நேற்று சென்னையை அதிரவிட்ட தல.. இன்று கோவையில் கொடி நாட்டும் தளபதி.. தவெகவினரால் ஸ்தம்பிக்கும் கோவை!

கோவை: தளபதி விஜய் தான் இன்றைக்கு ட்ரெண்டிங். அவரது கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்ள இன்றைக்கு அதாவது ஏப்ரல் 26 ஆம் தேதி கோவை வந்துள்ளார். கோவை வந்தவருக்கு விமான நிலையத்திலேயே அவரது ரசிகர்களும் கட்சித் தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்துள்ளார்கள். இது தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த கலந்தாய்வுக் கூட்டம் இன்று மற்றும் நாளை என இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது.

காலை சுமார் 8 மணி அளவில் சென்னையில் இருந்து கோவைக்கு புறப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், காலை சுமார் 9 மணி அளவில் கோவைக்கு வந்து சேர்ந்தார். அவரது கட்சி நிகழ்ச்சிக்காக இரண்டாவது முறையாக சென்னையை விட்டு வெளியே வந்துள்ளார். இதற்கு முன்னதாக, கட்சியின் முதல் மாநில மாநாட்டில் பங்கேற்க விழுப்புரத்தில் உள்ள விக்கிரவாண்டிக்கு வந்தார். அதன் பின்னர், தற்போது தான் கோவைக்கு வந்துள்ளார். இதற்கு முன்னர் நடைபெற்ற கட்சி ஆலோசனைக் கூட்டங்கள் அனைத்தும் சென்னையில் தான் நடைபெற்றது. இது இல்லாமல் சமூக பிரச்னைகளுக்காக தூத்துக்குடி, கள்ளக்குறிச்சி, பரந்தூர் ஆகிய இடங்களுக்கு சென்றுள்ளார். வேங்கை வயல் செல்ல திட்டமிட்டதாக கூறப்பட்ட நிலையில், இறுதியாக அவர் அங்கு செல்லவில்லை.

Thalapathy Vijay Attends TVK Booth Committee Cadars Meeting at Kovai

விஜய்: கோவை மட்டும் இல்லாமல் வரும் காலங்களில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்யவுள்ளார். அடுத்த ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அவரது பிரச்சாரம் கிட்டத்தட்ட இந்த நிகழ்ச்சியில் இருந்தே தொடங்கிவிட்டது என்று கூறப்படுகிறது. வரும் காலங்களில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக பயணம் செய்ய உள்ளார் எனவும் கூறப்படுகிறது.

Thalapathy Vijay Attends TVK Booth Committee Cadars Meeting at Kovai

ஸ்தம்பித்த கோவை: இன்று கோவையில் நடக்கும் பூத் கமிட்டி உறுப்பினர்கள் கலந்தாய்வுக் கூட்டத்தில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம் , கரூர் மற்றும் நாமக்கல் என மொத்தம் 7 மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள் கோவையில் கூடியுள்ளார்கள். இந்த நிகழ்வுக்காக முன்கூட்டியே காவல்துறையிடம் மற்றும் கோவை மாநகராட்சியிடம் அனுமதி பெறப்பட்டு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றது. இந்நிலையில் இன்று நிகழ்வு நடைபெறவுள்ளதால் 7 மாவட்ட நிர்வாகிகள் மற்றும் விஜய் ரசிகர்களால் மொத்த கோவையுமே ஸ்தம்பித்துப் போயுள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Thalapathy Vijay Attends TVK Booth Committee Cadars Meeting at Kovai

தல & தளபதி: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை வரவேற்க அவரது கட்சித் தொண்டர்களும் ரசிகர்களும் கோவை விமான நிலையத்தில் கூடியுள்ளார்கள். கோவை விமான நிலைய வாசலில் எங்கு திரும்பினாலும் தவெகவினர் தான் எனக் கூறும் அளவுக்கு உள்ளார்கள். விஜய் இன்றைய நிகழ்வில் என்ன பேசவுள்ளார் என்பது பலருக்கும் ஆவலான விஷயமாக உள்ளது. அவர் உரையாற்றிவிட்டு மட்டும் போகவுள்ளாரா அல்லது, தனது நிர்வாகிகளுடன் பேசவுள்ளாரா, அவர்களின் கேள்விக்கு பதில் அளிக்கவுள்ளாரா என்ற கேள்வி பலருக்கும் உள்ளது. நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டியைப் பார்க்க நேரடியாக மைதானத்திற்கு சென்ற தல அஜித்தால் சென்னை ஸ்தம்பித்தது போல், இன்று தளபதி விஜய் தனது தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி உறுப்பினர்கள் கலந்தாய்வு கூட்டத்திற்காக கோவைக்கு வந்து, கோவையை ஸ்தம்பிக்க வைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X