GOAT Box Office Day 8: வசூலில் ஆமை வேகம் காட்டும் தளபதியின் கோட்.. திணறும் திரையரங்க உரிமையாளர்கள்!

சென்னை: விஜய் கதாநாயகனாகவும் வில்லனாகவும் நடித்து வெளியாகியுள்ள படம் தி கோட். இந்தியா மட்டும் இல்லாமல் 40க்கும் மேற்பட்ட வெளிநாடுகளிலும் படம் ரிலீஸ் செய்யப்பட்டது. செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தினைப் பார்த்த ரசிகர்கள் அழகிய தமிழ் மகன் படத்திற்குப் பின்னர் விஜய்யை நெகடிவ் கதாபாத்திரத்தில் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது என கூறினர். படம் முதல் நாளே உலகம் முழுவதும் ரூபாய் 126.32 கோடிகளை வசூல் செய்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. அதேபோல் முதல் நான்கு நாட்களில் ரூபாய் 288 கோடி வசூல் செய்ததாக படக்குழு தெரிவித்தது. இந்நிலையில் படத்தின் எட்டாவது நாள் வசூல் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

நடிகர் விஜய் சினிமாவில் இருந்து விலகி முழுக்க முழுக்க அரசியலில் ஈடுபடப்போவதாக ஏற்கனவே அறிவித்துவிட்டார். இதனால் கோட் படம், அவரது சினிமா வாழ்க்கையில் கடைசி இரண்டாவது படமாக அமைந்துள்ளது. படம் ரிலீஸ் ஆன முதல் சில நாட்களில் படம் பார்த்த அவரது தீவிர ரசிகர்கள் படத்தினைக் கொண்டாடி வருகின்றனர். படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். அவருடன், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், மைக் மோகன், ஜெய்ராம், பிரேம் ஜி, வைபவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். த்ரிஷா ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். சிவகார்த்திகேயன் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

goat vijay goat box office collection

படம் பார்த்த ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் மேல் சர்ப்ரைஸ் கொடுத்துக் கொண்டே இருந்தார் இயக்குநர் வெங்கட் பிரபு. குறிப்பாக தோனி களமிறங்கும் காட்சியெல்லாம் திரையில் காட்டப்பட்டபோது ரசிகர்கள் ஆரவாரத்தால் திரையரங்கமே அதிர்ந்தது. படம் தமிழ் நாட்டில் மட்டும் சோலோவாக 1,100 திரையரங்குகளில் வெளியானது. இதுமட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் சுமார் 5000 திரையரங்குகளில் படம் ரிலீஸ் செய்யப்பட்டது. படம் முதல் நான்கு நாட்களில் ரூபாய் 288 கோடிகளை வசூல் செய்ததாக படக்குழு தெரிவித்தது. நான்கு நாட்களில் விஜய் படத்தின் வசூல் வெறும் 288 கோடி என்பது அவரது ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

நம்பிக்கை: படத்தின் மொத்த பட்ஜெட்டே ரூபாய் 386 கோடிதான். இதில் முதல் நாளே படம் ரூபாய் 126.32 கோடி வசூல் செய்துவிட்டதால், முதல் வார இறுதிக்குள் படம் கிட்டத்தட்ட ரூபாய் 500 கோடி வசூல் செய்துவிடும் என நம்பப்பட்டது. இது படத்தினை தயாரித்த தயாரிப்பு நிறுவனத்திற்கு லாபத்தை அசால்ட்டாக ஈட்டிக் கொடுத்துவிடும் என பேச்சுகளும் எழுந்தது. ஆனால் படம் தமிழ் நாட்டைத் தவிர மற்ற இடங்களில் பெரிதாக எடுபடவில்லை என பேச்சுகள் எழுந்துள்ளது.

goat vijay goat box office collection

எடுபடவில்லை: குறிப்பாக தமிழ்நாட்டினை அடுத்து கேரளாவில்தான் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம். ஆனால் அங்கும் படம் பெரிய அளவில் பாக்ஸ் ஆஃபீஸில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால் படத்தின் வசூல் ஹப்பாக தமிழ்நாடு மாறியது. வெளி நாடுகளிலும் படம் பெரிய வரவேற்ப்பைப் பெறவில்லை. ஹிந்தியில் படத்தை மல்டி ஃப்ளக்ஸ்களில் ரிலீஸ் செய்ய முடியவில்லை. அதற்கு காரணம் ஓடிடி ரிலீஸ் என காரணம் கூறப்படுகின்றது. இப்படியான நிலையில், தென்னிந்தியாவில் மிகப்பெரிய சினிமா மார்க்கெட்டினைக் கொண்ட சினிமா வுட்கள் என்றால், அதில் தெலுங்கு சினிமாவும் இருக்கும். ஆனால் தெலுங்கில் படம் கிட்டத்தட்ட 13 கோடி ரூபாய் விநியோகிஸ்தர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.

goat vijay goat box office collection

வசூல் விபரம்: இந்நிலையில் படம் வெளியாகி நேற்றுடன் அதாவது செப்டம்பர் 12ஆம் தேதியுடன் 8 நாட்கள் ஆகின்றது. ஆனால் இந்த 8 நாட்களில் படத்தின் வசூல் என்பது படக்குழு எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. குறிப்பாக பல திரையரங்குகளில் விரல் விட்டு எண்ணும் அளவிற்குத்தான் மக்கள் படம் பார்க்க வருகின்றனர் என திரையரங்க உரிமையாளர்கள் வருத்தப்படுகின்றனர். மாஸ் ஹீரோ விஜய் படத்திற்கு ஒரு வாரத்திற்கு மேல் ரசிகர்கள் வரவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கின்றது என சினிமா வட்டாரங்களில் பேச்சுகள் எழுந்துள்ளது. படம் முதல் 8 நாளில், ரூபாய் 355 கோடிகள் முதல் ரூபாய் 365 கோடிகள் வரை வசூல் செய்திருக்கும் என பாக்ஸ் ஆஃபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

goat vijay goat box office collection

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X