சுறாவுக்கு பின் தளபதியின் அசுர வளர்ச்சி.. 10 இயர்ஸ் ஆப் சுறா.. ரசிகர்கள் குஷி!

சென்னை : நடிகர் விஜயின் சுறா படம் வெளியாகி 10வருடங்கள் ஆவதை ஒட்டி விஜய் ரசிகர்கள் சுறா படம் பற்றிய பல விஷயங்களை ட்விட்டரில் பகிர்ந்து வருகின்றனர்.

Recommended Video

Shocking Exclusive: Vijay plays Dual role in MASTER | Lokesh Kanagaraj

தளபதி விஜயின் சுறா வெளியாகி 10 வருடங்கள் ஆகிறது. சரியாக ஏப்ரல் 30 2010ல் சுறா படம் வெளியானது. இது நடிகர் விஜயின் 50வது படமாகும். தொடர் தோல்விகளை சந்தித்ததாலும், 50வது படம் என்பதாலும் சுறா படத்தி மீதான எதிர்பார்ப்பு மக்களிடையே கூடியது.

சுறா படம் நிச்சயம் வெற்றிப்படமாக இருக்கும் என்று கருதப்பட்டது. ஆகையால், வெற்றி படத்தை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார் விஜய். ஆனால், சுறா படம் வெளிவந்து யாரும் எதிர்பாராத தோல்வியை சந்தித்தது.

 50வது படம் சுறா

50வது படம் சுறா

சுறா படத் தோல்வியால் அவர் மீது பல குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. இதற்கு மேல் விஜய்க்கு வளர்ச்சி இருக்காது, அவர் இத்துடன் ஃபீல்ட் அவுட் ஆகிவிட்டார் என்று பல விமர்சனங்கள் வந்தன. இதனால் அவர் பின்னுக்கு தள்ளப்பட்டார். ஆனால் யாரும் எதிர்பாராதது அதன் பிறகு தான் நடந்தது. அந்த, படத்தின் தோல்விக்கு பிறகு தான் விஜய் எதிர்பாராத உயரத்தை அடைந்தார் அவரது படங்களும் பெரிய உச்சத்தை அடைந்தது.

 வீழ்ச்சி அல்ல வளர்ச்சி

வீழ்ச்சி அல்ல வளர்ச்சி

சுறா படம் வெளியாகி சரியாக 10வருடங்கள் ஆகின்றன. இந்நிலையில் விஜய் ரசிகர்கள் விஜய் சுறா படத்தின் போது சந்தித்த தோல்வியையும், அவர் மீது வைத்த விமர்சனங்களை தாண்டி எப்படி மீண்டு எழுந்து வந்தார். எவ்வாறு தமிழ் சினிமாவின் ராஜாவானார் என்றும், சுறா தோல்வி வீழ்ச்சி அல்ல அங்கிருந்துதான் விஜய் வளர்ந்தார் என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

 10 இயர்ஸ் ஆப் சுறா

10 இயர்ஸ் ஆப் சுறா

வெற்றி படங்களுக்கும், ட்விட்டரில் ஹாஸ்டேக் உருவாக்குவதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் தற்போது விஜய் ரசிகர்கள் 10 இயர்ஸ் ஆப் சுறா என்கிற ஹாஸ்டேக்கை உருவாக்கியுள்ளனர். இந்த ஹாஸ்டேக்குடன் பல போஸ்டர்கள் மீம்கள் போட்டு வைரலாக்கி வருகின்றனர் விஜய் ரசிகர்கள். மேலும் , தோல்வியின் போதும் தளபதி துவண்டுவிடவில்லை என்றும் உருக்கமாக பேசி வருகின்றனர் .

 ரசிகர்கள் ஆதரவு

ரசிகர்கள் ஆதரவு

டிரெண்டாகி இந்த ஹாஸ்டேக்கை பார்த்த ஒரு திரையரங்கு தங்களின் ட்விட்டர் பக்கத்தில், சுறா படத்தை 10 வருடங்களுக்கு முன் நாங்கள் தான் திரையிட்டோம் படம் அன்று தோல்வியுற்றிருந்தாலும் எங்கள் திரையரங்கில் படம் சுமார் 49 நாட்கள் ஓடியது என்று கூறியுள்ளது. ரசிகர்களின் இந்த பேராதரவை கண்டு பல பிரபலங்களும் மற்ற நடிகர்களும் ஆச்சரியபட்டு போனார்கள் என்று பதிவிட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X