தற்கொலை செய்து கொண்டு இறந்த ரசிகர்.. குடும்பத்திற்கு போன் பண்ணி ஆறுதல் சொன்ன தளபதி விஜய்
சென்னை: குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த ரசிகர் பாலாவின் குடும்பத்திற்கு போன் பண்ணி ஆறுதல் கூறியுள்ளார் நடிகர் விஜய்.
Recommended Video
கள்ளக்குறிச்சியை சேர்ந்த நடிகர் விஜய்யின் ரசிகர் பாலா என்பவர் குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்துள்ளார்.
மாஸ்டர் படம் பார்க்காமலே மரணிக்கிறேன் என அவர் போட்ட கடைசி ட்வீட் ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

என்ன பிரச்சனை
கள்ளக்குறிச்சியை சேர்ந்த விஜய் ரசிகர் மரணத்திற்கு குடும்ப பிரச்சனை காரணம் என்றும் காதல் பிரச்சனை காரணம் என்றும் சமூக வலைதளத்தில் பலவித கருத்துக்கள் பரவி வருகின்றன. வேலை இல்லாத இளைஞர்களை குடும்ப உறவினர்கள் டார்ச்சர் செய்வதால், இளைஞர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர் என்றும் விஜய் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

மாஸ்டர் படம் பார்க்காமலே
காதல் பிரச்சனை எல்லாம் இல்லை என்றும், குடும்ப பிரச்சனை தான் காரணம் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் மறைந்த ரசிகர் பாலா. மேலும், தலைவன் படம் பார்க்காமலே போகிறேன் என்றும், தலைவனையும் பார்க்காமலே போகிறேன் என்றும் மிகவும் உருக்கமாக மாஸ்டர் ஹாஷ்டேக் போட்டு ட்வீட் போட்டுள்ளார் கடைசியாக.. லாக்டவுன் காரணமாக மாஸடர் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போயுள்ளது குறிப்பிடத்தக்கது.

கறுப்பு நாள்
#RIPBala என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி விஜய் ரசிகர்கள் மற்றும் அஜித் ரசிகர்கள் என பலரும் பாலாவின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, இந்த நாளை கறுப்பு நாளாக அனுசரித்து வருகின்றனர். மேலும், விஜய் அந்த குடும்பத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றும், அட்லீஸ்ட் போன் பண்ணி ஆறுதலாவது சொல்ல வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.

ஆறுதல் சொன்ன விஜய்
இந்நிலையில், தற்போது நடிகர் விஜய், ரசிகர் பாலாவின் குடும்பத்திற்கு போன் பண்ணி என்ன ஆச்சு என்று கேட்டதாகவும், குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததாகவும் விஜய் மக்கள் இயக்கத்தினர் சமூக வலைதளத்தில் தெரிவித்து வருகின்றனர். ரசிகர்களுக்கு ஒன்று என்றால் முதல் ஆளாய் குரல் கொடுப்பார் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

தற்கொலை தீர்வல்ல
எந்தவொரு பிரச்சனைக்கும் தற்கொலை என்பது தீர்வாகாது என்பதை பல இடங்களில் நடிகர் விஜய் கூறியுள்ளார். இந்த காலத்து இளைஞர்கள் சின்ன சின்ன பிரச்சனைகளை கூட சமாளிக்கும் தைரியம் இல்லாமல், உடனடியாக இது போன்ற முடிவை எடுப்பது தவறான விஷயம் என பல பிரபலங்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications