தளபதி விஜய் பிகில் ரெகார்ட் பிரேக்...படம் 3 மணிநேரமாம் - ரசிகர்கள் கொண்டாட்டம்

Recommended Video

Bigil Movie Gets U/A Certificate : பிகில் Censor Board Certificate

சென்னை: அட்லீ-விஜய் கூட்டணியில் உருவாகி இருக்கும் பிகில் படத்திற்காக தெறிக்க விடும் எதிர்பார்ப்புடன் மிக மிக ஆவலாக காத்துக்கொண்டிருக்கிறார்கள் இளைய தளபதி ரசிகர்கள். பெண்களுக்கான கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தில், விஜய் கால்பந்து கோச்சாக நடித்துள்ளார். நயன்தாரா, யோகி பாபு, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் இப்படத்தை மிக பிரமாண்டமாக தயாரித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் இப்போதே சூப்பர் ஹிட்டாகி விட்டன. விஜய் நடித்த படங்களிலேயே அதிக கால்ஷீட் கொடுத்து அதிக பட்ஜெட்டில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில்.

Thalapathy Vijay Bigil Record Breaking!

இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு என்பது படத்தின் டைட்டில் வெளியாவதற்கு முன்பிருந்தே இருந்து வருகிறது. அதுவும் படத்தின் ட்ரைலர் வெளியானதும் சுமார் 25 மில்லியன் வியூஸ்களையும், 2 மில்லியன் லைக்குகளையும் தாண்டி போய் கொண்டே இருக்கிறது. இதுவே தமிழ் சினிமாவில் மிக பெரிய ரெகார்ட். இந்த திரைப்படத்தின் ட்ரைலர் அனைவரையும் கவர்ந்துள்ளது. படத்தின் காட்சிகள், விஜய்யின் கெட்டப், பின்னணி இசை இவை அனைத்தும் ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் மேலும் தூண்டும் வண்ணம் இருந்து வருகிறது.

படத்தின் வெளியீடு பற்றி பல தகவல்கள் வந்தாலும், படம் தீபாவளி அன்று வெளியாகுமா அல்லது அதற்கும் முன்னரே வெளியாகுமா என்பதில் பல சந்தேகங்கள் ரசிகர்களிடம் இருந்தது. அது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 25ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியிடப்படும். ஆனால் அதற்கு முன்னரே 24ஆம் தேதி படத்தின் ப்ரிவியூ காட்சிகள் வெளிநாடுகளில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் மெயின் சஸ்பென்ஸ் இது தான். அதாவது படத்தின் ரன்னிங் டைம் 2 மணிநேரம் 55 நிமிடங்கள் என்ற தகவல் வெளியாகி விஜய் ரசிகர்களை கொண்டாட்டத்தில் குதிக்க வைத்துள்ளது. சுமார் 3 மணி நேரம் என்பதால் ரசிகர்கள் பேரானந்தத்தில் உள்ளனர்.

சமீபகாலமாக விஜய் நடித்த தெறி, மெர்சல், சர்க்கார், பைரவா போன்ற திரைப்படங்கள் என அனைத்தும் 2 மணி நேரம் 30 நிமிடங்கள் தான் இருந்தன. ஆனால் பிகில் திரைப்படம் அந்த ரெகார்ட்களையும் முறியடித்து 2 மணிநேரம் 55 நிமிடங்களாக கூடியிருக்கிறது என்பது மற்றுமொரு ரெகார்ட். இந்த தகவல் வெளியிடப்பட்டவுடன் மிகவும் பரபரப்பாக பரவி வைரலாகி எதிர்பார்ப்பை கூட்டிகொண்டே போகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X