தளபதி 69 vs ஜெயிலர் 2.. அடுத்த ஆண்டு இப்படியொரு கிளாஷ் நடக்க வாய்ப்பு இருக்கா? இப்பவே ஆரம்பம்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படம் இந்த ஆண்டு ஆயுத பூஜையை குறிவைத்து அக்டோபர் 10ம் தேதி வெளியாகிறது. முன்னதாக அந்த ரிலீஸ் தேதியை கைப்பற்ற நினைத்த சூர்யாவின் கங்குவா படத்துக்கு இதுவரை ரிலீஸ் தேதியே கிடைக்காமல் உள்ளது.
அடுத்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி திரைப்படம் மே அல்லது ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூலி படத்தை முடித்து விட்டு ஜெயிலர் 2 படத்திலும் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள நிலையில், அடுத்த ஆண்டு தீபாவளிக்கே அந்த படம் வரும் என்கின்றனர்.

தளபதி விஜய்யின் 69வது படம் அடுத்த ஆண்டு தீபாவளி பண்டிகையை குறிவைத்து இப்பவே அக்டோபர் 2025 என அறிவித்த நிலையில், அடுத்த ஆண்டு தீபாவளிக்கு தளபதி 69 vs ஜெயிலர் 2 கிளாஷ் நடக்கும் என நெட்டிசன்கள் இப்பவே ரசிகர்கள் சண்டையை ஆரம்பித்துள்ளனர்.
செம ஸ்பீடில் சூப்பர் ஸ்டார்: அரசியலுக்கு வரப்போவதில்லை என்கிற முடிவை எடுத்து விட்ட ரஜினிகாந்த் கடைசி காலம் வரை பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸை உயர்த்தும் பணியை சிறப்பாக செய்து வருகிறார். ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்த ஆண்டு வேட்டையன் திரைப்படமும் இண்டஸ்ட்ரி ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கின்றனர். அடுத்து கூலி மற்றும் ஜெயிலர் 2 படங்களிலும் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார்.
மல்டி ஸ்டார் கூட்டணி: சிங்கம் சிங்கிளாத்தான் வரும் என்கிற பஞ்ச் டயலாக் எல்லாம் இனிமேல் பேசி பலனில்லை என்பதை புரிந்துக் கொண்ட அண்ணாத்த ரஜினிகாந்த் பான் இந்தியா அளவில் படங்கள் வெற்றிப் பெற வேண்டும் என்றால் பான் இந்தியா நடிகர்களை இணைத்துக் கொண்டு நடித்தால் தான் உண்டு என்பதை உணர்ந்துக் கொண்டு தொடர்ந்து தனது படங்களை மல்டி ஸ்டார் கூட்டணியுடன் உருவாக்கி வசூல் சாதனை படைத்து வருகிறார்.
தளபதி 69 vs ஜெயிலர் 2 கிளாஷ்: லியோ படத்தில் அவசரப்பட்டதை போல கூலி படத்தை அவசரமாக எடுக்க மாட்டேன் என லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார். அதனால் கூலி படம் எப்போது வெளியாகும் என்பதே இன்னமும் உறுதியாகவில்லை. இந்நிலையில், ரமேஷ் பாலா தனது ட்விட்டர் பக்கத்தில் தளபதி 69 vs ஜெயிலர் 2 கிளாஷ் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு இருக்கும் என பதிவிட்டுள்ளார். இது எந்தளவுக்கு சாத்தியம் என்பது கூலி படம் முடிவடைந்து ஜெயிலர் 2 படமும் முடிவடைந்தால் மட்டுமே தெரியும் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











