#தலைகனம்இல்லாதளபதி ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து தெறிக்கவிடும் தளபதி விஜய் ரசிகர்கள்!
சென்னை: தளபதி விஜய் நடிப்பில் ஜனவரி 12ம் தேதி பல திரைப்படங்கள் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்துள்ளன.
போக்கிரி, வில்லு, நண்பன், பைரவா உள்ளிட்ட படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி தளபதி ரசிகர்களை குஷிபடுத்தியுள்ளன.
Recommended Video
இந்த பொங்கலுக்கு விஜய் படம் ஏதும் ரிலீசாகாத நிலையிலும், பொங்கலை முன்னிட்டு #தலைகனம்இல்லாதளபதி என்ற ஹாஷ்டேக்கை விஜய் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
வேற லெவல் டிரெண்டிங்
பிகில் படத்தின் 75வது நாள் கொண்டாட்டத்தை காலை முதலே மதுரை விஜய் ரசிகர்கள் டிரெண்ட் செய்து கொண்டாடி வந்தனர். இந்நிலையில், தற்போது #தலைகனம்இல்லாதளபதி ஹாஷ்டேக் டிரெண்ட் ஆகி வருகிறது.
மாஸ்டர் எடிட்
மாஸ்டர் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் என தளபதி ரசிகர்கள் உருவாக்கிய ஃபேன் எடிட் புகைப்படத்தையும் இந்த ஹாஷ்டேக்கில் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர். மாஸ்டர் படத்தில் முதன்முறையாக தளபதி விஜய் மீசை இல்லாமல் மாணவனாக நடிக்க உள்ளார் என்ற செய்தியும் அண்மையில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
இது தான் காரணம்
இப்படியொரு ஹாஷ்டேக் டிரெண்டாக இந்த புகைப்படம் தான் காரணம் என விஜய் ரசிகர்கள் கெத்தாக சொல்லி வருகின்றனர். பிகில் படக்குழுவினர் இருக்கும் புகைப்படத்தில் ஏ.ஆர். ரஹ்மான், இந்துஜா உள்ளிட்டவர்களை முன்னால் நிறுத்தி பின்னால் நின்று தளபதி அழகு பார்ப்பதே அவரது சிறந்த குணம் என்கின்றனர்.
எல்லோரையும் மதிப்பவர்
ரசிகர்கள், பிரபலங்கள், சக நடிகர்கள் என எல்லோரையும் மதிப்பவர் விஜய் என தளபதி ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
பாசிட்டிவ் எனர்ஜி
உங்களை எல்லோரும் வெறுத்து, ஒதுக்கினாலும், தளபதி விஜய்யின் புகைப்படத்தை பார்த்தால், உங்களுக்குள் ஒரு பாசிட்டிவ் எனர்ஜி வரும் என இந்த ரசிகர் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.
தன்னை கலாய்க்க இடம் கொடுப்பார்
காமெடியன்களை பெரும்பாலான உச்ச நடிகர்கள் அருகில் கூட நிற்க வைத்து நடிக்க விடமாட்டார்கள் என்றும், ஆனால், நடிகர் விஜய், தன்னை கலாய்க்கவும் அவர்களுக்கு இடம் கொடுப்பார் என பிகில் படத்தில் விஜய்யை யோகி பாபு கலாய்க்கும் புகைப்படத்தை பதிவிட்டு இந்த ரசிகர் புகழ்ந்துள்ளார்.
ரசிகர்களுக்கு முன்னுரிமை
நடித்து முடித்து சோர்ந்திருக்கும் நிலையிலும், ரசிகர்கள் தன்னைக் காண வந்தால், முன்னுரிமை கொடுத்து அவர்களை சந்திப்பதில் விஜய்க்கு நிகர் யாரும் இல்லை என இவர் பதிவிட்டுள்ளார்.
விஜய் சொல்லி அடிச்சாரு
கடுமையான விமர்சனங்கள் வந்த நிலையில், கில்லி முதல் 50 கோடி, துப்பாக்கி முதல் 100 கோடி, தெறி மற்றும் கத்தி முதல் 150 கோடி, மெர்சல் மற்றும் சர்கார் 200 மற்றும் 250 கோடி, பிகில் 300 கோடி என வசூலில் விஜய் சொல்லி அடிச்சாரு என இந்த ரசிகர் கமெண்ட் செய்துள்ளார்.
ஈகோ இல்லாதவர்
பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜே ரம்யாவுக்கு பதிலாக, தான் பேசிய மைக்கை தானே எடுத்து வைத்து சென்ற ஈகோ இல்லாத மனுஷன் தளபதி விஜய் என அந்த புகைப்படத்தையும் பதிவிட்டு ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











