Vijay Birthday Wishes: தளபதிக்கு தாலாட்டு நாள்.. வரிசைகட்டி வாழ்த்து சொன்ன பிரபலங்கள்!

சென்னை: நடிகர் விஜய் இன்று அதாவது ஜூன் 22ஆம் தேதி தனது 51வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு அவரது ரசிகர்கள் தொடங்கி திரைப்பிரபலங்கள், அவரது கட்சி நிர்வாகிகள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். விஜய் தற்போது நடித்து வரும் ஜன நாயகன் படக்குழு தரப்பில் இருந்து கிளிம்ஸ் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் விஜய்க்கு வாழ்த்து சொன்ன திரைப் பிரபலங்கள் யார் யார் என்பது குறித்தும் அவர்களின் வாழ்த்து குறித்தும் இந்த தொகுப்பில் காணலாம்.

நடிகர் ராஜு மோகன் விஜய் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது பதிவில், " உங்களை பார்க்க 8 வயது குழந்தையாக இருந்த போது தியேட்டர் சீட்டில் எட்டி எட்டிப் பார்த்துள்ளேன். அதேபோல் இப்போது உங்கள் கைகள் எனது தோள்களைச் சுற்றிக் கொண்டு உள்ளது. உங்கள் மீதான எனது பிரியத்தைச் சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை. பிறந்தநாள் வாழ்த்துகள் தலைவா விஜய் அண்ணா" என பதிவிட்டுள்ளார். நடிகர் யோகிபாபு வாரிசு படத்தில் விஜய் தனக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Thalapathy Vijay 51st Birthday Cinema Celebrities Wishes Details
Photo Credit:

அதேபோல் நடிகையும் பாஜக நிர்வாகியுமான அலிசா அப்துல்லா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய் உடன் முன்னர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்து குறிப்பில், " பிறந்தநாள் வாழ்த்துகள் விஜய் சார். உங்களுக்கு எப்போதும் அளவற்ற மகிழ்ச்சியும், நல்ல ஆரோக்கியமும் கிடைக்க வாழ்த்துகள். நீங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றுக் கொண்டிருக்கும் வாழ்த்துகள்" என பதிவிட்டுள்ளார்.

விக்னேஷ் சிவன்: அதேபோல் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ள வாழ்த்துக் குறிப்பில், " இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் விஜய் சார். சுற்றியுள்ள அனைவரிடத்தில் இருந்தும் இவ்வளவு அன்பைப் பெறுவது என்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல. அந்த வகையில் நீங்கள் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்ட மனிதர். நீங்கள் அன்பை திருப்பிச் செலுத்த எடுத்திருக்கும் முடிவும் அதன் உள்நோக்கமும் பாராட்டக்கூடியது. உங்களின் உழைப்பும் அர்பணிப்பும் ஜன நாயகன் படத்திற்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுக்க வாழ்த்துகள். எதிர்காலத்திலும் உங்களுக்கு இந்த அன்பும் வெற்றியும் கிடைக்க வாழ்த்துகள். காட் பிளஸ் யூ" என தெரிவித்துள்ளார். இவரது வாழ்த்தும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வாழ்த்தோடு விக்னேஷ் சிவன் தனது மகனுடன் சேர்ந்து விஜய்யோடு எடுத்துக் கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X