GOAT Box Office Day 17:வட இந்தியாவில் வாகை சூடும் தளபதியின் கோட்.. பாக்ஸ் ஆஃபீஸில் வசூல் வேட்டை!

சென்னை: தளபதி விஜய் இரட்டை வேடங்களில் நடித்து வெளியாகி திரையரங்குகளில் மூன்றாவது வாரத்தில் ஓடிக்கொண்டு உள்ள படம் தி கோட். இந்தப் படம் கடந்த் செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆனது.. தமிழ் நாட்டில் மட்டும் படம் கிட்டத்தட்ட 1,100 திரையரங்குகளில் சோலோவாக ரிலீஸ் ஆனது. இந்தியா முழுவது, சுமார் 5 ஆயிரம் ஸ்க்ரீன்களில் ரிலீஸ் ஆனது. இந்தியா மட்டும் இல்லாமல் 40க்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் படம் செய்யப்பட்டது. இந்நிலையில் படத்தின் வசூல் விபரங்கள் குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் ஒரே நடிகராக வலம் வந்துகொண்டு இருக்கின்றார். இவரது சம்பளத்தை எட்ட மற்ற முன்னணி நடிகர்களுக்கே இன்னும் பல ஆண்டுகள் தேவைப்படும் எனக் கூறும் அளவுக்கு வசூலிலும் கொடிகட்டிப் பறக்கின்றார். விஜய்யை நம்பி சினிமாவில் களமிறங்கினால் படம் வெற்றியோ தோல்வியோ, அதைப் பற்றி கவலைப் படவேண்டியதில்லை. எப்படியும் செலவு செய்த பணத்தை வட்டியும் முதலமாக வசூல் செய்துவிடலாம். இதுமட்டும் இல்லாமல், ஒடிடி உரிமை, தொலைக்காட்சி உரிமை என மொத்தமாக பெரிய லாபத்தை ஈட்டிவிட முடியும் என்ற நம்பிக்கையை தயாரிப்பாளர்கள் மத்தியில் உருவாக்கிவிட்டார்.

goat vijay goat box office collection

கோட் படம் முதல் நாளே உலகம் முழுவதும் ரூபாய் 126.32 கோடிகளையும் நான்கு நாட்களில் ரூபாய் 288 கோடிகளையும், 13 நாட்களில் ரூபாய் 413 கோடிகளையும் வசூல் செய்ததாக படக்குழு தெரிவித்தது. இந்த வாரம் தமிழில் மட்டும் 7 படங்கள் ரிலீஸ் ஆகிடுள்ளது அதாவது, லப்பர் பந்து, கடைசி உலகப்போர், நந்தன், கோழிப்பண்ணை செல்லதுரை, தோழர் சேகுவேரா, தோனிமா மற்றும் ஹஹ் மீ மோர் போன்ற படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படங்களில் ரிலீஸினால் கோட் படத்தின் காட்சிகளும் திரையரங்குகளின் எண்ணிக்கையும் தமிழ் நாட்டில் குறைந்துள்ளது.

goat vijay goat box office collection

வட இந்தியா: ஆனால் கோட் படத்தினை ஹிந்தியில் பார்த்த ரசிகர்கள் படத்தைக் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டி இருப்பதால் தோனி ரசிகர்கள் வெறித்தனமாக படத்திற்கு ஆதரவு அளித்து வருவதாக கூறப்படுகின்றது. படம் இரண்டாவது வாரத்தை எட்டியிருந்தாலும் பல காட்சிகள் ஹஃபுஸ் புல் காட்சிகளாக உள்ளது என தகவல்கள் வெளிவருகின்றது. இதனால் வட இந்தியாவில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது மட்டும் இல்லாமல், வசூலிலும் வாகை சூடி வருகின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

goat vijay goat box office collection

படக்குழு: தமிழ்நாட்டில் ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு ஆதரவு குறைந்து வந்தாலும், வட இந்தியாவில் படத்திற்கு இரண்டாவது வாரத்தில் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். அவருடன், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், மஒக் மோகன், ஜெய்ராம், பிரேம் ஜி, வைபவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். த்ரிஷா ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். சிவகார்த்திகேயன் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

goat vijay goat box office collection

வசூல் விபரம்: தமிழ்நாட்டினைப் பொறுத்தவரையில் சிங்கிள் ஸ்கீர்ன் தியேட்டர்களில் படம் ஓடும் இன்னும் ஒரு வாரத்திற்கு கேரண்டியாக ஓடும். ஆனால் மல்டி ஸ்கீரீன் தியேட்டரில் படத்தின் காட்சிகளும் திரைகளின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைக்கப்படும். ஆனால் வட இந்தியாவில் படத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ளதால், வசூலில் மீண்டும் பாக்ஸ் ஆஃபீஸ் நிறையும் என கூறப்படுகின்றது. முதல் இரண்டு வாரங்களில் வட இந்தியாவில் மட்டும் படம், ரூபாய் 24.59 கோடிகளை வசூல் செய்துள்ளது. இப்படியான நிலையில் படம் முதல் 17 நாளில் ரூபாய் 440 கோடிகள் முதல் 445 கோடிகள் வரை வசூல் செய்திருக்க வாய்ப்புள்ளது என பாக்ஸ் ஆஃபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படத்தின் மொத்த வசூல் குறித்து படக்குழு விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

goat vijay goat box office collection

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X