GOAT Box Office: ஆடியோ லாஞ்ச் இல்லாமலே இத்தனை கோடி வசூல்.. இணையத்தில் கம்பு சுத்தும் தளபதி ரசிகர்கள்

சென்னை: தளபதி விஜய், கதாநாயகன் வில்லன் என இரட்டை வேடங்களில் நடித்து மிரட்டிய படம் கோட். இந்தப் படம் கடந்த 5ஆம் தேதி உலகம் முழுவதும் சோலோவாக ரிலீஸ் செய்யப்பட்டது. படம் உலகம் முழுவதும் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேலான ஸ்கீர்ன்களில் ரிலீஸ் செய்யப்பட்டது. தமிழ் நாட்டில் மட்டும் 1100 திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டது. மாஸான ஓப்பனிங்கில் சோலோ ரிலீஸில் வெளியான கோட் படம் வசூலில் முதல் நாளே பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. முதல் நாள் 126.32 கோடிகளை வசூல் செய்தது என படக்குழுவே அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. அதேபோல், படம் வெளியாகி 13 நாட்களில் உலகம் முழுவதும் ரூபாய் 413 கோடிகளை வசூல் செய்தது.

படத்தின் ரிலீஸுக்கு முன்னர் படம் ரூபாய் 1000 கோடிகள் முதல் ரூபாய் 1,500 கோடிகள் வரை வசூல் ஆகும் என படக்குழு தரப்பில் ஓவர் பில்டப் கொடுக்கப்பட்டது. மேலும் விஜய் சினிமாவில் இருந்து விலகவுள்ளதால், இப்படம் அவரது கடைசி இரண்டாவது படம். எனவே படம் பார்க்க தியேட்டரில் அவரது ரசிகர்கள் குவிவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும் இந்த ரசிகர்கள் கூட்டம் படத்தை தியேட்டரிலேயே 100 நாட்கள் வரை ஓட வைப்பார்கள் என கூறப்பட்டது.

goat vijay goat box office collection

மேலும் படம் படு மொக்கையாக இருந்தாலும், விஜய்யின் கடைசி இரண்டாவது படம் என்பதால் படத்தை கொண்டாட ஏற்கனவே தயாராகிவிட்டனர். படம் வெளியாகி முதல் நான்கு நாட்களில் அதாவது, வீக் எண்ட் வரை தியேட்டரில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. ஆனால் அதன் பின்னர் படத்தின் வசூல் படகுழு எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. குறிப்பாக முதல் வாரத்தில் படம் தியேட்டரில் ரூபாய் 500 கோடிகளை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது.

goat vijay goat box office collection

வசூல் விபரம்: ஆனால் இரண்டு வாரங்கள் ஆகியும் படம் ரூபாய் 420 கோடிகள் வரைதான் வசூல் ஆகியுள்ளது. இப்படியான நிலையில், கோட் படத்தின் வசூல் குறித்து இணையவாசிகள் பலரும் கலாய்த்து கமெண்ட் செய்து வருகின்றனர். குறிப்பாக "தமிழ் சினிமாவின் முதல் ஆயிரம் கோடி கலெக்‌ஷன் செய்யும் படம் என்ற சாதனையை கோட் படம் படைக்கப்போகின்றது எனக் கூறியவர்களை எங்கப்பா ஆளையே காணோம்? " என கேள்வி எழுப்பி கலாய்த்து வருகின்றனர்.

goat vijay goat box office collection

வார்த்தை போர்: இது ஒருபுறம் இருக்க, பிரேம்ஜி பேசிய, ஆயிரம் கோடி, 1,500 கோடி வசூல் எல்லாம் ரொம்ப சாதாரணம் என்ற வீடியோவை தேடித் தேடி எடுத்து என்ன ஆச்சு எனவும் கேள்வி கேட்டு வருகின்றனர். பொதுவாகவே, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கும் தளபதி விஜய் ரசிகர்களுக்கும் இணையத்தில் வார்த்தைப் போர் முட்டிக்கொள்ளும். சமீபகாலமாக இந்த வார்த்தைப் போரில் சூர்யா ரசிகர்களும் அட்டண்டென்ஸ் போட்டுக் கொண்டு உள்ளனர்.

goat vijay goat box office collection

ரூ.1000 கோடி வசூல்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் தமிழ் சினிமாவில் ஆயிரம் கோடி, வசூல் குவிக்கும் படமாக வேட்டையன் மாறும் என ரஜினி ரசிகர்கள் ஒருபுறம் கூறிக்கொண்டு இருந்தாலும், சூர்யா ரசிகர்கள் கங்குவா படம் தமிழ் சினிமாவில் ரூபாய் ஆயிரம் கோடி வசூலை எட்டும் முதல் படமாக இருக்கும் என ரசிகர்கள் கூறிக்கொண்டு உள்ளனர்.

goat vijay goat box office collection

காரணம் இதுவா? கோட் படத்தின் வசூல் விபரங்களும் அடுத்தடுத்து வெளியாகவுள்ள படங்களின் ரிலீஸ்களை கணக்கில் கொண்டால் கோட் படம் ரூபாய் ஆயிரம் கோடிகளை நெருங்காது என தெரிந்துவிட்டது. இதனால் விஜய் ரசிகர்கள் இணையத்தில், ஆடியோ லாஞ்ச் வைக்காத நிலையிலும் கோட் படம் ரூபாய் 413 கோடிகள் வசூல் செய்துள்ளதாக இணையத்தில் கம்பு சுத்தி வருகின்றனர். அதேநேரத்தில் விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பின்னர் வெளியான படம் என்பதால், வசூல் குறைந்து விட்டதாகவும் ஒரு பேச்சு அடிபடுகின்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X