எங்க தளபதியையா கலாய்ச்சே.. ஜப்பான் தயாரிப்பாளரை ரவுண்டு கட்டி அடிக்கும் விஜய் ரசிகர்கள்!
சென்னை: லியோ படத்துக்கு நெகட்டிவ் விமர்சனங்கள் வரத் தொடங்கியதும், மீண்டும் இறுகப்பற்று படத்துக்கு ஸ்க்ரீன் கிடைத்து விட்டது என ட்வீட் போட்டிருந்த தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு தயாரிப்பில் வெளியான ஜப்பான் படம் சொதப்பல் என நெகட்டிவ் விமர்சனங்கள் வர ஆரம்பித்ததும் விஜய் ரசிகர்கள் ரவுண்டு கட்டி பொளந்து வருகின்றனர்.
சூர்யா மற்றும் கார்த்தியின் படங்களை அதிகம் தயாரித்து வரும் ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனர் எஸ்.ஆர். பிரபு நடிகர் விஜய்க்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார் என்றும் ஜப்பான் படத்திலும் விஜய்க்கு எதிரான ட்ரோல்களை வைத்திருந்தார் என விஜய் ரசிகர்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

ஓவரா ஆடினா இப்படித்தான் என ஜப்பான் படத்துக்கு நெகட்டிவ் டாக்ஸ் வந்த உடனே மேலும், மோசமாக தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபுவை வச்சு செய்து வருகின்றனர்.
ப்ளூ சட்டை மாறன் விளாசல்: Japan - Honest Public Review:
பங்களா வாசலில் வீசப்படும் எலும்புத்துண்டை நக்கிவிட்டு 'படம் பிரமாதம்' என பொய் சொல்லும் பொறம்போக்குகளுக்கு மத்தியில்... நேர்மையாக பேசும் மக்களின் விமர்சனங்கள் இங்கே:
'ஜப்பானை விட..அலெக்ஸ் பாண்டியன், ஆல் இன் ஆல் அழகுராஜா, தேவ் படங்களே பரவாயில்லை' என ப்ளூ சட்டை மாறனும் ஜப்பான் படத்தை டோட்டல் டேமேஜ் செய்துள்ளார்.
தளபதிக்கிட்ட மோதாதே: பிகில் படத்திற்கு டிக்கெட் புக் செய்வதற்கு பதிலாக கைதிக்கு புக் செய்து விட்டேனே என ரசிகர் ஒருவர் போட்ட ட்வீட்டுக்கு உனக்கு அதிர்ஷ்டம் இருக்கிற அளவுக்கு மூளை இல்லை என எஸ்.ஆர். பிரபு கலாய்த்திருந்த நிலையில், ஜப்பான் படம் மண்ணை கவ்வி விட்டது என்றும் தளபதிக்கிட்ட மோதக்கூடாது என ரசிகர்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர்.விக்ரம் பிரபு படம் மாமா: தீபாவளி ரிலீஸ் படங்களிலேயே பிரபு படம் நல்லா இருக்காம்.. எஸ்.ஆர். பிரபு படமா மாமா.. இல்லை விக்ரம் பிரபு படம் என பங்கமாக மீம் போட்டு கலாய்த்து வருகின்றனர்.
விஜய்யை கேலி பண்ணி: இந்த பாடலை பாடியவர் உங்கள் கோல்டன் ஸ்டார் ஜப்பான் என நேம் கார்டு எல்லாம் போட்டு விஜய்யை ட்ரோல் செய்த நிலையில் தான் உன் படத்துக்கு இந்த நிலைமை என எஸ்.ஆர். பிரபுவை கழுவி ஊற்றி வருகின்றனர்.
கைதி 2 வருது: விஜய் ரசிகர்கள் எஸ்.ஆர். பிரபுவை ட்ரோல் செய்துக் கொண்டிருக்கும் நிலையில், அவர் லியோ படத்தில் கைதி நெப்போலியன் நடிக்கவும் எல்சியூவுக்கு என்.ஓ.சியும் கொடுத்துள்ளார். மேலும், கைதி 2 படம் வரட்டும் அப்போ எஸ்.ஆர். பிரபு யார் என தெரியும் என சூர்யா மற்றும் கார்த்தி ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











