8 ஏக்கரில் சாய் பாபா கோவில்.. அம்மாவுக்காக விஜய் செய்த செயல்..தீயாய் பரவும் வீடியோ!

சென்னை: நடிகர் விஜய் தனது அம்மா ஷோபாவுக்காக புதிதாக சாய்பாபா கோயிலை கட்டிக்கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நேற்று சாய்பாபா கோவிலில் சாமி தரிசனம் செய்தது போன்ற புகைப்படம் வெளியான நிலையில், தனது அம்மாவுடன் சேர்ந்து கும்பாபிஷேகம் செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்நிலையில், நேற்று நடிகர் விஜய் சாய் பாபா கோயிலுக்கு வருகை தந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்தப் புகைப்படத்தினை தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தன் இணைய பக்கத்தில் பகிர்ந்த நிலையில், இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் லைக்ஸ் அள்ளியது.

Thalapathy Vijay built Sai Baba Temple for Mother Shoba

நடிகர் விஜய்: அப்பா எஸ்.ஏ. சந்திர சேகர் இயக்கத்தில் உருவான நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகனாக தனது பயணத்தை தொடங்கிய விஜய். லவ்வர் பாய், ஆக்‌ஷன் ஹீரோ, வசூல் நாயகன் என அடுத்தடுத்து தனது திறமையால் வளர்ந்து இன்று ஒரு அரசியல் கட்சியின் தலைவர் என்ற நிலையை எட்டியுள்ளார். இவர் தனது அப்பாவின் தயவில் தான் சினிமாவிற்கு வந்தார் என்றாலும், இந்த உச்சத்தை கொடுவது அவ்வளவு சாதாரணமானது அல்ல.

மக்கள் இயக்கம்: அவ்வப்போது தனது அரசியல் கருத்தை இசை வெளியீட்டு விழாவில் பேசி வந்த விஜய், தனது ரசிகர் மன்றத்தை 2009ஆம் ஆண்டு மக்கள் இயக்கமாக மாற்றினார். அந்த வகையில், அடிக்கடி இயக்க நிர்வாகிகளைச் சந்தித்து வந்த விஜய், கடந்த ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதிவாரியாக சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கப் பரிசு வழங்கி தனது அரசியல் பயணத்திற்கு அச்சாணி போட்டார்.

Thalapathy Vijay built Sai Baba Temple for Mother Shoba

தமிழக வெற்றிக்கழகம்: இதையடுத்து பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கினார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும், யாருக்கும் ஆதரவுமில்லை என்றும் அறிவித்த விஜய், 2026ஆம் ஆண்டு தேர்தல் தனது இலக்கு என்றார். தீவிர அரசியலுக்கு பின் சினிமாவில் இருந்து விலகுவேன் என அறிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்து உள்ளனர்.

அம்மாவுக்காக கோவில்: இந்நிலையில், நடிகர் விஜய் சென்னையில் உள்ள சாய் பாபா கோயிலில் தரிசனம் செய்த புகைப்படம் இணையத்தில் வைரலான நிலையில், அந்த கோவிலை தனது அம்மா ஷோபாவுக்காக விஜய் கட்டிக்கொடுத்துள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. சென்னை, கொரட்டூரில் 8 கிரவுண்ட் நிலத்தில் சாய் பாபா கோயிலை கட்டிக் கொடுத்துள்ளார் என்றும், இந்தக் கோயிலின் கும்பாபிஷேகம் கடந்த ஃபிப்ரவரி மாதம் 10ஆம் தேதி நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. அந்த கும்பாபிஷேகத்தில் நடிகர் விஜய் தனது அம்மாவுடன் கலந்து கொண்டுள்ள வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் அதிக அளவில் ஷேர் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X