Vijay Birthday: Last Dance.. அவ்வளவுதான்ல்ல.. இனிமேல் தளபதி விஜய் பிறந்த நாள் இப்படி இருக்காதுல்ல..

சென்னை: உங்கள் விஜய்.. இளைய தளபதி விஜய்.. தளபதி விஜய்.. என ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகர் விஜய் திரை வாழ்க்கையில் இருந்து கொண்டு தனது கடைசி பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். அடுத்த ஆண்டு இவரது பிறந்தநாளை தவெக தலைவர் விஜய் ஆக மட்டுமே கொண்டாடுவார் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். அப்படி இருக்கும் போது ரசிகர்கள் தங்களது அன்பிற்குரிய தளபதியின் இந்த பிறந்த நாளை மிகவும் கோலாகலமாகவும் உணர்ச்சி பொங்கவும் கொண்டாட தயாராகி வருகிறார்கள்.

தளபதி பிறந்த நாள் என்றாலே திருவிழா போல கொண்டாடிக் கொண்டு இருந்த ரசிகர்களுக்கு அவரை நடிகராக கொண்டாட இதுவே கடைசி பிறந்த நாள். இப்படி இருக்கும்போது ரசிகர்கள் விஜய்க்கு திரையில் இருந்து பிரிய விடை கொடுக்க இப்போது இருந்தே தங்களை தயார்படுத்தி வருகிறார்கள்.

விஜய் ஏன் மற்ற நடிகர்களில் இருந்து தனித்து நிற்கிறார் இவ்வளவு அன்பை தனக்காக சம்பாதித்துள்ளார் என்ற எல்லா கேள்விகளுக்கும் பெரும்பாலான பதில் அவரது திரை வாழ்க்கை மட்டுமே. விஜய் ஆரம்ப காலகட்டத்தில் முதல் வெற்றியை பெறுவதற்கு போராடினாலும், அதன் பின்னர் தனது திரை வாழ்க்கையில் வெற்றி, ஏறுமுகம் என தனது அஸ்திவாரத்தை மிகவும் வலிமையாக போட்டுக் கொண்டார்.

Thalapathy Vijay Fans Ready To Celebrates His 51st Birthday as Actor
Photo Credit:

பெண் ரசிகர்கள்: விஜய் ஆக்‌ஷன் ஹீரோவாக மாறுவதற்கு முன்னர் பல ஃபீல் குட் படங்களைக் கொடுத்தார். அதில் அவர் ஈட்டிய அன்புதான் விஜய் ஆக்‌ஷன் ஹீரோவாக மாறிய பின்னரும் விஜய்யின் காதல் காட்சிகள் தான் அவருக்கு பெண்கள் மத்தியில் எப்போதும் வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது. தனது ரசிகர்களுக்கு திருப்திகரமான படங்கள் கொடுக்க வேண்டும் என்பதில் மிகவும் அக்கறை கொண்டவராக விஜய் இருந்ததுமே அவரது நிலையான முன்னேற்றத்திற்கு காரணம்.

விஜய்க்கான மார்க்கெட்: சினிமாவில் வெற்றி தோல்விகள் சகஜம் தான். தனக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிய பின்னருமே விஜய் தோல்விகளைச் சந்தித்தார். அவையெல்லாம் வணிக ரீதியான விமர்சன ரீதியான தோல்விகள் என்றாலும் ஒரு தோல்விக்குப் பிறகுமே விஜய்யின் சம்பளம் அதிகரித்துள்ளது மார்க்கெட் அதிகரித்துள்ளது. அந்த அளவுக்கு விஜய்யின் மார்க்கெட் இருந்தது.

ரசிகர்கள் எமோஷனல்: விஜய் தனது கடைசி படமான ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம்தான் சினிமா வாழ்க்கையில் இவரது கடைசி படம். இதனால் இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. விஜய் தனது ரசிகர்களை ஒரு பெரும் எமோஷனலான நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ளார். ஜன நாயகன் தான் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் அவருக்கு தொடர்ந்து படங்களில் நடிக்க கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

Last Dance: ரசிகர்களின் கோரிக்கையை விஜய் இதுவரை ஏற்றதாக தெரியவில்லை. ஜன நாயகன் படத்தின் முதல் நாள் முதல் காட்சியில் விஜய்யை திரையில் பார்க்க ரசிகர்கள் காத்துக் கொண்டு உள்ளார்கள். இது மட்டுமல்லாமல் இந்த படம்தான் விஜய் திரை வாழ்க்கையில் கடைசி படம் என்பதால் இந்த பிறந்த நாளை விஜய் ரசிகர்கள் வேற லெவலில் கொண்டாட தயாராகி வருகிறார்கள். தளபதி விஜய் எப்போதும் கூறுவது போலத்தான், நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்களுக்காக விஜய்யின் Last Dance ஜன நாயகன். அடுத்த ஆண்டு பிறந்த நாள் தலைவர் விஜய்யாகத்தான் கொண்டாட முடியும் என்பதால் ரசிகர்கள் மிகவுமே எமோஷனலாக உள்ளார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X