விஜய் ரசிகர்களே தயாரா? தரமான சம்பவம் லோடிங்.. தளபதி பிறந்த நாளுக்கு ரீ - ரிலீஸ் செய்யப்படும் படங்கள்!

By mohanraj

சென்னை: தமிழ் சினிமாவின் வணிகத்தை உச்சகட்டத்திற்கு கொண்டு வந்து நிறுத்திய நடிகர்களில் தளபதி விஜயின் பங்கு அதிகப்படியானது. அதற்குக் காரணம் அவருக்கு இருக்கக்கூடிய கோடான கோடி ரசிகர்களும் அவர் தேர்ந்தெடுக்கும் கதைக்களமும் மிக முக்கிய அங்கம் வகிக்கின்றது கூறலாம். அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த படமாக இருந்தாலும் படத்துக்கு படம் வேறு வேறு கதைகளத்தை தேர்வு செய்து நடிப்பதில் விஜய் கைதேர்ந்தவர் தான். அதனால்தான் ஒரு கட்டம் வரை காதல் படங்களின் நாயகனாக இருந்த விஜய் தற்போது மாஸ் அதிரடி படங்களின் கதாநாயகனாக வலம் வருகின்றார்.

அரசியல் கட்சி

தனது திரைப்படங்கள் மூலம் சமூக கருத்துகளை பேசும் விஜய் இந்த ஆண்டு பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை துவக்கினார். இதன் மூலம் விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்த தனது ரசிகர்களை தொண்டர்களாகவும் மாற்றியுள்ளார். அரசியல் கட்சி தொடங்கப்பட்டது தொடர்பான அறிவிப்பை வெளியிடும்போது விஜய் 2025இல் நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டபேரவை பொதுத் தேர்தலில் தான் தமிழக வெற்றிக் கழகம் தேர்தலை சந்திக்கும் எனவும், அதற்கு முன்னர் தான் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களில் நடித்து முடித்துவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபடுவதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

Thalapathy Vijay Actor Vijay Vijay Birthday Pokkiri GOAT Venkat Prabhu YSR

விஜய் பிறந்த நாள் கொண்டாட்டம்

நடிகர் விஜய்யின் ரசிகர்கள் விஜய் அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்னரே அவரது மக்கள் இயக்கத்திலிருந்து விஜய் பிறந்த நாள் வரும்போது எல்லாம், பிறக்கும் குழந்தைகளுக்கு தங்கச் செயின் அணிவிப்பது தங்க மோதிரம் அணிவிப்பது அன்னதானம் செய்வது போன்ற பல்வேறு சமூக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் வரும் 22 ஆம் தேதி நடிகர் விஜய் தனது ஐம்பதாவது பிறந்தநாளைக் கொண்டாட உள்ளார். இந்நிலையில் விஜயின் தீவிர ரசிகர்கள், விஜய் மக்கள் இயக்கத்தினர் தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் விஜயின் பிறந்த நாளை மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாட திட்டம் தீட்டி வருகின்றனர்.

Thalapathy Vijay Actor Vijay Vijay Birthday Pokkiri GOAT Venkat Prabhu YSR

ரீ-ரிலீஸ் படங்கள்

இந்நிலையில் விஜய் ரசிகர்களுக்கு திருப்தி அளிக்கும் விதமாக விஜய் பிறந்தநாள் அன்று விஜயின் பகவதி மற்றும் போக்கிரி படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த தகவல் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலில் பகவதி படம் தான் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது என்ற தகவல் வெளியானது. ஆனால் தற்போது போக்கிரி படமும் ரீ ரிலீசுக்கு தயாராக உள்ளது என கூறப்படுகிறது. ஏற்கனவே விஜய்யின் கில்லி திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. கில்லி திரைப்படம் யாரும் எதிர்பார்த்திராத அளவுக்கு ரூபாய் 15 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. இது இதுவரை ரீ ரிலீஸ் செய்யப்பட்ட படங்களின் வசூலை விட பல மடங்கு அதிகம். விஜய் பிறந்தநாளுக்கு பகவதி மற்றும் போக்கிரி திரைப்படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டால் அந்தப் படங்கள் எவ்வளவு வசூலை வாரிக் குவிக்கும் என்ற கேள்வி பலரது மத்தியில் எழுந்துள்ளது.

Thalapathy Vijay Actor Vijay Vijay Birthday Pokkiri GOAT Venkat Prabhu YSR

தி கோட்

விஜய் தற்போது தனது 68 வது திரைப்படத்தில் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் தி கோட் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்டர் வெளியானதுமே ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். இந்த படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். படத்தின் டப்பிங் வேலைகளையும் சமீபத்தில் தான் விஜய் முடித்துக் கொடுத்தார் என்ற தகவலும் வெளியானது. இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். தி கோட் படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. தி கோட் படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். படத்தின் சி.ஜி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக உள்ளது என பட குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.

Thalapathy Vijay Actor Vijay Vijay Birthday Pokkiri GOAT Venkat Prabhu YSR

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X