GOAT: கோட் படத்தில் ஹிந்தி தெரியாது போடா வசனம்.. தளபதி தெளிவா தான் இருக்காரு.. ரசிகர்கள் குஷி!

சென்னை: நடிகர் விஜய் இரண்டு வேடங்களில் நடித்து வெளியாகி பாக்ஸ் ஆஃபீஸில் வசூல் செய்துவரும் படம் என்றால் அது தி கோட். நடிகர் விஜய், முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளதால், சினிமா வாழ்க்கையில் இந்தப் படம் அவரது கடைசி இரண்டாவது படம் ஆகும். இப்படி இருக்கும்போது படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்நிலையில் படம் கடந்த 5ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இப்படம் முதல் நாளே ரூபாய் 126.32 கோடிகளை வசூல் செய்தது. 2024ஆம் ஆண்டு வெளியான தமிழ் படங்களில் மாஸ் ஓப்பனிங் கிடைத்துள்ள படம் என்றால் அது தி கோட் படத்திற்குத்தான். படத்தினை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். படத்தில் நடிகை த்ரிஷா, மட்ட பாடலுக்கு நடனமாடியுள்ளார். அதேபோல் சிவகார்த்திகேயன் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கோட் படத்தினை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தில் விஜய்க்கு டீ-ஏஜிங் செய்யப்பட்டுள்ளது. படத்தினைப் பொறுத்தவரையில், டெக்னிக்கலாக மிகவும் தரமான படமாக உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல், விஜய் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் மற்ற நடிகர்களின் ரசிகர்களையும் திருப்தி படுத்த திரைக்கதையில் ஆங்காங்கே சில காட்சிகள் திரைக்கதையின் வழியிலேயே வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தோனி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித்குமார், விக்ரம் உள்ளிட்டவர்களின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையிலும் திருப்தி கொடுக்கும் வகையிலும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.

goat vijay

இப்படியான காட்சிகளைப் பார்த்த ரசிகர்கள் தியேட்டரே அதிரும் அளவிற்கு ஆரவாரம் செய்தனர். மேலும், படத்தில் சிவகார்த்திகேயன் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் இரண்டாம் பாதியில் இடம்பெற்றுள்ள மட்ட பாடலுக்கு நடிகை த்ரிஷா நடனமாடியுள்ளார். இதுவும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. மட்ட பாடலில் கில்லி படத்தில் இடம் பெற்றுள்ள 'அப்படிபோடு' பாடலின் நடன அசைவுகளும் இடம் பெற்றிருந்தது. இதுவும் ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக அமைந்தது.

goat vijay

கேப்டன்: படத்தின் முதல் காட்சியே, ஏ.ஐ., தொழில்நுட்பத்தினைக் கொண்டு உருவாக்கப்பட்ட காட்சியான கேப்டன் விஜயகாந்த் இண்ட்ரோ காட்சி சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தது. இதுவும் ரசிகர்களுக்கு பெரும் சர்ப்ரைஸாக அமைந்தது. இப்படியான நிலையில் படத்தின் ரிலீஸ்க்குப் பின்னர் படக்குழு தரப்பில் படம் குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

goat vijay

ஹிந்தி தெரியாது போடா: இந்நிலையில், படத்தில் முதல் பாடலான விசில் போடு பாடலுக்குப் பின்னர், நடிகர் விஜய் வீட்டிற்கு வருவார். அப்போது ட்ரங்க் அண்ட் ட்ரைவ் செக் செய்யும்போது, போலீஸார் ஹிந்தியில் பேசுவார்கள், அப்போது நடிகர் விஜய் ஹிந்தி தெரியாது போடா எனக் கூறுவார். இந்தக் காட்சியை இயக்குநர் வெங்கட் பிரபு படத்தின் நீளம் கருதி எடுத்துவிட்டார் என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் படம் ஓடிடியில் வெளியாகும்போது இந்தக் காட்சி கட்டாயம் இருக்கும் என எதிர்பார்க்கலாம் என கூறப்படுகின்றது.

goat vijay

ஹிந்தி திணிப்பு: நடிகர் விஜய் தற்போது, தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார். தமிழ் நாட்டினைப் பொறுத்தவரையில், அண்ணா காலம் தொடங்கி இந்தி திணிப்புக்கு இன்றைக்கு வரை தொடர்ந்து எதிர்ப்பு இருந்துகொண்டுதான் இருக்கின்றது. இரு மொழிக்கொள்கை என்பது தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவு என்பதால், அதனை பிரதிபலிக்கும் விதமாகத்தான் விஜய் இந்த வசனத்தை பேச ஒப்புக்கொண்டார் என கூறப்படுகின்றது. இந்த தகவல் விஜய் ரசிகர்களை மட்டும் இல்லாமல், தமிழக வெற்றிக் கழகத்தின் பொறுப்பாளர்கள் தொடங்கி தொண்டர்கள் வரை அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X