என்னங்க பெரிய மலேசியா? நம்ம மெட்ராஸ் மக்கள் தளபதியை கொண்டாடுற மாதிரி வருமா? புல்லரிக்கும் வீடியோ

சென்னை: தளபதி விஜயின் அரசியல் நிலைப்பாட்டில் ரசிகர்கள் அனைவருக்கும் உடன்பாடு இருக்கிறதா இல்லையா என்பது தனிப்பட்ட கேள்வி என்றாலும், தளபதி என்றால் அவரைக் கொண்டாட ரசிகர்கள் எப்போதும் தவறமாட்டார்கள். இனிமேல் சினிமா கிடையாது முழுக்க முழுக்க அரசியல் தான் என்று அவர் அறிவித்த பின்னரும் சரி, மீண்டும் சினிமாவில் அவர் நடிக்க வந்தாலும் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். அந்த அளவுக்கு அவரை நேசிக்கிற, அன்பு செலுத்துகிற ரசிகர்கள் உள்ளனர்.

மலேசியாவில் நடைபெற்ற ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் விஜய் நடனமாடிய வீடியோவை இணையத்தில் பகிர்ந்த ரசிகர்கள் கூட, மிகவும் எமோஷனலாக பதிவிட்டனர். அதேபோல், விஜய் மீது அரசியல் ரீதியாக பிளவு பட்டு, விமர்சித்தவர்களும் கூட, அவரது அந்த நடன வீடியோவைப் பகிர்ந்து, அவர் என்றைக்கும் நன்றாக இருக்க வாழ்த்துகள் என்று எல்லாம் தெரிவித்தார்கள்.

Thalapathy Vijay Fans Sung Kathi Movie Song Yaar Petra Makano at Chennai New Year Celebration

ஜன நாயகன்: மலேசியாவில் நடைபெற்ற ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு முன்னதாக, ரசிகர்களுக்கு தளபதி விஜய் நடித்த படங்களில் இடம்பெற்ற சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்களை அரங்கேற்றினர். இப்படி இருக்கும்போது, இதில் கத்தி படத்தில் இடம் பெற்ற யார் பெற்ற மகனோ பாடலை ரசிகர்கள் மிகவும் எமோஷனலாக அணுகினர். விஜய் பேசும்போது கூட இந்த பாடலை பாடி தங்களது அன்பையும் பிரியத்தையும் வெளிப்படுத்தினர். ரசிகர்கள் மிகவும் எமோஷனலானதை கவனித்த விஜய், நீங்க என்ன முயற்சித்தாலும் நான் அழப்போவது இல்லை என்று தெரிவித்தார்.

யார் பெற்ற மகனோ: இப்படி இருக்கையில் சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் நடைபெற்ற ஒரு இசை நிகழ்ச்சியில் கத்தி படத்தில் இடம் பெற்ற அதே பாடல் இங்கும் பாடப்பட்டது. அப்போது மேடையில் மட்டும் இல்லாமல், அந்த கச்சேரியில் கலந்து கொண்ட, பொதுமக்கள் அனைவரும் அந்த பாடலை மிகவும் எமோஷனலாக பாடினார்கள். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், என்னதான் மலேசியா மக்கள் தளபதியை கொண்டாடினாலும், அது எல்லாம் நமது சென்னை மக்கள் கொண்டாடுவது போல இருக்குமா என்று கேட்டு வருகிறார்கள். இந்த இசை நிகழ்ச்சியில் மற்ற நடிகர்களின் பாடல்களும் பாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Thalapathy Vijay Fans Sung Kathi Movie Song Yaar Petra Makano at Chennai New Year Celebration

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X