விபத்தில் சிக்கிய விஜய் கார்.. விமான நிலையத்தை விட்டு வெளியே வந்த சில நிமிடங்களில்.. விபத்து நடந்தது எப்படி?
சென்னை: மலேசியாவில் நடைபெற்ற ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவை வெற்றிகரமாக முடித்துவிட்டு, சென்னைக்கு நேற்று இரவு திரும்பினார் விஜய். மலேசியாவில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தவரை வரவேற்க அவரது ரசிகர்கள், கட்சித் தொண்டர்கள் என பலரும் காத்துக் கொண்டு இருந்தார்கள்.
இப்படி இருக்கும்போது, விமான நிலையத்தில் இருந்து வெளியேறி, அவரது காருக்குச் செல்லும்போது, நெரிசலால் நிலை தடுமாறி கீழே விழுந்தார் தளபதி விஜய். அவர் கீழே விழுந்தது, பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உடனே அவரைத் தூக்கிய பாதுகாப்பு அதிகாரிகள், அவரை காருக்குள் அனுப்பி வைத்தனர். இப்படி இருக்கும்போது விமான நிலையத்தில் இருந்து காரில் வெளியே வந்த சில நிமிடங்களில் விஜயின் கார் விபத்திற்கு உள்ளாகி உள்ளது.

விபத்து: அதாவது, விஜய் சென்ற காரில் விஜயுடன் அவரது பாதுகாவலர், ஓட்டுநர் உள்ளிட்டோர் இருந்தார்கள். இப்படி இருக்கும்போது, விமான நிலையத்தில் இருந்த கூட்டத்தை கடந்து வெளியே வந்தபோது, ரிவேர்ஸில் வந்து கொண்டு இருந்த கார், விஜய் வந்த காரின் மீது லேசாக உரசியது. இதனால் விஜய் காரின் இண்டிகேட்டர் பகுதி, உடைந்து சேதமானது என்று கூறப்படுகிறது. சிறிய வகை விபத்து என்பதால், விஜய், அவரது பாதுகாவலர், டிரைவர் உள்ளிட்டோருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. இந்த தகவல் விஜய் ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
தள்ளி விடப்பட்டாரா? இந்த விபத்துக்கு முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் விஜய் சரிந்து விழுந்தார். அதாவது, விஜய் வருவதை அறித்த அவரது ரசிகர்களும் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்தவர்களும், விமான நிலையத்தில் சூழ்ந்து கொண்டாடர்கள். அவர்களுக்கு மத்தியில் சிக்கிக் கொண்ட தளபதி விஜய், தனது காருக்கு செல்வதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது. நெரிசலில் விஜய் சரிந்து கீழே விழுந்தார். விஜய் சரிந்து விழந்ததற்கு காரணம் அவரை ஒருவர் தள்ளிவிட்டுவிட்டார் என்று பிரபல விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி தெரிவிக்கிறார். ஆனால் விஜய் சரிந்து விழுந்த வீடியோவைப் பார்க்கும்போது, விஜயை யாரும் தள்ளிவிட்டது போலத் தெரியவில்லை என்றும் இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











