தளபதியின் அந்த சிரிப்பு போதும்.. எவ்ளோ க்யூட்ல.. லியோ 2வது சிங்கிளுக்கு பலமா பிட்டு போடும் ஃபேன்ஸ்!
சென்னை: நடிகர் விஜய்யின் லியோ திரைப்படம் அடுத்த மாதம் அக்டோபர் 19-ஆம் தேதி ரிலீசாக உள்ள நிலையில் இன்னும் படத்தின் புரமோஷனை ஆரம்பிக்கவில்லையே படக்குழு என்கிற வருத்தம் விஜய் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தினமும் லியோ படத்தின் அப்டேட்களை கேட்க தொடங்கிவிட்டனர் விஜய் ரசிகர்கள். இந்நிலையில் தற்போது லியோ படத்தின் செகண்ட் சிங்கிள் அப்டேட் கேட்டு #LeoSecondSingle ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும், அதில் தளபதி விஜய் க்யூட்டாக பட பூஜையின் போது சிரிக்கும் காட்சிகளை வீடியோவாக எடிட் செய்து வெளியிட்டுள்ளனர்.
ரசிகர்கள் வெயிட்டிங்: லலித் குமார் தயாரிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின் பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட பலர் நடிப்பில் லியோ திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
ஏற்கனவே லியோ படத்தின் "நா ரெடிதான்" பாடல் நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்தது. நிலையில் அடுத்த லியோ செகண்ட் சிங்கிள் தான் வேண்டும் என ரசிகர்கள் ரொம்பவே ஆவலாக அந்த அப்டேட்டுக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
லியோ இசை வெளியீட்டு விழா: வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக மலேசியாவில் லியோ ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்த படக்குழு திட்டமிட்டு இருந்த நிலையில் கடைசி நேரத்தில் சென்னையிலேயே லியோ ஆடியோ வெளியீட்டு விழாவை வைத்துக் கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டதாக கூறுகின்றனர்.
க்யூட்டாக சிரிக்கும் தளபதி: விஜய் ரசிகர்கள் லியோ படத்தின் செகண்ட் சிங்கிளை கேட்டு ஹாஷ்டாக்கை டிரெண்ட் செய்து வரும் நிலையில், ரசிகர் ஒருவர் பதிவிட்ட விஜயின் கியூட்டான சிரிப்பு வீடியோ ஏகப்பட்ட ரசிகர்களின் லைக்குகளை அள்ளி அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
குழந்தையே தோத்து விடும் போல, என்னம்மா தளபதி சிரிக்கிறார் என ரசிகர்கள் அந்த வீடியோவை ரசித்து, வர்ணித்து கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர். வரும் விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 15-ஆம் தேதி லியோ படத்தின் செகண்ட் சிங்கிள் அனிருத் குரலில் வெளியாகும் என்றும் அந்தப் பாடலை விஷ்ணு எடவன் எழுதியுள்ளார் என்கிற தகவல்களும் தற்போது கசிந்துள்ளன. விநாயகர் சதுர்த்தி அன்று தளபதி விஜயின் லியோ படத்தின் புரமோஷனுக்கு படக்குழு பிள்ளையார் சுழி போட்டு விடும் என்றே தெரிகிறது.


Click it and Unblock the Notifications











