விஜய் பிறந்தநாள் டிபி போஸ்டர் எங்கிருந்து காப்பியடிச்சது தெரியுமா?

By Siva

சென்னை: விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர் ஒருவர் தயாரித்து வெளியிட்டு மற்றவர்கள் அதிக அளவில் ஷேர் செய்த போஸ்டர் டிசைன் ஒரு காப்பி என்பது தெரிய வந்துள்ளது.

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 63 படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அவரின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியிடப்படும் என்று ஏற்கனவே அறிவித்தனர். அதை தவிர படம் குறித்து வேறு எந்த அப்டேட்டும் கொடுக்கவில்லை.

இதையடுத்து விஜய் ரசிகர்கள் அப்டேட் கேட்டு ட்வீட் செய்தார்கள். அதை பார்த்த தயாரிப்பாளர் அர்ச்சனா ஜூன் 19ம் தேதி மாலை 6 மணிக்கு அப்டேட் வெளியிடப்படும் என்று தெரிவித்தார். கடைசியில் பார்த்தால் ஏற்கனவே தெரிந்த விஷயத்தை தான் திரும்பவும் கூறி அதை அப்டேட் என்று தெரிவித்தார்.

அப்டேட்

தளபதி 63 குறித்து மாஸ் அப்டேட் வரும் எதிர்பார்க்க திமுகவை சேர்ந்த ஜெ. அன்பழகனோ அர்ச்சனாவின் ட்வீட்டை பார்த்துவிட்டு, ஃபர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு இன்று வெளியாகும் போன்று என்று ட்வீட் செய்தார். அன்பழகனின் ட்வீட்டை பார்த்த விஜய் ரசிகர்கள் இன்று தலைப்பு மட்டும் வெளியாகட்டும் விடிய விடிய ட்வீட்டி டிரெண்டாக்கிவிட வேண்டும் என்று ஆசையாக இருந்தார்கள். ஆனால் பாவம், அப்டேட் இப்படி புஸ்ஸாகும் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

விஜய் ரசிகர்கள்

அப்டேட் சொதப்பினாலும் மனதை தேற்றிக் கொண்டு ரசிகர் ஒருவர் வடிவமைத்த போஸ்டரை ட்விட்டரில் அதிக அளவில் ஷேர் செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த போஸ்டரை பார்த்த பிற விஜய் ரசிகர்கள், வாவ் என்ன ஒரு வெறித்தனம், மாஸ், சான்ஸே இல்லை என்று கமெண்ட் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். மேலும் அந்த போஸ்டரை விஜய் பிறந்தநாள் கொண்டாட்ட டிபியாகவும் வைத்துள்ளனர்.

சுட்ட போஸ்டர்

விஜய் பிறந்தநாளையொட்டி ரசிகர் ஒருவர் டிசைன் செய்த போஸ்டரை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் அந்த போஸ்டர் சீன கூடைப் பந்தாட்ட வீரர் யாவோ மிங் போஸ்டரில் இருந்து சுட்டதை நெட்டிசன்கள் கண்டுபிடித்துவிட்டார்கள். அடப்பாவிகளா, இதை கூடவா சுட்டுப் போடுவீங்க என்று கிண்டல் செய்கிறார்கள். போஸ்டர் தொடர்பாக ட்விட்டரில் பெரிய சண்டையே நடந்து கொண்டிருக்கிறது.

தல ரசிகர்கள்

நேற்று மாலை வெளியான அப்டேட்டை பார்த்து விஜய் ரசிகர்கள் நொந்து போக தல உள்பட பிற நடிகர்களின் ரசிகர்களோ விஜய் ஸ்டைலில் விழுந்து விழுந்து சிரித்தார்கள். உலகத்திலேயே அப்டேட்டுக்கே அப்டேட் விட்ட ஒரே கோஷ்டி நீங்க தான் என்று அவர்கள் சிரிக்க விஜய் ரசிகர்கள் பார்த்தும் பார்க்காதது போன்று இருந்துவிட்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X