வாத்தியார் கிட்ட இருந்து இன்னைக்கு தரமான சம்பவம் இருக்கு..ஃபர்ஸ்ட் லுக்குக்காக புள்ளிங்கோ வெயிட்டிங்

சென்னை: மத்தவங்களுக்குத்தான் இன்னைக்கு வருஷத்தோட கடைசி நாள். ஆனா தளபதி விஜய் ரசிகர்களுக்கு, இன்னைக்கு தளபதி 64 ஃபர்ஸ்ட் லுக் வெளியாகுற நாள்.

மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ள தளபதி 64 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்காக காலையில 5 மணியில் இருந்தே #Thalapathy64FLday ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் தளபதி 64 படத்துக்கு என்ன டைட்டில் இருக்கும் என்ற பல கெஸ்களுடன் ரசிகர்கள் தொடர்ந்து தங்களது ட்வீட்களை போட்டு ட்விட்டரை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

தளபதி 64

தளபதி 64

இன்னைக்கு சாயங்காலத்தோட தளபதி 64 என்ற பெயர் மாறி தளபதி 64 படத்தின் ஹாஷ்டேக் அடுத்த ஆண்டின் சிறந்த ஹாஷ்டேக் வரிசையில் வந்து நிற்கும். சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ், வி.ஜே. ரம்யா, செளந்தர்யா, பிரேம், சேத்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் தளபதி 64 தெறியாக உருவாகி வருகிறது.

தளபதி என்ட்ரி

தளபதி 64 ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ள நிலையில், காலையில் இருந்தே அதன் ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர். தளபதி என்ட்ரி செதறு செதறு என இந்த ரசிகர் ட்வீட் போட்டுள்ளார்.

இது தான் இன்னைக்கு டார்கெட்

தளபதி 64 படத்தின் டைட்டில் இன்று வெளியாகவுள்ள நிலையில், டைட்டில் வெளியானவுடன் அதன் டேக்கை 4 மில்லியனுக்கு கொண்டு செல்லவேண்டும் என்பதே விஜய் ரசிகர்களின் வெறித்தனமான டார்கெட்.

தலைவா

தளபதி 64 ஃபர்ஸ்ட் லுக் நாள் இன்று தான்.. தலைவா என ஃபுல் கொண்டாட்ட மோடில் விஜய் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

ரெக்கார்டுகளை செதற விடணும்

பழைய ரெக்கார்டுகளை செதற விடும் நாள் தான் இன்று என இந்த ரசிகர் மாஸாக பதிவிட்டுள்ளார்.

நம்ம வாத்தியார்

தளபதி 64 படத்திற்கு நம்ம வாத்தியார் என்ற டைட்டில் வைக்கப்படலாம் என்ற கெஸ் சில ரசிகர்களிடையே எழுந்துள்ளது. தளபதி 64 படத்தில் நடிகர் விஜய் காலேஜ் புரொஃபஸராக நடித்து வருவதாக வெளியான தகவலில் இருந்து நம்ம வாத்தியார் டைட்டில் கணிக்கப்பட்டுள்ளது.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள்

சுறா, வேலாயுதம், நண்பன், காவலன், ஜில்லா, துப்பாக்கி, தலைவா, புலி, தெறி, மெர்சல், கத்தி, சர்கார், பிகில் என நடிகர் விஜய்யின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களின் தொகுப்பை போட்டுள்ள இந்த ரசிகர், அவரது ஃபேவரைட் போஸ்டர் மெர்சல் மற்றும் சர்கார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

புது டீகேடின் மெகா கொண்டாட்டம்

கடந்த பத்து ஆண்டுகள் முடியும் நாளான இன்று, அடுத்த பத்தாண்டுகளுக்கான முதல் கொண்டாட்டமாக தளபதி 64 ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகிறது என இந்த ரசிகர் தனது தளபதி தரிசனத்தை காண ஆவலோடு வெயிட்டிங் என்பதை தெரிவித்துள்ளார்.

லோகேஷ் ஏமாற்றமாட்டார்

தளபதி ரசிகர்களை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இன்று ஏமாற்றமாட்டார். தளபதி விஜய் இருக்கும் தனித்துவமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியாகும். நள்ளிரவு 12 மணிக்கு நியூ இயர் கொண்டாட்டத்தை முன்னிட்டு, விஜய், விஜய்சேதுபதி இருக்கும் மரண மாஸ் போஸ்டரும் வெளியாகும் என விஜய் ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X