தளபதி 69 படத்திற்கு வந்த சிக்கல்.. நிதி நெருக்கடியில் தயாரிப்பு நிறுவனம்.. தாமதமாகுமா படப்பிடிப்பு!

சென்னை: நடிகர் விஜய், பூஜா ஹெக்டே நடித்து வரும் படம் தளபதி 69 படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பின் பாடல் காட்சிக்கான சூட்டிங் நடைபெற்ற வந்தன.ஆனால், தற்போது தளபதி 69 படத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், படப்பிடிப்பு தாமதமாகும் என்பதால்,விஜய் ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.

கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் விஜய் அரசியல் கட்சியை தொடங்கினார். இதைத்தொடர்ந்து கட்சியின் கொடி மற்றும் கொள்கைகள் என அனைத்தையும் முதல் மாநாட்டில் அறிவித்து அனைவரும் வியந்து போகும் அளவிற்கு பேசினார். மாநாடு நடைபெற்று இரண்டு வாரம் ஆன போதும் தற்போதும் அவரின் பேச்சு இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது. விஜய் ரசிகர்களுக்கு அவர் அரசியல் கட்சி தொடங்கியது மகிழ்ச்சியாக இருந்தாலும், சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளது பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

vijay thalapathy 69 pooja hegde 69

தளபதி விஜய்: விஜய் நடித்த கோட் படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் தனது கடைசி படமான தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் ஹெச் வினோத் இயக்கி வரும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். மேலும், பாபி தியோல், கௌததம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், நரைன், பிரியாமணி, மமிதா பைஜூ, மோனிஷா பிளெசி ஆகியோர் கமிட்டாகி உள்ளனர்.அனிருத் இசையமைக்கும் இப்படத்தை கேவிஎன் புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

முழுக்க முழுக்க அரசியல் கதை களத்தை கொண்ட இப்படத்தில் விஜய் அரசியல்வாதியாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது.

தளபதி 69 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கேரளாவில் பிரமாண்டமாக செட் போடப்பட்டு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து சென்னையில் 2ஆவது கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.

நிதி நெருக்கடியில்: இந்நிலையில் தளபதி 69 படத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சினிமா வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, தளபதி 69 படத்தை தயாரிக்கும் கேவிஎன் நிறுவனம் கடுமையாக நெருக்கடியில் சிக்கி உள்ளதாகவும், இதுவரை அந்த நிறுவனம், ரூ.250 கோடிக்கும் அதிகமான பணத்தை கடனாக கொடுத்து இருக்கிறது. அந்த பணமெல்லாம் இன்னும் திரும்ப வராததால், தற்போது அந்த நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதற்காக கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் மதுரையைச் சேர்ந்த சினிமா ஃபைனான்சியரான அன்புச் செழியனிடம் கடன் கேட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. அப்படி பணம் கிடைக்கும் பட்சத்தில் தளபதி 69 படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடிக்கும் என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. ஆனால், இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X