Vijay: தயாரிப்பாளர் டி.சிவா மகள் ரிசப்ஷன்.. விழாவே மாஸானது.. பட்டு வேட்டி சட்டையில் களமிறங்கிய விஜய்
சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களில் முன்னணியிலுள்ள டி. சிவா அவர்களின் மகளின் திருமண வரவேற்பு விழா சென்னையில் மிகவும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில், தவெக தலைவரும், நடிகருமான விஜய் கலந்து கொண்டது மணமக்களுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
தயாரிப்பாளர் டி. சிவாவின் மகள் தக்ஷினாவிற்கும், சந்தீப் பிரபாகர்க்கும் நவம்பர் 27ந் தேதி தஞ்சாவூரில் உள்ள தமிழரசி திருமண மண்டபத்தில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் ராதிகா, சரத்குமார், பிரபு, ஜெய், விமல், மிர்ச்சி சிவா, வைபவ் மற்றும் பல முக்கிய திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

டி சிவா மகள் திருமண வரவேற்பு: இந்நிலையில், தக்ஷினா, சந்தீப் பிரபாகர் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று, எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை அரங்கில் நடைபெற்று வருகிறது. இதில், விஜய் வழக்கமான சிம்பிள் மற்றும் எலெகண்ட் ஸ்டைலில், பட்டு வேட்டி மற்றும் சட்டை அணிந்து கலந்துகொண்டார். விஜயின் இந்த பாரம்பரிய தமிழ் உடை ரசிகர்கள் மற்றும் விருந்தினர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அவரைக்காண ரசிகர்களும், நிகழ்ச்சியில் இருந்த பிரபலங்களும் ஆர்வத்துடன் வரவேற்று புகைப்படங்கள் எடுக்க முயன்றனர்.
மாஸ் என்ட்ரி கொடுத்த விஜய்: மணமக்களை வாழ்த்திய விஜய், மணமக்களுக்கு பூங்கொத்து கொடுத்து அவர்களை வாழ்த்தினார். அப்போது மணமக்கள் விஜய்யின் காலில் விழுந்து வாழ்த்து பெற்றனர். இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. ரசிகர்கள், "விஜயின் எளிமை அற்புதம்", "சூப்பர் ஸ்டார் தோற்றம்" போன்ற கேப்ஷன்களுடன் பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர். அந்த வரவேற்பு நிகழ்ச்சியில் சினிமா பிரபலங்கள், அரசியல் வட்டாரத்தில் உள்ள முக்கிய புள்ளிகள் என அனைவரும் கலந்து கொண்டனர்.


Click it and Unblock the Notifications











