மரங்கள், கூண்டுகள் மீது ஏறி அலப்பறை செய்யும் விஜய் ரசிகர்கள்.. கிரீஸ் டப்பாவுக்கு மறுபடியும் வேலையா?

திருச்சி: நடிகர் விஜய் மீது பல்வேறு அரசியல் கட்சியினர் பல விமர்சனங்களை வைத்து வந்தாலும், அவருக்கு தலைவலியை ஏற்படுத்துபவர்களாக அவரது ரசிகர்கள் தான் முதலிடத்தில் நீடிக்கிறார்கள் என்று கூறவேண்டும். அப்படியான ஒரு சம்பவம் தான் திருச்சியில் நடைபெற்றுள்ளது.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை அரசியல் கட்சிகள் நடத்தி வருகிறார்கள். இப்படி இருக்கையில் நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சாரத்தை இன்று அதாவது செப்டம்பர் 13ஆம் தேதியில் இருந்து தொடங்க உள்ளார். தனது முதல் பிரச்சாரத்தை திருச்சியில் இருந்து தொடங்கவுள்ளார். இப்படி இருக்கையில் இன்று திருச்சி மட்டும் இல்லாமல், பெரம்பலூர், அரியலூர் மற்றும் மதுரை என நான்கு மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார். இப்படி இருக்கையில், முதலில் திருச்சியில் இருந்து தான் பிரச்சாரம் செய்யவுள்ளார்.

Thalapathy Vijay Fans Did Not Follow Police Instructions On TVK Trichy Campaign
Photo Credit:

கிரீஸ் டப்பா: காவல்துறை தரப்பில் இந்த பிரச்சாரத்திற்கு சுமார் 23 நிபந்தனைகள் விதித்து பரப்புரைக்கு அனுமதி வழங்கியது. அதில் பலரது கவனத்தை ஈர்த்த நிபந்தனை என்றால் அது, தொண்டர்கள் மரங்களின் மீதோ, கட்டிடங்களின் மீதோ ஏற கூடாது என்பதுதான். ஆனால் விஜய் ரசிசர்கள் விஜய்யை பார்க்க கட்டிடங்கள் மீதும், சிலைகளுக்கு அமைக்கப்பட்டுள்ள கூண்டுகள் மீதும் ஏறி நின்று கொண்டும் அமர்ந்து கொண்டும் உள்ளார்கள். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதைப் பார்த்த இணையவாசிகள், விஜய்க்கு கெட்டப் பேரு வாங்கிக் கொடுக்க நீங்களே போதும் டா என்று பேசி வருகிறார்கள். மேலும் விஜய் எங்கு சென்றாலும் கிரீஸ் டப்பாவுடன் செல்ல வேண்டும் போலயே என்று தெரிவித்தும் வருகிறார்கள்.

குழந்தைகள்: இது மட்டும் இல்லாமல் மற்றொரு நிபந்தனை பிரச்சாரத்திற்கு குழந்தைகளை அழைத்து வரக்கூடாது, வயதானவர்களையும் மாற்றுத் திறனாளிகளையும் அழைத்து வரக்கூடாது என்பதுதான். ஆனால் குழந்தைகளை இந்த பிரசாரத்திற்கு அழைத்து வந்து, குழந்தைகளை வெயிலில் தங்கள் தலை மீது அமர வைத்துக் கொண்டு உள்ளார்கள். இது தொடர்பான புகைப்படங்களையும் பார்க்க முடிகிறது.

Thalapathy Vijay Fans Did Not Follow Police Instructions On TVK Trichy Campaign
Photo Credit:

போக்குவரத்து இடஞ்சல்: இது மட்டும் இல்லாமல், சாலையில் விஜய்யின் வாகனத்திற்கு முன்னாலும் பின்னாலும் 5 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி என்று கூறினார்கள். ஆனால் விஜய் ரசிகர்கள் அவரது வாகனத்திற்கு முன்னாலும் பின்னாலும் ஆயிரக்கணக்கில் இருசக்கர வாகனங்களில் வந்து கொண்டு இருக்கிறார்கள். இது மட்டும் இல்லாமல், சாலையில் எதிர் திசையிலும் விஜய் ரசிகர்கள் தங்களது வாகனங்களில் சென்று கொண்டு உள்ளார்கள். இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதைப் பார்த்த இணையவாசிகள் தவெக தொண்டர்களை கடுமையாக விமர்சித்துவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X