 69 தான் விஜய்யின் கடைசி படமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் இயக்குநர் யார் என்பது தான் தற்போதைய எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது.

தளபதி 69 இயக்குநர் யார்..?: கடந்த சில ஆண்டுகளாகவே விஜய் அரசியலில் களமிறங்கலாம் என செய்திகள் வெளியாகி வந்தன. அதனை அவரே தற்போது கன்ஃபார்ம் செய்துவிட்டார். அதன்படி தமிழக வெற்றிக் கழகம் என்ற தனது அரசியல் கட்சியை அறிமுகம் செய்த விஜய், சினிமாவில் இருந்து விலகுவதாகவும் அறிவித்துவிட்டார். இதனால் தளபதி 69 தான் விஜய்யின் கடைசிப் படமாக உருவாகவுள்ளது.

 Thalapathy 69: Vijays Thalapathy 69 New Director Talks Going On

பீஸ்ட், வாரிசு, லியோ என தொடர்ந்து பிரேக் இல்லாமல் அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்தார் விஜய். இப்போது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்துக்கு ஆரம்பம் முதலே அதிக எதிர்பார்ப்பு இருந்தது. இப்போது விஜய் சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்துவிட்டதால் எதிர்பார்ப்பு இன்னும் அதி உச்சத்தில் உள்ளது.

அதேபோல் தான் விஜய்யின் கடைசிப் படமான தளபதி 69 மீதும் அதிக ஹைப் ஏற்பட்டுள்ளது. விஜய் அரசியலுக்கு வரவிருப்பதால் தளபதி 69 கண்டிப்பாக பொலிட்டிக்கல் ஜானர் மூவியாக தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் இந்தப் படத்தின் இயக்குநர் யார் என்பது தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். முதலில் தளபதி 69 இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் என சொல்லப்பட்டது. மேலும் விஜய் - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகும் தளபதி 69 கேங்ஸ்டர் ஜானரில் இருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகின.

ஆனால், கடைசியாக வெளியான தகவல்களில் தளபதி 69 இயக்குநராக ஹெச் வினோத் கமிட்டாகியுள்ளதாக சொல்லப்பட்டது. விஜய்க்காக வினோத் ரெடி செய்துள்ளது பொலிட்டிக்கல் த்ரில்லர் கதை எனவும் தகவல் வெளியானது. ஆனால் தற்போது தளபதி 69 இயக்குநர் லிஸ்ட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. கார்த்திக் சுப்புராஜ், வினோத் மட்டும் இல்லாமல் அட்லீ, ஷங்கர் ஆகியோரின் பெயர்களும் இதில் அடிபடுகின்றன.

முக்கியமாக இந்த லிஸ்ட்டில் இன்னொரு இயக்குநரும் இணைந்துள்ளாராம். அதுகுறித்து ரொம்பவே சீக்ரெட்டாக வைக்கப்பட்டுள்ளதாக விஜய் தரப்பில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் விஜய்யின் தளபதி 69 இயக்குநர் யார் என்பதில் இன்னும் இழுபறியான சூழலே உள்ளது. ஆனால், விஜய் மட்டும் தளபதி 69 இயக்குநர் யார் என்பதை முடிவு செய்துவிட்டதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X