Leo : லியோ படத்தின் மொத்த பட்ஜெட் எவ்வளவு தெரியுமா? அடேங்கப்பா.. அப்போ சம்பவம் கன்பார்ம்!

சென்னை : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தின் மொத்த பட்ஜெட் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

விக்ரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரசிகர்களின் ஒட்டுமொத்த பார்வையும் தளபதி 67 திரைப்படத்தின் மீது இருந்ததால், தொடர்ந்து அப்டேட் கேட்டு நச்சரித்து வந்தனர்.

இதனால், ரசிகர்களுக்கு ஒரே நாளில் மொத்த அப்டேட்டையும் கொடுத்துவிட்டு, காஷ்மீரில் நிம்மதியாக படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.

Thalapathy Vijay and Lokesh kanagaraj Leo movie total budget

லோகேஷ் கனகராஜ் : மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ்ஜின் ஐந்தாவது படத்திற்கு லியோ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விஜய், திரிஷா, கௌதம் வாசுதேவ் மேனன், ஆக்ஷன் கிங் அர்ஜூன், மன்சூர் அலி கான், சாண்டி மாஸ்டர், மிஸ்கின், மலையாள நடிகர் மேத்யூ, பிரியங்கா ஆனந்த், சஞ்சய் தத் ஆகியோர் நடித்துள்ளனர். 14 ஆண்டுகளுக்கு பிறகு திரிஷா விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளார்.

Bloody sweet : இப்படத்தில் இருந்து வெளியான டைட்டில் ப்ரோமோவில், நடிகர் விஜய் பேசிய Bloody sweet' என வசனம் இணையத்தையே அலறவிட்டு மிகப்பெரிய அளவில் டிரெண்டானது. தளபதியின் ரசிகர்கள் இந்த வீடியோவை வேறலெவலில் வைரலாக்கினார்கள். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக காஷ்மீரில் கடும் குளிருக்கு மத்தியில் நடந்து முடிந்தது.

Thalapathy Vijay and Lokesh kanagaraj Leo movie total budget

விறுவிறுப்பான படப்பிடிப்பு: தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது, இன்னும் 60 நாட்கள் படப்பிடிப்பு பாக்கி இருப்பதாகவும் விரைவில் படப்பிடிப்பை முடித்துவிட்டு போஸ்ட் புரொடக்சன் பணிகளை விரைவில் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. லியோ படம் ஆயுத பூஜைக்கு வரும் அக்டோபர் மாதம் 19ந் தேதி வெளியாக உள்ளதால், லியோ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

லியோ மொத்த பட்ஜெட் : இந்நிலையில் லியோ படத்தின் மொத்த பட்ஜெட் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. அதில், லியோ திரைப்படத்தின் மொத்த பட்ஜெட் 350 கோடியிலிருந்து 375 கோடி ரூபாய் வரை இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் அதிக அளவு பட்ஜெட்டில் உருவாகி வரும் படம் இது என்பதாலும், சிறப்பு வேடத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த கதாபாத்திரம் ரோலெக்ஸ் அளவுக்கு அழுத்தமான வேடமாக இருக்கும் என்று கூறப்படுவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏகத்திற்கும் எகிறி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X