GOAT Box Office Day 9: தளபதியைக் கொண்டாடும் ஃபேமிலி ஆடியன்ஸ்..ராஜ வசூலில் கோட்.. விபரம் இதோ!
சென்னை: தளபதி விஜய் நடிப்பில் சோலோவாக ரிலீஸ் ஆன படம் தி கோட். இந்தப் படத்தினை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். படத்தினை ஏ.ஜி.எஸ் எண்டர்டைமெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் மொத்த தயாரிப்புச் செலவு மட்டும் ரூபாய் 386 கோடி என தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்திருந்தார். இதுமட்டும் இல்லாமல், படத்தில் நடிக்க விஜய்க்கு ரூபாய் 200 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டது எனவும் அவரே ஒப்புக்கொண்டார். படம் முதல் நான்கு நாட்களில் ரூபாய் 288 கோடிகளை வசூல் செய்தது என படக்குழு தரப்பில் இருந்தே தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் படத்தின் வசூல் தொடர்பாக எதுவும் அறிவிக்கப்படவில்லை.
படத்தில் நடிகர் மோகன் வில்லன் கதாபாத்திரம் எனக் கூறப்பட்டாலும், விஜய்தான் மெயின் வில்லனாக திரைக்கதை அமைக்கப்பட்டது. இதுமட்டும் இல்லாமல், படத்தினைப் பார்த்த ரசிகர்கள் விஜய் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதை கொண்டாடினர். படத்தில் விஜய்க்கு டீ-ஏஜிங் செய்யப்பட்டுள்ளது. படத்தினைப் பொறுத்தவரையில், டெக்னிக்கலாக மிகவும் தரமான படமாக உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல், விஜய் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் மற்ற நடிகர்களின் ரசிகர்களையும் திருப்தி படுத்த திரைக்கதையில் ஆங்காங்கே சில காட்சிகள் திரைக்கதையின் வழியிலேயே வைக்கப்பட்டுள்ளது.

படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். அவருடன், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், மைக் மோகன், ஜெய்ராம், பிரேம் ஜி, வைபவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். த்ரிஷா ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். சிவகார்த்திகேயன் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படம் பார்த்த ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் மேல் சர்ப்ரைஸ் கொடுத்துக் கொண்டே இருந்தார் இயக்குநர் வெங்கட் பிரபு. குறிப்பாக தோனி களமிறங்கும் காட்சியெல்லாம் திரையில் காட்டப்பட்டபோது ரசிகர்கள் ஆரவாரத்தால் திரையரங்கமே அதிர்ந்தது. படம் தமிழ் நாட்டில் மட்டும் சோலோவாக 1,100 திரையரங்குகளில் வெளியானது. இந்த வாரமும் படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை என்பதால் கோட் படம் வசூலில் கெத்து காட்டும் என எதிர்பார்க்கலாம்.

ஓவர் ஹைப்: கோட் படம் தெலுங்கில் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. அதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றது. குறிப்பாக படத்தின் க்ளைமேக்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், மகேந்திர சிங் தோனி என சி.எஸ்.கேவுக்கு ஓவர் பில்டப் கொடுத்தது. மேலும், படம் ரிலீஸ் ஆன காலகட்டத்தில் ஆந்திரா மற்றும் தெலங்கானா பெரும் வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டு இருந்தது. இதனாலும் படத்தின் வசூல் குறைந்ததாக கூறப்படுகின்றது.

நஷ்டம்: அதேபோல், கோட் படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமம் மட்டும் ரூபாய் 16 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் படம் மிகவும் சுமாராகவே ஓடியதால் இதுவரை சுமார் 5 கோடி ரூபாய் கணிசமான அளவு ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளது என கூறப்படுகின்றது. இதனால் ரூபாய் 11 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என கூறப்படுகின்றது.

வசூல் விபரம்: இந்நிலையில் படம் ரிலீஸ் ஆகி நேற்றுடன் அதாவது செப்டம்பர் 13ஆம் தேதியுடன் 9 நாட்கள் ஆகின்றது. இந்த 9 நாட்களில் படத்தின் வசூல் என்பது படக்குழுவினர் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்றாலும், ஓரளவிற்கு கணிசமாக உயர்ந்து கொண்டே உள்ளது. இப்படியான நிலையில், 9 நாட்களில் படத்தின் வசூல் என்பது ரூபாய் 360 முதல் 370 கோடிகள் வரை வசூல் ஆகியிருக்கும் என பாக்ஸ் ஆஃபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படம் எவ்வளவு வசூல் செய்தது என்பது தொடர்பாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 2024ஆம் ஆண்டில் இதுவரை வெளியான தமிழ் படங்களில் கோட் படம்தான் அதிக வசூல் செய்து முதல் இடத்தில் உள்ளது.


Click it and Unblock the Notifications











