என்ன கொடுமை சார் இது.. இணையத்தில் லீக்கான லியோ படம்.. தலையில் துண்டு போட்ட படக்குழு!

சென்னை: லியோ படம் இணையத்தில் இன்று காலை 9 மணிக்கு வெளியான நிலையில் படம் வெளியான சில மணி நேரத்திலேயே HD பிரிண்ட் இணையத்தில் வெளியாகி உள்ளது.

லியோ படம் உலகம் முழுவதும், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், ஆகிய ஐந்து மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக இன்று வெளியானது.

Thalapathy Vijay and filmmaker Lokesh Kanagarajs leo movie is leaked online in hd print

இப்படத்தில் விஜய், த்ரிஷா, பிரியா ஆனந்த், ஆக்ஷன் கிங் அர்ஜுன், சஞ்சய் தத், மிஷ்கின், கவுதம் மேனன், சாண்டி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தில் சாண்டி சைக்கோவாக நடித்துள்ளார்.

9 மணிக்கு ஸ்பெஷல் ஷோ: பொங்கலுக்கு வெளியான வாரிசு, துணிவு படத்தின் போது அசம்பாவிதங்கள் நடைபெற்றதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, லியோ படத்தின் நான்கு மணி காட்சி மற்றும் ஏழு மணி காட்சிகள் தமிழகத்தில் திரையிடப்படாது என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனால் தமிழகத்தில் இன்று ஒன்பது மணிக்கு முதல் காட்சி அனைத்து திரையரங்குகளிலும் திரையிடப்பட்டது.

கள்ளச்சந்தையில் டிக்கெட்: இந்த படத்தை சென்னை குரோம்பேட்டையில் உள்ள வெற்றி தியேட்டரில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ரசிகர்களோடு ரசிகராக படம் பார்த்தார். அவரோடு, அனிருத் மற்றும் கீர்த்தி சுரேஷூம் படம் பார்த்தனர். அதே வெற்றி தியேட்டரில் 150 ரூபாய் டிக்கெட்1800 ரூபாய்க்கு கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்பட்டது.

Thalapathy Vijay and filmmaker Lokesh Kanagarajs leo movie is leaked online in hd print

இணையத்தில் லீக்கான HD பிரிண்ட்: ஆனால் படம் வெளியான சில மணி நேரத்திலேயே HD பிரிண்ட் இணையத்தில் வெளியாகி உள்ளது.பேருந்தில் ஒருவர் லியோ படத்தை செல்போனில் பார்த்து வரும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் பெங்களுர்ல லியோ பப்ளிக்க ரிவ்யூ எடுத்த முடிச்சிட்டு வரேன், பஸ்ல ஒருத்தன் பார்த்திட்டு இருக்கார் என்று பதிவிட்டுள்ளார்.

தயாரிப்பாளர் தலையில் துண்டு: அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி படகுழுவினரை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. லியோ படம் ஆயிரம் கோடி வசூல் செய்யும் என்று தயாரிப்பாளர் கணக்கு போட்டு வைத்திருந்தார். அவர் தலையில் இடியை இறக்கும் வகையில் லியோ முழுபடம் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால், தியேட்டரில் வரும் ரசிகர்களின் எண்ணிக்கை குறையக் கூடும் என படக்குழுவினர் கலக்கத்தில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X