GOAT: கோட்-ஐ செதுக்கிய வெங்கட் பிரபுக்கு ரசிகர்கள் தேங்க்ஸ்! எல்லா புகழும் தளபதிக்கே எனும் வி.பி!

சென்னை: தமிழ் சினிமா உலகம் மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா உலகத்திலும் தற்போது ஹாட் டாப்பிக்காக மாறியுள்ள விஷயம் என்றால் அது இன்று அதாவது செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ள கோட் படம் தொடர்பாகத்தான். தமிழ் நாட்டில் மட்டும் இல்லாமல், கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படத்திற்கு தமிழ் நாடு தவிர, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால், தமிழ்நாட்டில் அதிகாலை காட்சிக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். படத்தின் முதல் அப்டேட்டில் இருந்து ரசிகர்களுக்கு படத்தின் மீது பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டது. படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்தது. அதே எதிர்பார்ப்பு முதல் பாடலுக்கும் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விசில் போடு பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இது விஜய் ரசிகர்களுக்கு அப்செட் ஆக்கியது.

goat vijay venkat prabhu

அடுத்து வந்த சின்ன சின்ன கண்கள் பாடல் நல்ல வரவேற்பைப் பெற்றது. இது மட்டும் இல்லாமல், அடுத்து வந்த ஸ்பார்க் பாடல் மீண்டும் கலவையான விமர்சனத்தைப் பெற்றது. ஆனால் படத்தின் ட்ரைலரும் அடுத்து வெளியான மட்ட பாடலும் ரசிகர்களுக்கு நல்ல வரவேற்பு பெற்றது. இதற்கிடையில் படத்தில் விஜய்க்கு டீ-ஏஜிங் செய்யப்பட்டது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இது ஸ்பார்க் பாடலில் இடம் பெற்றிருந்தது. அதன் பின்னர் டீ- ஏஜிங் பணிகள் மீண்டும் செய்யப்பட்டு, ட்ரைலர் ரிலீஸ் செய்யப்பட்டது. இதனால் ரசிகர்கள் திருப்தி அடைந்தனர்.

goat vijay venkat prabhu

அதிருப்தி: இது ஒருபுறம் இருக்க படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடத்தப்படவில்லை. இதுவும் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் ஒரே நாளில் பல யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து படம் குறித்து பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களைக் கூறி ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைக்க காரணமாக இருந்தார்.

goat vijay venkat prabhu

திரைக்கதை: இப்படியான நிலையில் படத்தினை சிறப்பாக இயக்கியது மட்டும் இல்லாமல், படத்தில் பல முன்னணி நடிகர்களின் ரசிகர்களையும் திருப்தி படுத்தும் காட்சிகளை வைத்து, அதற்கேற்ற திரைக்கதையை அமைத்தும் அனைவரது பாராட்டுகளைப் பெற்று வருகின்றார். படத்தினைப் பார்த்த பல ரசிகர்கள் தொடர்ந்து வெங்கட் பிரபுக்கு நன்றிகள் கூறி வருகின்றனர். குறிப்பாக நடிகர் விஜய் சினிமாவில் இருந்து முழுவதுமாக விலகவுள்ளதாக கூறியுள்ள நிலையில், தளபதிக்கு ஃபேர்வெல் கொடுக்கும் விதமாக இப்படியான திரைக்கதையை அமைத்ததற்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

goat vijay venkat prabhu

தளபதி: ரசிகர்கள் தொடர்ந்து வெங்கட் பிரபுவை பாராட்டி வரும் நிலையில், சென்னையில் உள்ள கமலா திரையரங்கில் ரசிகர்களுடன் இணைந்து, கோட் படத்தின் முதல் நாள் முதல் காட்சி படத்தினைப் பார்த்த இயக்குநர் வெங்கட் பிரபு, படத்தின் இடைவேளையின்போது பேசினார். அப்போது " இதுக்கு அப்பறம்தான் சம்பவமே இருக்கு. எல்லா புகழும் தளபதிக்கே" என தன்மையாகக் கூறினார். அப்போது ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X