GOAT: மட்ட பாடலுக்கு பட்டையைக் கிளப்பும் ஜப்பான் தளபதி ரசிகர்கள்.. டான்ஸ் வீடியோ அள்ளுதே!

சென்னை: தளபதி விஜய் கதாநாயகனாகவும் வில்லனாகவும் நடித்து வெளியாகியுள்ள படம் தி கோட். இந்தப் படம் இந்தியா மட்டும் இல்லாமல் 40க்கும் மேற்பட்ட வெளிநாடுகளிலும் படம் ரிலீஸ் செய்யப்பட்டது. படம் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தினைப் பார்த்த ரசிகர்கள் அழகிய தமிழ் மகன் படத்திற்குப் பின்னர் விஜய்யை நெகடிவ் கதாபாத்திரத்தில் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது என கூறி வருகின்றனர். படத்தில் உள்ள நெகடிவ் கதபாத்திரமான ஜீவன் கதாபாத்திரம் மட்ட பாடல் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்தப் பாடலுக்கு ஜப்பான் ரசிகர்கள் நடனமாடியுள்ள வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

படம் முதல் நாளே உலகம் முழுவதும் ரூபாய் 126.32 கோடிகளை வசூல் செய்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. அதேபோல் முதல் நான்கு நாட்களில் படம் ரூபாய் 288 கோடிகளை வசூல் செய்ததாக படக்குழு தெரிவித்தது. படம் பாக்ஸ் ஆஃபீஸில் வசூல் மழை பொழிந்து வருகின்றது என பேச்சுகள் அதிகம் இருக்கும்போது, கோட் படத்தினால் நஷ்டம் என தகவல் வெளியாகியுள்ளது.

goat matta song vijay

படத்தின் மொத்த பட்ஜெட்டே ரூபாய் 386 கோடிதான். இதில் முதல் நாளே படம் ரூபாய் 126.32 கோடி வசூல் செய்துவிட்டதால், முதல் வார இறுதிக்குள் படம் கிட்டத்தட்ட ரூபாய் 500 கோடி வசூல் செய்துவிடும் என நம்பப் பட்டது. இது படத்தினை தயாரித்த தயாரிப்பு நிறுவனத்திற்கு லாபத்தை அசால்ட்டாக ஈட்டிக் கொடுத்துவிடும் என பேச்சுகளும் எழுந்தது. ஆனால் படம் தமிழ் நாட்டைத் தவிர மற்ற இடங்களில் பெரிதாக எடுபடவில்லை என பேச்சுகள் எழுந்துள்ளது.

குறிப்பாக தமிழ்நாட்டினை அடுத்து கேரளாவில்தான் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம். ஆனால் அங்கும் படம் பெரிய ஈர்ப்பினை ஏற்படுத்தவில்லை. இதனால் படத்தின் வசூல் ஹப்பாக தமிழ்நாடு மாறியது. வெளி நாடுகளிலும் படம் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. ஹிந்தியில் படத்தை மல்டி ஃப்ளக்ஸ்களில் ரிலீஸ் செய்ய முடியவில்லை. அதற்கு காரணம் ஓடிடி ரிலீஸ் என கூறப்படுகின்றது.

goat matta song vijay

ரஜினி - விஜய்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு எப்படி இந்தியாவைக் கடந்து மற்ற நாடுகளிலும் தீவிரமான ரசிகர்கள் இருக்கின்றார்களோ அதேபோல் தளபதி விஜய்க்கும் தீவிரமான ரசிகர்கள் உலகநாடுகள் முழுவதும் உள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து உலகநாடுகள் முழுவதும் பரவி வாழும் தமிழர்கள் மட்டும் இல்லாமல், அங்குள்ள அந்த நாட்டு ரசிகர்களும் விஜய்யைக் கொண்டாடி வருகின்றனர்.

goat matta song vijay

ரசிகர்கள்: அப்படி ஜப்பானிலும் விஜய்க்கு தீவிரமான ரசிகர்கள் உள்ளனர். முதல் நாள் முதல் காட்சியை வெறித்தனமாக பார்த்து, தமிழ்நாட்டினைப் போல் விஜய் பட ரிலீஸின் போது திரையரங்கையே திருவிழாபோல் மாற்றிவிடுவார்கள். இப்படியான நிலையில், கோட் படத்தில் இடம் பெற்றுள்ள மட்ட பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த பாடலுக்கு த்ரிஷா நடனமாடியிருந்தார். பல ரசிகர்கள் இந்தப் பாடலுக்கு நடனமாடி, ரீல்ஸ் வீடியோ பதிவிட்டு வருகின்றனர்.

தீவிரமான விஜய் ரசிகர்கள்: இந்நிலையில், ஜப்பானைச் சேர்ந்த மூன்று பேர், மட்ட பாடலுக்கு விஜய் போலவே நடனமாடி இணையத்தில் பதிவிட்டுள்ளனர். இது மட்டும் இல்லாமல் இந்த வீடியோ இணையத்தில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. விஜய் போலவே மூவரும் நடனமாடியுள்ளனர், தீவிரமான தளபதி ரசிகர்கள் போலத் தெரிகின்றதே என கமெண்ட் செய்தும் வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X