Don't Miss!
- Travel
கடவுள்கள் பேசுமா? ஆம்! இந்தியாவில் உள்ள இந்த கோவிலில் கடவுள்கள் பேசுகின்றனவாம்! ஆச்சரியமாக இருக்கிறதா?
- Sports
"பும்ரா எங்கதான் சார் இருக்கார்?" கம்பேக் தேதியை அறிவித்த ரோகித் சர்மா.. ரசிகர்கள் குழப்பம்- விவரம்
- Technology
இதே வேலையா போச்சு: ப்ரீபெய்ட் திட்டத்தின் விலையை உயர்த்திய Airtel.! கடுப்பில் பயனர்கள்!
- News
கொங்கு மண்டலத்தில் இருந்து வந்த ‘பாசிட்டிவ்’ சிக்னல்.. தனியரசு ஓபிஎஸ் அணியை ஆதரிப்பது ஏன்?
- Lifestyle
இளைஞர்களுக்கு ஆணுறுப்பு பலவீனமாக இந்த 3 விஷயங்கள்தான் முக்கிய காரணமாம்... ஜாக்கிரதையா இருங்க!
- Automobiles
தாலிபான்கள் உருவாக்கிய முதல் சூப்பர் கார்... உலக நாடுகளையே மூக்குமேல விரல வைக்க வச்சுட்டாங்க!
- Finance
நிறுவனங்கள் உங்கள் குடும்பமல்ல.. நீங்கள் குடும்ப உறுப்பினருமல்ல.. இனி பணத்துக்காக வேலை பாருங்கள்!
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
ராஷ்மிகா மந்தனா, ராதிகா உடன் வாரிசு சக்சஸ் பார்ட்டி.. வெறித்தனம் காட்டும் தளபதி 67 லுக்கில் விஜய்!
சென்னை: நடிகர் விஜய் தயாரிப்பாளர் தில் ராஜு மற்றும் இயக்குநர் வம்சி உடன் வாரிசு படத்தின் சக்சஸ் பார்ட்டி கொண்டாடிய நிலையில், சரத்குமார், ராதிகா மற்றும் ராஷ்மிகா உள்ளிட்டோருடன் இன்னொரு ஸ்பெஷல் சக்சஸ் பார்ட்டியை கொண்டாடிய புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன.
வாரிசு திரைப்படம் வெளியாகி 14 நாட்கள் ஆகும் நிலையில், படத்தின் வசூல் அதிகரித்துள்ளது. நாளை குடியரசு தினத்துக்கான டிக்கெட் புக்கிங்கும் அனல் பறந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில், வாரிசு படத்தின் வெற்றியை வேறலெவலில் தொடர்ந்து நடிகர் விஜய் கொண்டாடி வருகிறார்.
உடல்நிலை
தேறியுள்ளது..
கைவிரலை
உயர்த்திக்
காட்டி
ரசிகர்களுக்கு
அப்டேட்
சொன்ன
விஜய்
ஆண்டனி!

வாரிசு வசூல்
வாரிசு திரைப்படம் 11 நாட்களில் 250 கோடி வசூல் செய்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில், 14 நாட்களில் வாரிசு திரைப்படம் 270 கோடிக்கும் அதிகமாக வசூல் ஈட்டி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வியாழக்கிழமையான நாளை குடியரசு தினம் விடுமுறை என்பதால், நாளை முதல் மீண்டும் 3வது வார இறுதியை கொண்டாட குடும்பங்கள் வாரிசு படத்தை பார்க்க தியேட்டரை நோக்கி படையெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொண்டாட்டத்தில் விஜய்
வாரிசு திரைப்படம் கடுமையான நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்தாலும் ஃபேமிலி ஆடியன்ஸுக்கு பிடித்து விட்ட நிலையில், தொடர்ந்து மக்கள் கூட்டம் குறையாமல் தியேட்டர்களில் ஷோக்கள் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், நடிகர் விஜய் தொடர்ந்து சக்சஸ் பார்ட்டிகளை கொண்டாடி வருகிறார்.

சரத்குமார் ராதிகாவுடன்
நடிகர் சரத்குமார் மற்றும் நடிகை ராதிகாவுடன் இணைந்து சமீபத்தில் வாரிசு படத்தின் வெற்றி விழா கொண்டாட்டத்தில் நடிகர் விஜய் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. மேலும், பிரபு, ஸ்ரீகாந்த், ஷாம் உள்ளிட்ட படக்குழுவினரும் இந்த சக்சஸ் பார்ட்டியில் கலந்து கொண்டனர்.

ராஷ்மிகா பங்கேற்பு
முன்னதாக இயக்குநர் வம்சி மற்றும் தயாரிப்பாளர் தில் ராஜு ஹைதராபாத்தில் நடத்திய பார்ட்டியில் நடிகை ராஷ்மிகா மந்தனா கலந்து கொள்ளவில்லை. தனது இந்தி படமான மிஷன் மஜ்னு ரிலீஸில் பிசியாக இருந்தார். இந்நிலையில், இந்த பார்ட்டியில் அவரும் கலந்து கொண்டு எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன.

தளபதி 67 லுக்
தளபதி 67 படத்தில் தரமான கேங்ஸ்டராக நடிகர் விஜய் நெகட்டிவ் ரோலில் வெயிட்டு காட்டப் போகிறார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அதற்காக அவர் வளர்த்து வரும் லாங் ஹேர் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் ரசிகர்களை எதிர்பார்ப்பின் உச்சத்திற்கே கொண்டு சென்றுள்ளன.

நாளை அப்டேட் வருமா
விக்ரம் படத்திற்கு கறி விருந்துடன் கமல்ஹாசன் எதிரிகளை வேட்டையாடுவது போன்ற முதல் ப்ரோமோவே ரசிகர்களை வெகுவாக ஈர்த்த நிலையில், தளபதி 67 படத்திற்கும் அதுபோன்ற ஒரு அறிமுக ப்ரோமோவை உருவாக்கி உள்ளனர் என்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு நாளை மாலை 5 மணிக்கு தளபதி 67 அறிமுக ப்ரோமோ வெளியாகும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. நாளை அந்த ப்ரோமோ வெளியாகும் பட்சத்தில் அதற்கான அப்டேட் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் ரசிகர்களை லோகேஷ் கனகராஜ் ஏமாற்றாமல் அப்டேட் கொடுப்பாரா என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்..