Jana Nayagan: பின்னாடி சூரியன்.. முன்னாடி தளபதி விஜய்.. ஜன நாயகன் ‘First Roar' அப்டேட் பார்த்தீங்களா!

சென்னை: தளபதி விஜய் தனது கடைசி படத்தில் மிகவும் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியா மணி என மொத்தம் மூன்று கதாநாயகிகள் நடித்து வருகிறார்கள். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. நாளை மறுநாள் அதாவது ஜூன் 22ஆம் தேதி தனது 51 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் படக்குழு சார்பில் ஏதாவது அப்டேட் வருமா என காத்துக் கொண்டு இருந்த ரசிகர்களுக்கு கே.வி.என் நிறுவனம் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.

நடிகர் விஜய் தனது 69 வது படமான ஜன நாயகன் படத்துடன் திரையுலகில் இருந்து விலகுவதாக ஏற்கனவே தெரிவித்துவிட்டார். இதுமாத்திரம் இல்லாமல் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி அவர், இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டேன் எனவும் 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் இருந்து முழுநேர அரசியலில் களமிறங்க போவதாக தெரிவித்துள்ளார். இது ரசிகர்களுக்கு வருத்தத்தைக் கொடுத்தாலும், விஜய்யின் அரசியல் வருகைக்காக காத்துக் கொண்டு இருந்தவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது.

Thalapathy Vijay 51st Birthday Jana Nayagan Update First Single Will Release 12 AM Jun 22nd Fans Very Happy
Photo Credit:

ஜன நாயகன் படம் அறிவித்ததில் இருந்து பலரும் மகிழ்ச்சியில் திளைத்து விட்டார்கள். அதுவும் இயக்குநர் ஹெ. வினோத் என்றதும் படம் கன்ஃபார்ம் ஹிட் என்ற அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். விஜய்யின் கடைசி படம் என்பதால் வசூல் ரீதியாக படம் வெற்றி பெற்றுவிடும். ஆனால் அதையும் கடந்து படம் கதை மற்றும் திரைக்கதையில் தரமான படமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஹெச். வினோத் பார்த்து பார்த்து படத்தை உருவாக்கி வருகிறார்.

முதல் பாடல்: இந்நிலையில் நாளை மறுநாள் விஜய்யின் பிறந்த நாள் என்பதால் படக்குழு சார்பில் அப்டேட் கொடுக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. படத்தின் முதல் பாடல் 22ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளார்கள். மேலும் இந்த அப்டேட்டை ரசிகர்கள் டிரணெடாக்கி வருகிறார்கள். இந்த அப்டேட் தொடர்பாக படக்குழு வெளியிட்டுள்ள போஸ்டரில் விஜய்க்கு பின்னால் சூரியன் இருப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளதால், இந்த முதல் பாடல் சமூக கருத்துகள் மற்றம் அரசியல் அடங்கிய பாடலாக அது இருக்கலாம் என கூறப்படுகிறது.

விஜய் பாடியுள்ளாரா? : ஜன நாயகன் படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமம் கிட்டத்தட்ட ரூபாய் 75 கோடிகளில் இருந்து ரூபாய் 80 கோடிகள் வரை விற்பனை செய்யப்பட்டுவிட்டதாகவும், தமிழ் திரையுலகிலேயே அதிக விலைக்கு வெளிநாட்டு உரிமம் விற்பனை செய்யப்பட்ட தமிழ் படம் இதுதான் எனவும் இணையத்தில் பலரும் பேசி வருகிறார்கள். விஜய்யின் பிறந்த நாளில் படக்குழு தனது முதல் பாடலை வெளியிடவுள்ளதால் ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் உள்ளார்கள். குறிப்பாக இந்த பாடலை அனிருத் பாடியுள்ளாரா அல்லது விஜய் பாடியுள்ளாரா அல்லது இருவரும் இணைந்து பாடியுள்ளார்களா என்ற கேள்வியை பலரும் எழுப்பி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X