GOAT: முதல் நாளே இப்படியா? ரூ. 100க்கு கூவி கூவி டிக்கெட் விற்பனை.. அப்போ அந்த ஆயிரம் கோடி வசூல்?
சென்னை: தமிழ் சினிமா உலகம் மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா உலகத்திலும் தற்போது ஹாட் டாப்பிக்காக மாறியுள்ள விசயம் என்றால் அது இன்று அதாவது செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ள கோட் படம் தொடர்பாகத்தான். தமிழ் நாட்டில் மட்டும் இல்லாமல், கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படத்திற்கு தமிழ் நாடு தவிர, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால், தமிழ்நாட்டில் அதிகாலை காட்சிக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். படத்தின் முதல் அப்டேட்டில் இருந்து ரசிகர்களுக்கு படத்தின் மீது பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டது. இந்நிலையில் படம் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

பல இடங்களில் படத்தின் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களில் அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கும் சேர்த்து அனைத்து காட்சிகளுக்கும் டிக்கெட் முன்பதிவு நடந்துவிட்டது என தியேட்டர் நிர்வாகங்களே அதிகாரப்பூர்வமாக அறிவித்தன. குறிப்பாக சென்னையில் உள்ள சத்யம் தியேட்டரில் முதல் இரண்டு நாட்களுக்கான அனைத்து காட்சிகளுக்கும் டிக்கெட்டுகள் விற்பனை செய்யபட்டது என அறிவிக்கப்பட்டது. அதேபோல் கோயம்பேட்டில் உள்ள ரோகினி திரையரங்கில் ஒரு டிக்கெட்டின் விலை ரூபாய் 390க்கு விற்பனை செய்தும் ரசிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு வாங்கினர்.

கேமியோ: இப்படியான நிலையில், படம் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. நடிகர் சிவகார்த்திகேயன் நடிகை த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் படத்தினை முதல் நாள் முதல் காட்சியாகவே பார்த்தனர். இது மட்டும் இல்லாமல், படக்குழுவினரும் படத்தினை ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்தனர். சிவகார்த்திகேயன் படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். த்ரிஷா மட்ட பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

வீடியோ: பல இடங்களில் படத்தின் டிக்கெட் கிடைக்காமல் ரசிகர்கள் கவலையாக உள்ளனர். மேலும் சிலரோ படத்தின் டிக்கெட்டினை கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்று வருகின்றனர் என்ற குற்றச்சாட்டும் எழுகின்றது. இப்படியான நிலையில் விஜய் ரசிகர்கள் தியேட்டரின் வாசலில் நின்றுகொண்டு ரூபாய் 100க்கு படத்தின் டிக்கெட்டினை விற்பனை செய்துகொண்டு உள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

1000 கோடி வசூல்: இந்த வீடியோவைப் பார்த்த பலர், தி கோட் படம் ரூபாய் 1000 கோடி வசூல் செய்யும் முதல் தமிழ் படமாக இருக்கும் என ரசிகர்களும் படக்குழுவினரும் ஒருபுறம் கூறிவரும் நிலையில், மறுபுறம் முதல் நாளே ரூபாய் 100க்கு படத்தின் டிக்கெட்டுகளை ரசிகர்களே கூவி கூவி விற்பனை செய்யும் வீடியோ, பலரது மனதில், படம் ரூபாய் ஆயிரம் கோடியை வசூல் செய்யுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.



Click it and Unblock the Notifications











