Just In
- 1 hr ago
எனக்கு இப்பவே அந்த மாதிரி ஃபீலிங்கா இருக்கே... ஈஸ்வரன் பட நடிகை லொள்ளு !
- 2 hrs ago
ரெட் சில்லி ஆண்ட்ரியா … இது செம காரம் மச்சி!
- 2 hrs ago
அருண் விஜயின் 31வது படத்தின் படப்பிடிப்பு நிறைவு... டப்பிங் பணி ஆரம்பம்!
- 3 hrs ago
பார்த்ததுமே குப்புன்னு வியர்க்கும்.. கேஜிஎப்-பை தூக்கி சாப்பிடறோம்.. தளபதி 65 லேட்டஸ்ட் அப்டேட்
Don't Miss!
- News
டிரம்ப்பை விட மோசமான விதி.. பிரதமர் மோடிக்கு காத்திருக்கு - ஆக்ரோஷ மோடில் மம்தா பானர்ஜி
- Automobiles
மாருதி, டாடா மோட்டார்ஸை போல் சிஎன்ஜி கார்களை விற்பனைக்கு கொண்டுவரும் ஃபோர்டு!! சென்னையில் சோதனை ஓட்டம்...
- Sports
போற போக்கை பார்த்தா 3வது போட்டியிலயே 400 விக்கெட் சாதனையை செஞ்சுடுவாரோ.. அஸ்வின் கெத்து!
- Finance
1030 புள்ளிகள் வரையில் சென்செக்ஸ் உயர்வு.. குமுதா ஹேப்பி அண்ணாச்சி..!
- Lifestyle
இந்த 4 ராசிக்காரங்களுக்கு லீடரா இருக்க கொஞ்சம்கூட தகுதி இருக்காதாம்... உங்க ராசிக்கு அது இருக்கா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை.!! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சந்தானத்திற்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன விஜய் பட இயக்குநர்.. பிறந்த நாள் பரிசு என்ன தெரியுமா?
சென்னை: சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து பலரையும் தனது நகைச்சுவை திறமையால் சிரிக்க வைத்த சந்தானத்தின் 40வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
தளபதி விஜய்யின் தெறி, மெர்சல், பிகில் திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் அட்லீ, தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் சந்தானத்திற்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, சந்தானம் ரசிகர்களுக்கான பிறந்தநாள் பரிசாக டகால்டி படத்தின் 'கொத்தா கொத்துது போதை' பாடல் புரொமோவை வெளியிட்டுள்ளார்.

ஹேப்பி பர்த்டே
சின்னத்திரையில் லொள்ளு சபாவில் கலக்கிய சந்தானம் வெள்ளித்திரையிலும் முன்னணி காமெடியனாக அசத்தினார். தற்போது ஹீரோ அவதாரம் எடுத்துள்ள சந்தானம் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான தில்லுக்கு துட்டு 2 படம் மிகப்பெரிய கலெக்ஷனை அள்ளியது. 1980ம் ஆண்டு ஜனவரி 21ம் தேதி பிறந்த சந்தானம் இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ரசிகர்கள், பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

டபுள் ட்ரீட்
இந்த மாத இறுதியில் தனது ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் தர சந்தானம் ரெடியாகி வருகிறார். ஜனவரி 31ம் தேதி சந்தானம் நடிப்பில் நீண்ட காலமாக ரிலீசாகமால் இருந்த சர்வர் சுந்தரம் மற்றும் சமீபத்தில் எடுக்கப்பட்ட டகால்டி ஆகிய படங்கள் ஒரே நாளில் ரிலீசாகின்றன.
|
விஜய் பட இயக்குநர்
தளபதி விஜய்க்கு சூப்பர் ஹிட் படங்களையும் பிளாக்பஸ்டர் ஹிட்களையும் கொடுத்த இயக்குநர் அட்லீ, தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் சந்தானத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும், டகால்டி படத்தின் கொத்தா கொத்துது போதை பாடல் வீடியோ புரொமோவையும் வெளியிட்டுள்ளார்.

ராஜா ராணி
அட்லீ இயக்கத்தில் முதல் படமாக வெளியான ராஜா ராணி படத்தில் ஆர்யாவுடன் இணைந்து சந்தானம் செம்ம காமெடி பண்ணியிருப்பார். அட்லீக்கும் சந்தானத்துக்கும் இடையே நீண்ட கால நட்பு உள்ள நிலையில், தற்போது சந்தானத்தின் பாடல் புரொமோவை அட்லீ ரிலீஸ் செய்துள்ளார்.
பிகினி கேர்ள்ஸ்
விஜய் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம், ரித்திக்கா சென் நடிப்பில் உருவாகியுள்ள டகால்டி படத்தில் இடம்பெற்றுள்ள கொத்தா கொத்துது போதை பாடல் புரொமோ வீடியோவில், பிகினி கேர்ள்ஸ் மத்தியில் குடியும் கும்மாளமுமாய் சந்தானம் மற்றும் யோகி பாபு ஆடும் வீடியோ இடம்பெற்றுள்ளது.

காமெடி கியாரண்டி
தமிழ் சினிமாவின் பல முன்னணி ஹீரோக்களை கலாய்த்து காமெடி செய்த சந்தானத்தை டகால்டி படத்தில் யோகி பாபு வச்சு கலாய்த்திருக்கிறாராம். இருவரது காமெடியும் இந்த படத்தில் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் என்றும், காமெடிக்கு நிச்சயம் கியாரண்டி இந்த படம் என்றும் இயக்குநர் விஜய் ஆனந்த் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.