‘’பீஸ்ட்’’ தளபதியை ஓவியமாக வரைந்த ரசிகர்… வைரலாகும் வீடியோ !
சென்னை : தளபதியின் 47வது பிறந்த நாளை முன்னிட்டு தளபதி 65 திரைப்படத்தின் தலைப்பு, ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது.
இப்படத்திற்கு பீஸ்ட் என ஆங்கிலத்தில் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தளபதி விஜய்யின் தீவிர ரசிகர் ஒரு வீட்டு மொட்டை மாடியில் பீஸ்ட் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஓவியமாக வரைந்துள்ளார்.

பீஸ்ட்
மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கிவரும் திரைப்படம் தான் பீஸ்ட். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் பூஜா ஹெக்டே, யோகிபாபு , அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் ஆகியோர் லீட் ரோலில் நடிக்கின்றனர்.

விரைவில்
இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்காக சென்னையில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு வந்த நேரத்தில் கொரோனாவின் 2வது அலை தீவிரமானதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தற்போது, தொற்று குறைந்து வருவதால், விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போஸ்டர்
விஜய் பிறந்த நாளில் வெளியான டைட்டில் மற்றும் லுக் போஸ்டருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. போஸ்டர் வெளியான 24 மணி நேரத்தில் இந்திய அளவில் அதிக லைக்குகளை பெற்று மாஸ்டர் படத்தின் சாதனையை முறியடித்துள்ளது.

ஓவியமாக வரைந்த ரசிகர்
இந்நிலையில், விஜய்யின் தீவிர ரசிகர் ஒருவர் தனது வீட்டு மொட்டை மாடியில் பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை அப்படியோ தத்ரூபமாக வரைந்துள்ளார். மேலும், விஜயின் படத்திற்கு மலர் தூவியும் பீஸ்ட் படத்தை வரவேற்றனர். விஜய் ரசிகரின் இந்த செயல் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











