Jana Nayagan: உசுருக்கு உசுரா நாங்க இருக்கோம்.. தளபதிக்கு இது புதுசு இல்ல.. நம்பிக்கை கொடுக்கும் ரசிகர்கள்

சென்னை: பெருத்த ஏமாற்றத்தில் தளபதி விஜய் ரசிகர்கள் இருந்தாலும், இணையத்தில் திமுக மற்றும் பாஜகவை விமர்சித்தாலும், விஜய்க்கு நாங்கள் இருக்கிறோம் என்ற நம்பிக்கையை அளித்து வருவதையும் பார்க்க முடிகிறது. ஜனவரி 9ஆம் தேதி காலையில் ஜன நாயகன் படத்திற்கு சென்சார் வழங்குவது தீர்ப்பு வழங்குவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்து உள்ளதால் ரசிகர்கள் கவலையில் உள்ளனர். அதே நேரத்தில் விஜய்க்கும் படக்குழுவினருக்கும் நம்பிக்கை அளித்து வருகிறார்கள் என்பதையும் பார்க்க முடிகிறது.

கேவிஎன் நிறுவனத்தின் தயாரிப்பில் விஜயின் கடைசி படமான உருவான படம் ஜன நாயகன். இந்த படத்தை ஹெச். வினோத் இயக்கி உள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். இப்படி இருக்கையில் படம் வரும் 9ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு சில மாதங்களுக்கு முன்னரே அறிவித்துவிட்டனர். இப்படி இருக்கும்போது, படத்தை கடந்த மாதம் 18ஆம் தேதி சென்சாருக்கு அனுப்பி உள்ளனர். படத்திற்கு சென்சார் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்தவர்களுக்கு பெரும் ஏமாற்றம் தான் கிடைத்தது.

Thalapathy Vijay Fans Emotional Outburst For Jana Nayagan Censor Issue and Release Postponed

ஏமாற்றம்: இதனால் தொடுக்கப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இப்படி இருக்கையில் படத்தை வரும் 9ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில் அதே தேதியில் காலையில் தீர்ப்பு வழங்க முயற்சிப்பதாக நீதிமன்றம் தெரிவித்துவிட்டது. இதனால் படம் திட்டமிட்டபடி 9ஆம் தேதி வெளியாகாது என்று ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.

அரசியல் நெருக்கடி: குறிப்பாக பெரும்பான்மையான ரசிகர்கள், விஜய் அரசியல் கட்சி தொடங்கிவிட்டதால் அவருக்கு இதன் மூலம் அரசியல் நெருக்கடி கொடுக்க திட்டமிட்டுள்ளனர் என்றும், அதில் மத்தியில் ஆளுகிற பாஜகவும் மாநிலத்தில் ஆளுகிற திமுகவும் ஒன்றுபட்டு நிற்பதாகவும் தெரிவித்து வருகிறார்கள். இந்த இரண்டு கட்சிகளைத்தான் அரசியல் எதிரி மற்றும் கொள்கை எதிரி என்று விமர்சித்தார் விஜய் என்றும் தெரிவித்து வருகிறார்கள்.

Thalapathy Vijay Fans Emotional Outburst For Jana Nayagan Censor Issue and Release Postponed

ரசிகர்கள் நம்பிக்கை: இப்படி இருக்கையில், விஜய் ரசிகர்கள் பலரும், இது ஒன்றும் எங்கள் தளபதிக்கு, எங்கள் அண்ணனுக்கு புதிது அல்ல. எங்களுக்கும் புதிது அல்ல. இதற்கு முன்னர் நாங்கள் இதை விட பல நெருக்கடிகளை பார்த்துள்ளோம். அப்படி இருக்கும்போது, இந்த பிரச்னையிலும் நாங்கள் தளபதிக்கு உசுருக்கு உசுராக இருப்போம் என்று இணையதளத்தில் நம்பிக்கை தெரிவித்து வருகிறார்கள். ரசிகர்கள் கருத்துக்களால் ஜன நாயகன் குறித்த பேச்சுக்கள் இணையத்தில் ஓங்கி உள்ளது. மேலும் வெளிநாடுகளில் ஜன நாயகன் படத்திற்காக முன் பதிவான லட்சக்கணக்கான டிக்கெட்டுகளுக்கு பணத்தை திருப்பிக் கொடுக்கும் வேலைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X