GOAT Box Office Day 15: தளபதியின் கோட் படத்துக்கே விபூதி அடிச்சுட்டாங்களா? வசூலில் திணறுதாமே? விவரம்

சென்னை: விஜய் கதாநாயகனாகவும் வில்லனாகவும் நடித்து வெளியாகியுள்ள படம் தி கோட். இந்தியா மட்டும் இல்லாமல் 40க்கும் மேற்பட்ட வெளிநாடுகளிலும் படம் ரிலீஸ் செய்யப்பட்டது. செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தினைப் பார்த்த ரசிகர்கள் அழகிய தமிழ் மகன் படத்திற்குப் பின்னர் விஜய்யை நெகடிவ் கதாபாத்திரத்தில் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது என கூறினர். படம் முதல் நாளே உலகம் முழுவதும் ரூபாய் 126.32 கோடிகளையும் நான்கு நாட்களில் ரூபாய் 288 கோடிகளையும், 13 நாட்களில் ரூபாய் 413 கோடிகளையும் வசூல் செய்ததாக படக்குழு தெரிவித்தது. இந்நிலையில் படத்தின் 15வது நாள் வசூல் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

நடிகர் விஜய் சினிமாவில் இருந்து விலகி முழுக்க முழுக்க அரசியலில் ஈடுபடப்போவதாக ஏற்கனவே அறிவித்துவிட்டார். இதனால் கோட் படம், அவரது சினிமா வாழ்க்கையில் கடைசி இரண்டாவது படம். சமீபகாலங்களில் ஒரு படத்தின் வெற்றியை வசூல்தான் தீர்மானிக்கின்றது என்கின்ற சூழல் உருவாகிவிட்டது. அப்படி இருந்தும், கோட் படத்தை வசூல் ரீதியாகவும் நாட்கள் ரீதியாகவும் படத்தை திரையரங்குகளில் வெற்றிப் படமாக மாற்றவேண்டும் என்ற எண்ணத்தில் அவரது ரசிகர்களும் தொண்டர்களும் இருந்தனர். குறிப்பாக விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பின்னர் ரிலீஸ் ஆன படம் என்பதால் இந்தப் படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பும் இருந்தது.

goat vijay goat box office collection

படம் ரிலீஸ் ஆன முதல் சில நாட்களில் படம் பார்த்த அவரது தீவிர ரசிகர்கள் படத்தினைக் கொண்டாடினர். படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். அவருடன், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், மஒக் மோகன், ஜெய்ராம், பிரேம் ஜி, வைபவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். த்ரிஷா ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். சிவகார்த்திகேயன் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஸ்க்ரீன்கள்: படம் பார்த்த ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் மேல் சர்ப்ரைஸ் கொடுத்துக் கொண்டே இருந்தார் இயக்குநர் வெங்கட் பிரபு. குறிப்பாக தோனி களமிறங்கும் காட்சியெல்லாம் திரையில் காட்டப்பட்டபோது ரசிகர்கள் ஆரவாரத்தால் திரையரங்கமே அதிர்ந்தது. படம் தமிழ் நாட்டில் மட்டும் சோலோவாக 1,100 திரையரங்குகளில் வெளியானது. இதுமட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் சுமார் 5000 திரையரங்குகளில் படம் ரிலீஸ் செய்யப்பட்டது. படம் முதல் 13 நாட்களில் ரூபாய் 413 கோடிகளை வசூல் செய்ததாக படக்குழு தெரிவித்தது. 13 நாட்களில் விஜய் படத்தின் வசூல் வெறும் 413 கோடி என்பது அவரது ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

goat vijay goat box office collection

திணறல்: ஒரு படம் ரூபாய் 100 கோடிகளை வசூல் செய்கின்றது என்றாலே பெரும் வெற்றி பெற்றப்படமாக கருதப்படும். ஆனாலும் விஜய் போன்ற கலெக்‌ஷன் கிங் கதாநாயகனின் படம் 13 நாட்கள் திரையரங்கில் ஓடியும் 413 கோடிகளை மட்டுமே வசூல் செய்துள்ளது என்பது பெரும் அதிர்ச்சிதான். குறிப்பாக விஜய்க்கு இந்தப் படத்தில் சம்பளம் மட்டும் ரூபாய் 200 கோடிகள். இவரது சம்பளத்துடன் சேர்த்து படத்தை உருவாக்க ஆன மொத்தம் செலவு ரூபாய் 386 கோடிகள் என தயாரிப்பாளரே கூறினார். அதன் பின்னர் படத்தின் புரோமோசனுக்கு ஆன செலவை எல்லாம் கணக்கில் வைத்து ரவுண்டாக ரூபாய் 400 கோடிகள் செலவு என வைத்துக் கொண்டாலும், இரண்டு வாரங்கள் படம் ஓடிய பின்னரே முதலீடு செய்த தொகையை படம் வசூல் செய்துள்ளது.

goat vijay goat box office collection

வசூல் விவரம்: படம் இன்னும் ஒரு வாரத்திற்கு கட்டாயம் ஓடும் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுவும் சிங்கிள் ஸ்கீர்ன் தியேட்டர்களில் படம் ஓடும், ஆனால் மல்டி ஸ்கீரீன் தியேட்டரில் படத்தின் காட்சிகளும் திரைகளின் எண்ணிக்கையும் இன்றில் இருந்து அதாவது செப்டம்பர் 20ஆம் தேதியில் இருந்து குறையும். இதனால் வரும் காலங்களில் படத்தின் வசூல் இன்னும் அடிவாங்கும் எனக் கூறலாம். இப்படியான நிலையில் படம் முதல் 15 நாளில் ரூபாய் 420 கோடிகள் முதல் 425 கோடிகள் வரை வசூல் செய்திருக்க வாய்ப்புள்ளது என பாக்ஸ் ஆஃபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படத்தின் மொத்த வசூல் குறித்து படக்குழு விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X