அண்ணி சங்கீதா.. டிரெண்டிங்கை தெறிக்கவிட்ட விஜய் ரசிகர்கள்.. களைகட்டும் திருமண நாள்!

சென்னை: நடிகர் விஜய் மற்றும் சங்கீதாவின் திருமண நாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், #Sangeetha ஹாஷ்டேக்கை தளபதி ரசிகர்கள் டிரெண்டிங்கில் தெறிக்கவிட்டு வருகின்றனர்.

குடும்பத்துடன் நடிகர் விஜய்க்கு பிரச்சனை வந்த நிலையில், அப்பா அம்மாவை பிரிந்து மனைவியுடன் தனியாக வசிக்க ஆரம்பித்தார் விஜய்.

Thalapathy fans trending Sangeetha hashtag and celebrates Vijays wedding anniversary

ஆனால், சமீப காலமாக நடிகர் விஜய்க்கும் சங்கீதாவுக்கும் இடையே பிரச்சை ஏற்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டில் குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறார் சங்கீதா என்றெல்லாம் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், வதந்திகளை நம்பாதீங்க என கல்வி விருது வழங்கிய விழாவில் பேசியதும் அது முற்றிலும் வதந்தி என்றே ரசிகர்கள் நம்பினர்.

விஜய் - சங்கீதா திருமண நாள்: கடந்த 1999ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி நடிகர் விஜய்க்கும் ரசிகை சங்கீதாவுக்கும் திருமணம் நடைபெற்றது. சினிமா ஷூட்டிங்கை பார்க்க வந்த சங்கீதாவுக்கு நடிகர் விஜய்யை பார்த்ததும் பிடித்துப் போக அவரிடம் தனது விருப்பத்தை சொல்ல, இருவரும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர்.

24 ஆண்டுகள் வெற்றிகரமாக திருமண வாழ்க்கையை நடத்தி வரும் இந்த தம்பதியினருக்கு ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா சாஷா என இரு குழந்தைகள் உள்ளனர்.

டிரெண்டிங்கில் சங்கீதா: நடிகர் விஜய்யுடன் சமீப காலமாக தென்படாத சங்கீதா திடீரென சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தை தியேட்டரில் வந்து பார்த்த வீடியோக்கள் டிரெண்டாகின.

நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தை பார்க்க தியேட்டருக்கு சங்கீதா வருவாரா என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. கண்டிப்பாக நடிகர் விஜய்யின் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு சங்கீதா வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நடிகர் விஜய் மற்றும் சங்கீதாவுக்கு தளபதி ரசிகர்கள் திருமண நாள் வாழ்த்துக்களை சொல்ல #Sangeetha ஹாஷ்டெக்கில் விஜய்யுடன் பல முறை சினிமா விழக்களில் அவர் கலந்து கொண்ட வீடியோக்களை ஷேர் செய்து வருகின்றனர்.

Thalapathy fans trending Sangeetha hashtag and celebrates Vijays wedding anniversary

திருமண நாள் சர்ப்ரைஸ் ட்ரீட் இருக்குமா?: நடிகர் விஜய் மற்றும் சங்கீதா இருவரும் தற்போது வெளிநாட்டில் தங்கள் குழந்தைகளுடன் திருமண நாளை கொண்டாடி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கூடிய சீக்கிரமே திருமண நாள் கொண்டாட்ட போட்டோ ஒன்றை வெளியிட்டால், தேவையில்லாத சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இருக்குமே என ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக ஏதாவது திருமண நாள் சர்ப்ரைஸ் ட்ரீட் இருக்குமா என சோஷியல் மீடியாவை சுற்றி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X