தளபதி வேற லெவல்.. 50 வயசு ஆகப்போகுது.. விஜய் இளமையாக இருக்க செய்யும் உடற்பயிற்சி என்னனு தெரியுமா?

சென்னை: தமிழ் சினிமாவில் அதிகப்படியான ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டுள்ள நடிகர்களில் விஜய் டாப் லிஸ்ட்டில் உள்ளார். தமிழ் நாடு மட்டும் இல்லாமல் கேரளாவிலும் இவருக்கு அதிகப்படியான ரசிகர்கள் உள்ளனர். ஒரு பேட்டி ஒன்றில் மலையாள நடிகர் ப்ரித்வி ராஜ் பேசுகையில், கேரளாவில் நடிகர் விஜயின் படங்களுக்கு சூப்பர் ஸ்டார் படங்களுக்கு கிடைக்கும் ஓப்பனிங்கைப் போல் இருக்கின்றது. மலையாள சினிமாவில் தொடர்ந்து நல்ல தரமான கதைகள் வருகின்றது என்றாலும் நாங்கள் விஜயிடம் இருந்தும் தமிழ் சினிமாவில் இருந்தும் பல விஷயங்களைக் கற்றுக் கொள்கின்றோம் எனக் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay Vijay Birthday The GOAT

இப்படி அண்டை மாநிலத்தில் உச்ச நடிகர்களில் ஒருவராக இருக்கக் கூடிய ப்ரித்வி ராஜ் விஜய் குறித்து கூறியுள்ள கருத்துக்கு விஜய் ரசிகர்கள் பலரும் தங்களது மகிழ்ச்சியை கமெண்டுகளில் தெரிவித்து வந்தனர். இப்படி அண்டை மாநிலத்தில் உள்ள நடிகர் ஒருவர் பாராட்டும் அளவிற்கு ஒரு நடிகர் வளர்ந்துள்ளார் என்றால் அதற்காக அவர் எவ்வளவு உழைப்பை செலுத்தியிருப்பார் என்பதை கொஞ்சம் யோசித்துப் பார்க்கவேண்டும்.

Vijay Vijay Birthday The GOAT

விஜயின் மெனக்கெடல்: விஜய் படங்களில் அவரது ரசிகர்களை மகிழ்விக்கும் காட்சிகளில் மிகவும் முக்கியமானவை சண்டைக் காட்சிகளும் பாடல் காட்சிகளும்தான். இந்த இரண்டிலும் தமிழ் சினிமாவில் விஜய் அருகில் வரும் அளவிற்கு எந்த நடிகரும் வரவில்லை என்றே கூறவேண்டும். இரண்டு நிமிடங்களில் ஒரே ஷாட்டில் ஒரு பாடலுக்கு நடனமாடவேண்டும் என்றாலும் நடிகர் விஜய் ஆடுகின்றார். அதேநேரத்தில் சண்டைக் காட்சிகளில் கூடுமானவரை டூப் போடாமல் நடிக்கின்றார். இந்த உழைப்பை அவர் தமிழ் சினிமாவில் தொடர்ந்து செலுத்தி வருகின்றார். இவர் இன்னும் 5 நாட்களில் தனது 50வது பிறந்த நாளைக் கொண்டாடவுள்ளார் என்றால் நம்ப முடிகின்றதா?

Vijay Vijay Birthday The GOAT

உடற்பயிற்சி: இப்படி தனது துறையில் தொடர்ந்து உச்சத்தில் இருக்கவும், பாடல் காட்சிகள் சண்டைக் காட்சிகளில் அசுரத்தனமாக நடிக்கவும் தனது உடலை மிகச் சரியாக பேணி பாதுகாத்து வருகின்றார். இதற்காக விஜய் எடுத்துக்கொள்ளும் உணவு என்னென்ன என்பது குறித்த தகவல்களை பிரபல சினிமா விமர்சகர் செய்யாறு பாலு கூறியுள்ளார். அதில் உடலை சரியாக பராமரிக்க விஜய் என்ன உடற்பயிற்சி செய்கின்றார் எனக் கேட்டதற்கு, அது மிகவும் எளிமையான உடற்பயிற்சிதான். ஒரு தட்டு நிறைய பிரியாணி ஒருவர் தந்தால் அதனை வேண்டாம் என தலையை ஆட்ட வேண்டும். அதேபோல் 60 இட்லி கொண்டு வருகின்றேன் எனக் கூறினாலும் வேண்டாம் என தலையை ஆட்ட வேண்டும் எனக் கூறினாராம் விஜய். வேண்டாம் என தலையை ஆட்டும் உடற்பயிற்சிதான் உடலை பராமரிக்க முக்கிய காரணம்.

Vijay Vijay Birthday The GOAT

உணவு முறை: மேலும் விஜய் தினமும் காலையில் இரண்டு முதல் மூன்று தோசை சாப்பிடுவாராம். அதன் பின்னர் மதியம் ஒரு கப் சாப்பாடும், கொஞ்சம் கோழிக்கறி குழம்பும், ஃப்ரூட் சாலட்டும் சாப்பிடுவாராம். இரவு உணவை மாலை ஆறு மணிக்கு முன்னரே சாப்பிட்டுவிடுவாராம். நள்ளிரவில் படப்பிடிப்பு நடத்தினால் கூட மாலை 6 மணிக்கு மேல் எதுவுமே சாப்பிடமாட்டாராம். எப்போதாவது மட்டும் ஃபிரஸ் ஜூஸ் குடிப்பாராம்" இவ்வாறு உணவு எடுத்துக் கொள்வதால்தான் உடலை நல்ல முறையில் பராமரிக்க முடிகின்றது என செய்யாறு பாலு கூறியுள்ளார். இந்த தகவல் அடங்கிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

Vijay Vijay Birthday The GOAT

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X