பல தடைகளை தகர்த்து வென்ற நாயகன்.. பாக்ஸ் ஆபீஸ் கிங்.. என்றும் விஜய் !

சென்னை : பல தடைகளையும், பல அவமானங்களையும் தகர்த்து தற்போது பாக்ஸ் ஆபிஸ் கிங்காக உலக அளவில் பல படங்களின் மூலம் அதிரவைக்கும் தளபதி விஜய்-க்கு இன்று பிறந்தநாள்.

Recommended Video

Actor Sathish Tribute to Thalapathy Vijay | அப்படி போடு - வாத்தி Coming

விஜய்யின் பிறந்தநாளை அவர் ரசிகர்கள் மட்டுமில்லாமல் உலகெங்கிலும் உள்ள பல கோடி மக்கள் திருவிழா போல கொண்டாடி வருகின்றனர்.

சில வாரங்களாகவே களைகட்டிய இந்த பிறந்தநாள் கொண்டாட்டம் ஜூன் 22 ஆகிய இன்று நடிகர் விஜய் தனது 46 வது பிறந்தநாளை மிகச் சிறப்பாக இறைவனின் அருளால் ரசிகர்களின் துணையால் கொண்டாடி வருகிறார்.

வெற்றி நடைபோட்டு

வெற்றி நடைபோட்டு

தமிழ் சினிமாவில் மிகப் பெரிய நட்சத்திரமாக ஜொலித்து வரும் நடிகர் விஜய் பல வகையான படங்கள் பல வகையான கதாபாத்திரங்கள் மூலம் தனக்கென பல கோடி ரசிகர்களை கொண்டு இன்றும் வெற்றியுடன் கெத்தாக வெற்றி நடைபோட்டு வருகிறார்.

அவமானங்கள்

அவமானங்கள்

ஆரம்ப காலங்களில் இவர் நடிக்க வந்த புதிதில் இவரை அவமானப்படுத்தாதவர்கள் மிகச் சிலரே. அவ்வாறு பல அவமானங்களை தாண்டி ஒவ்வொரு நிலையிலும் தன் மனதையும் உடலையும் உறுதியாக வைத்துக்கொண்டு பல்வேறு வகையான படங்களில் நடித்து காதல் நாயகனாகவும், பின் ஆக்சன் கிங்காகவும் தன்னை ஒவ்வொரு படத்திலும் நிலைப்படுத்தி தன்னுடைய ரசிகர்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை அறிந்து அதை மட்டுமே தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

சற்றும் தளராது

சற்றும் தளராது

1984 இல் குழந்தை நட்சத்திரமாக தொடங்கிய இவரது சினிமா பயணம், நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக தன்னுடைய சினிமா வாழ்க்கையை தொடங்கிய இவர், ஆரம்ப காலகட்டங்களில் கண்ட அவமானங்களும், கேலி, கிண்டல்களும் பல ஆயிரம். இவர் ஆரம்பத்தில் நடித்த படங்கள் அனைத்தும் சுமார் ரகம் இல்லையென்றால் தோல்வி படங்கள் என்று இருந்து வந்த நிலையில் சற்றும் தளராது இவர் எடுத்து வைத்த அடுத்தடுத்த அடிகளால் தான் இப்போது யாரும் அசைக்க முடியாத சூரியனைப் போன்று ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.

கொண்டாடி

கொண்டாடி

இந்நிலையில் இவரது பிறந்தநாளை உலகெங்கிலுமுள்ள ரசிகர்கள் வெகுவிமர்சையாக ஒரு வாரத்திற்கு முன்பிலிருந்தே திருவிழாக்கள் போல கொண்டாடி வரும் நிலையில் பல திரைப் பிரபலங்களும் இவருக்கு மிகப் பெரிய ரசிகராக இருந்து வருகின்றனர்.

விஜய்க்காக

விஜய்க்காக

இவரது பிறந்தநாளை முன்னிட்டு பலரும் பலவகையான மாஸ் போஸ்டர்களையும், விஜய்க்காக சிறப்பாக உருவாக்கப்பட்ட பிறந்தநாள் பாடல்கள் என அவரது ரசிகர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் இவ்வாறாக இவருக்கு தங்களின் அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

குவிந்து வருகின்றன.‘

குவிந்து வருகின்றன.‘

இந்நிலையில் ஜூன் 22 ஆம் தேதியான இன்று தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வரும் தளபதி விஜய் தனது 46வது பிறந்தநாளை மிக சிறப்பாக தனது குடும்பத்தாருடன் கொண்டாடி வரும் வேளையில் பல ஊர்களிலும் பல நாடுகளிலும் இருந்து இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

அன்புத்தளபதி

அன்புத்தளபதி

பொதுவாக விஜய்யின் பிறந்தநாள் அன்று இவரது ரசிகர்கள் மிகப்பிரம்மாண்டமாக இவரது படங்களை திரையில் கண்டு ஆரவாரப்படுத்தி கொண்டாடி வந்த நிலையில், இந்த ஆண்டு பலரும் தங்களது அன்பான வாழ்த்துக்களை அன்பு தளபதி விஜய்க்கு தெரிவித்து மகிழ்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X