Vijay:மாநாட்டுக்குப் பிறகு விஜய் ஆக்‌ஷன் மோடுக்கு போயிட்டாருங்க.. இப்ப என்ன சொல்லி இருக்காரு பாருங்க

சென்னை: நடிகர் விஜய் என்னதான் கடந்த பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி தான் கட்சி தொடங்கியுள்ளதாக அறிவித்தாலும் கிட்டத்தட்ட 8 மாதங்கள் கப்சிப் மோடில்தான் இருந்தார். இது அவர் மீது பல்வேறு விமர்சனங்களை எழச் செய்தது. குறிப்பாக கட்சி தொடங்கிவிட்டு படம் நடிக்கப் போயிட்டாரு, 2026 தேர்தல்தான் இலக்குனு சொல்றாரு, மக்கள் பிரச்னைகளைப் பேசமாட்டாரா? மக்கள் பிரச்னைக்காக களத்திற்கு வரமாட்டாரா என்றெல்லாம கேள்விகள் எழுப்பட்டது. இதனால் மாநாடு நடத்த திட்டமிட்டார்.

செப்டம்பர் மாதமே மாநாடு நடத்த திட்டமிட்டு, அக்டோபர் மாதம் 27ஆம் தேதி மாநாடு நடத்தினார். இப்போது விஜய்யின் அரசியல் நடவடிக்கைகளை மாநாட்டிற்கு முன் மாநாட்டிற்குப் பின் எனப் பிரிக்கும் அளவிற்கு விஜய்யின் நடவடிக்கைகள் முற்றிலும் மாறியுள்ளது.

thalapathy vijay tvk vijay vijay

மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவே, மாநாட்டிற்கு தொண்டர்கள் வருவார்களா என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழுந்தது. ஆனால் மாநாட்டிற்கு தொண்டர்கள் தமிழ்நாடு மட்டும் இல்லாமல், அண்டை மாநிலங்களில் இருந்தும், டெல்லி போன்ற வட மாநிலங்களில் இருந்தும் தொண்டர்கள் வந்திருந்தனர். இதுமட்டும் இல்லாமல், மாநாட்டிற்கு சுமார் 50 ஆயிரம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சுமார் 8 லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். தொண்டர்களை காவல்துறையால் கட்டுப்படுத்தமுடியவில்லை என்றுதான் கூறவேண்டும்.

thalapathy vijay tvk vijay vijay

தனது கட்சியின் முதல் மாநாட்டினை மிகவும் வெற்றிகரமாக நடத்தி முடித்த விஜய், மாநாட்டில் பேசியது பலரது கவனத்தினை ஏற்படுத்தியது. மேலும் பல அரசியல் தலைவர்கள் விஜய்யின் பேச்சுக்கு வரவேற்பு கொடுத்தனர். பல அரசியல் தலைவர்கள் விஜய்யின் பேச்சுக்கு விமர்சனங்களை முன் வைத்தனர். மாநாட்டிற்குப் பின்னர் விஜய்யின் அரசியல் செயல்பாடுகள் மிகவும் தீவிரமாகவே உள்ளது.

முத்துராமலிங்கத் தேவர்: நேற்று முன் தினம், சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜைக்கு அறிக்கை வெளியிட்டிருந்தார். மேலும் அவரது புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதையும் செய்தார். இப்படியான நிலையில், இன்று தமிழ்நாடு மாநிலம் உருவாக்கப்பட்டதைக் கொண்டாடும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

thalapathy vijay tvk vijay vijay

அறிக்கை: அதில், " 1956இல் மொழிவாரி மாகாணங்கள் அமைக்கப்பட்டதன் மூலம், நம்முடைய மாநிலம் நிலப்பரப்பு அளவில், தனி மாநிலமாக உருவெடுத்த தினமே நவம்பர் 1. மதராஸ் மாகாணமாக இருந்த நமது மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டக் கோரி, தியாகி சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் இருந்து உயிரும் துறந்தார். இதைத் தன் இதயத்தில் தாங்கிய, கனிவின் திருவுருவம் பேரறிஞர் பெருந்தகை அண்ணா, தான் ஆட்சிக்கு வந்ததும் சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றி, தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

thalapathy vijay tvk vijay vijay

தமிழ்நாடு தினம்: தமிழர் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்கப் போராட்டம் நடத்திய எல்லைப் போராளிகளின் தியாகங்களையும் இன்னாளில் நினைவு கூருவோம். தியாகப் பெரும் பின்னணியில் தமிழர்களுக்கு என்று ஒரு தனி மாநிலம் பிறந்த இந்த நாளை (நவம்பர் 1) வரலாற்று நினைவுகளுடன் தமிழ்நாடு தினமாகப் போற்றி மகிழ்வோம்" என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X