GOAT: சிரிக்கவும் முடியாமல் அழவும் முடியாமல் தவிக்கும் கோட் படக்குழு.. வசூலில் என்னதான் பிரச்சனை!
சென்னை: தளபதி விஜய், சினிமாவில் இருந்து விலகி ஒட்டுமொத்தமாக அரசியலில் பயணிக்கவுள்ளார். இதனால் இவரது கடைசி இரண்டாவது படமாக கோட் படம் அமைந்தது. இந்தப் படத்தினை ஏ.ஜி.எஸ்., நிறுவனம் தயாரித்தது. வெங்கட் பிரபு இயக்கினார். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்தார். படம் கடந்த 5ஆம் தேதி ரிலீஸ் ஆனது. படம் தமிழ் நாட்டில் மட்டும் 1100 ஸ்கீன்களில் ரிலீஸ் செய்யப்பட்டது. இது இல்லாமல் 40க்கும் மேற்பட்ட வெளிநாடுகளிலும் படம் ரிலீஸ் ஆனது. அதேபோல் படம், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளிலும் ரிலீஸ் செய்யப்பட்டது. படத்தின் வசூல் படக்குழு எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்ற பேச்சு பரவலாக பேசப்படுகின்றது. படத்தின் வசூல் குறித்து கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம்.
கோட் படத்தின் பட்ஜெட் ரூபாய் 386 கோடிகள் என படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியே கூறியிருந்தார். இதில் விஜய்யின் சம்பளம் மட்டும் ரூபாய் 200 கோடி. படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்தது மட்டும் இல்லாமல், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், மஒக் மோகன், ஜெய்ராம், பிரேம் ஜி, வைபவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். த்ரிஷா ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். சிவகார்த்திகேயன் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்கள் மட்டும் இல்லாமல், விஜயகாந்த் நடித்துள்ளதைப் போல் ஏ.ஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி காட்சி உருவாக்கப்படது.

படம் முதல் நாளில் ரூபாய் 126.32 கோடிகளை வசூல் செய்தது என படக்குழுவே தெரிவித்தது. அதன் பின்னர் முதல் நான்கு நாட்களில் படத்தின் வசூல் ரூபாய் 288 கோடிகள் என தெரிவித்தது. படம் ரிலீஸ் ஆகி நேற்றுடன் 9 நாட்கள் ஆகின்றது. ஆனால், முதல் நான்கு நாட்கள் வசூலுக்குப் பின்னர் படக்குழு, படத்தின் வசூல் தொடர்பாக எதுவும் கூறவில்லை. இதற்கு பல காரணங்கள் என சினிமா வட்டாரத்தில் பேச்சுகள் எழுந்துள்ளது.
நஷ்டம்: படம் தமிழ் நாட்டில் மட்டும் ஒர்க்-அவுட் ஆகியுள்ளது. மற்ற மாநிலங்களில் நல்ல ஓப்பனிங் கிடைத்தாலும், அதன் பின்னர் நல்ல பிக்-அப் கிடைக்கவில்லை. குறிப்பாக தெலுங்கில் படம் நல்ல வசூல் கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தெலுங்கு டப்பிங் உரிமையை ரூபாய் 16 கோடிக்கு வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு கிட்டத்தட்ட 11 முதல் 13 கோடிகள் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

எடுபடவில்லை: கேரளாவிலும் படம் எடுபடவில்லை. இந்தவாரம் கேரளாவில் ஏ.ஆர்.எம் படம் ரிலீஸ் ஆனதால் கோட் கிட்டத்தட்ட ஓரம் கட்டப்பட்டுவிட்டது. கன்னடத்திலுல் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வசூல் இல்லை. ஹிந்தியில் மல்டி ஃப்ளக்ஸ்களில் படத்தினை ரிலீஸ் செய்யமுடியவில்லை. சிங்கிள் ஸ்க்ரீன்களில் மட்டும் படம் ரிலீஸ் ஆகியுள்ளது. ஆனால் அங்கேயும் அந்த அளவிற்கு பெரும் வசூல் இல்லை.

4 மாவட்டங்கள்: ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல் தமிழ்நாடுதான் தற்போது கோட் படத்தின் வசூல் ஹப்பாக மாறியுள்ளது. ஆனால் தமிழ்நாட்டிலும் பாக்ஸ் ஆஃபீஸில் மாபெரும் கலெக்ஷன் எனக் கூறிவிட முடியாது. காரணம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் உள்ள மிகப்பெரிய திரையரங்குகளில் படம் நல்ல வசூலையே குவித்து வருகின்றது. இது மட்டும் இல்லாமல், பல காட்சிகள் இப்போதும் ஹவுஸ் புல் காட்சிகளாக உள்ளது.

கப்-சிப் மோட்: ஆனால் மேற்குறிப்பிட்ட நான்கு மாவட்டங்களைக் கடந்து வந்துவிட்டால், நூற்றுக்கணக்கான திரையரங்குகள் காலியகவே உள்ளது. மாவட்டத்திற்கு ஒரு சில திரையரங்குகளில் மட்டுமே ஓரளவுக்கு ரசிகர்கள் கூட்டம் உள்ளது. மற்றபடி, ஒரு காட்சிக்கு குறைந்தது 10 பேர் முதல் படம் பார்க்க வருகின்றனர். இதனால் மற்ற மாவட்டங்களில் படத்தின் வசூல் படுத்தே விட்டது எனக் கூறலாம். இதனால் படக்குழு மகிழ்ச்சி அடையமுடியாமல், வருத்தத்திலும் தங்களை நிலைநிறுத்திக் கொள்ளாமல் கப்சிப் என இருக்கின்றார்கள் என கூறப்படுகின்றது.


Click it and Unblock the Notifications











