GOAT Box Office Day 16: மொத்தமாக இறங்கிய 7 படங்கள்.. சைலண்ட்டாக ஓடும் தளபதியின் கோட்.. வசூல் விபரம்!

சென்னை: தளபதி விஜய் தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் ஒரே நடிகராக வலம் வந்துகொண்டு இருக்கின்றார். இவரது சம்பளத்தை எட்ட மற்ற முன்னணி நடிகர்களுக்கே இன்னும் பல ஆண்டுகள் தேவைப்படும் எனக் கூறும் அளவுக்கு வசூலிலும் கிங்காக திகழ்கின்றார். விஜய்யை நம்பி சினிமாவில் களமிறங்கினால் படம் வெற்றியோ தோல்வியோ, அதைப் பற்றி கவலைப் படவேண்டியதில்லை. எப்படியும் செலவு செய்த பணத்தை வட்டியும் முதலுமாக வசூல் செய்துவிடலாம். இதுமட்டும் இல்லாமல், ஓடிடி உரிமை, தொலைக்காட்சி உரிமை என மொத்தமாக பெரிய லாபத்தை ஈட்டிவிட முடியும். இப்படியான நிலையில் இருக்கும் விஜய்யின் நடிப்பில் வெளியான கோட் படத்தின் வசூல் விபரம் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

விஜய் கதாநாயகனாகவும் வில்லனாகவும் நடித்து வெளியாகியுள்ள படம் தி கோட். இந்தியா மட்டும் இல்லாமல் 40க்கும் மேற்பட்ட வெளிநாடுகளிலும் படம் ரிலீஸ் செய்யப்பட்டது. செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தினைப் பார்த்த ரசிகர்கள் அழகிய தமிழ் மகன் படத்திற்குப் பின்னர் விஜய்யை நெகடிவ் கதாபாத்திரத்தில் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது என கூறினர். படம் முதல் நாளே உலகம் முழுவதும் ரூபாய் 126.32 கோடிகளையும் நான்கு நாட்களில் ரூபாய் 288 கோடிகளையும், 13 நாட்களில் ரூபாய் 413 கோடிகளையும் வசூல் செய்ததாக படக்குழு தெரிவித்தது. இந்நிலையில் படத்தின் 16வது நாள் முடிவில் படத்தின் வசூல் விபரங்கள் குறித்து பாக்ஸ் ஆஃபீஸ் வட்டாரங்களில் பல தகவல்கள் உலா வருகின்றது. குறிப்பாக இந்த வாரம் தமிழில் மட்டும் 7 படங்கள் ரிலீஸ் ஆனது. அதாவது, லப்பர் பந்து, கடைசி உலகப்போர், நந்தன், கோழிப்பண்ணை செல்லதுரை, தோழர் சேகுவேரா, தோனிமா மற்றும் ஹஹ் மீ மோர் போன்ற படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படங்கள் ரிலீஸினதால் கோட் படத்தின் காட்சிகளும் திரையரங்குகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.

goat vijay goat box office collection

நடிகர் விஜய் சினிமாவில் இருந்து விலகி முழுக்க முழுக்க அரசியலில் ஈடுபடப்போவதாக ஏற்கனவே அறிவித்துவிட்டார். இதனால் கோட் படம், அவரது சினிமா வாழ்க்கையில் கடைசி இரண்டாவது படம். சமீபகாலங்களில் ஒரு படத்தின் வெற்றியை வசூல்தான் தீர்மானிக்கின்றது என்கின்ற சூழல் உருவாகிவிட்டது. அப்படி இருந்தும், கோட் படத்தை வசூல் ரீதியாகவும் நாட்கள் ரீதியாகவும் படத்தை திரையரங்குகளில் வெற்றிப் படமாக மாற்றவேண்டும் என்ற எண்ணத்தில் அவரது ரசிகர்களும் தொண்டர்களும் இருந்தனர். குறிப்பாக விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பின்னர் ரிலீஸ் ஆன படம் என்பதால் இந்தப் படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பும் இருந்தது.

goat vijay goat box office collection

படம் ரிலீஸ் ஆன முதல் சில நாட்களில் படம் பார்த்த அவரது தீவிர ரசிகர்கள் படத்தினைக் கொண்டாடினர். படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். அவருடன், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், மஒக் மோகன், ஜெய்ராம், பிரேம் ஜி, வைபவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். த்ரிஷா ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். சிவகார்த்திகேயன் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

குறைந்த திரையரங்குகள்: படம் தமிழ் நாட்டில் மட்டும் சோலோவாக 1,100 திரையரங்குகளில் வெளியானது. இதுமட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் சுமார் 5000 திரையரங்குகளில் படம் ரிலீஸ் செய்யப்பட்டது. படம் முதல் 13 நாட்களில் ரூபாய் 413 கோடிகளை வசூல் செய்ததாக படக்குழு தெரிவித்தது. 13 நாட்களில் விஜய் படத்தின் வசூல் வெறும் 413 கோடி என்பது அவரது ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. இப்படியான நிலையில், தமிழில் இந்த வாரம் 7 படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளதால் கோட் படத்தின் காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளது. இது கோட் படத்தின் வசூலை பாதித்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள படங்களில் நந்தன், கோழிப்பண்ணை செல்லதுரை, லப்பர் பந்து மற்றும் கடைசி உலகப்போர் படங்களுக்கு நல்ல விமர்சனங்கள் வந்து கொண்டு இருக்கின்றது. இதனால் கோட் படத்தின் காட்சிகளைக் குறைத்து, இந்தப் படங்களின் காட்சிகளை அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது. இதனாலும் கோட் படத்தின் வசூல் அடிவாங்கும் என பாக்ஸ் ஆஃபீஸ் வட்டாரங்களில் பேச்சுகள் அதிகமாகியுள்ளது.

goat vijay goat box office collection

வசூல் விபரம்: படம் இன்னும் ஒரு வாரத்திற்கு எப்படியும் ஓடும் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுவும் சிங்கிள் ஸ்கீர்ன் தியேட்டர்களில் படம் ஓடும், ஆனால் மல்டி ஸ்கீரீன் தியேட்டரில் படத்தின் காட்சிகளும் திரைகளின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது. இப்படியான நிலையில் படம் முதல் 16 நாளில் ரூபாய் 425 கோடிகள் முதல் 430 கோடிகள் வரை வசூல் செய்திருக்க வாய்ப்புள்ளது என பாக்ஸ் ஆஃபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படத்தின் மொத்த வசூல் குறித்து படக்குழு விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X