GOAT: கோட் படத்தில் கேமியோ.. எஸ்.கே. முதல் தேர்வு இல்லை.. அவரு மட்டும் நடிச்சிருந்தா - வெங்கட் பிரபு

சென்னை: தளபதி விஜய் நடிப்பில் சோலோவாக ரிலீஸ் ஆன படம் தி கோட். இந்தப் படத்தினை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். படத்தினை ஏ.ஜி.எஸ் எண்டர்டைமெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் மொத்த தயாரிப்புச் செலவு மட்டும் ரூபாய் 386 கோடி என தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்திருந்தார். இதுமட்டும் இல்லாமல், படத்தில் நடிக்க விஜய்க்கு ரூபாய் 200 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டது எனவும் அவரே ஒப்புக்கொண்டார். படம் முதல் நான்கு நாட்களில் ரூபாய் 288 கோடிகளை வசூல் செய்தது என படக்குழு தரப்பில் இருந்தே தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் படத்தின் வசூல் தொடர்பாக எதுவும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் படத்தின் ரிலீஸ்க்குப் பின்னர் படம் குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு பல்வேறு தகவல்களை பகிர்ந்து வருகின்றார். அது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

படத்தில் நடிகர் மோகன் வில்லன் கதாபாத்திரம் எனக் கூறப்பட்டாலும், விஜய்தான் மெயின் வில்லனாக திரைக்கதை அமைக்கப்பட்டது. இதுமட்டும் இல்லாமல், படத்தினைப் பார்த்த ரசிகர்கள் விஜய் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதை கொண்டாடினர். படத்தில் விஜய்க்கு டீ-ஏஜிங் செய்யப்பட்டுள்ளது. படத்தினைப் பொறுத்தவரையில், டெக்னிக்கலாக மிகவும் தரமான படமாக உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல், விஜய் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் மற்ற நடிகர்களின் ரசிகர்களையும் திருப்தி படுத்த திரைக்கதையில் ஆங்காங்கே சில காட்சிகள் திரைக்கதையின் வழியிலேயே வைக்கப்பட்டுள்ளது.

goat vijay simbu sivakarthikeyan

குறிப்பாக தோனி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித்குமார், விக்ரம் உள்ளிட்டவர்களின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையிலும் திருப்தி கொடுக்கும் வகையிலும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. படத்தின் முதல் இண்ட்ரோ காட்சியே கேப்டன் விஜயகாந்த் காட்சியாக இருந்ததால், ரசிகர்கள் ஆரவாரத்தில் குதித்தனர். குறிப்பாக இந்தக் காட்சியில் அனைவரும் எதிர்பார்த்தது விஜய்யின் இண்ட்ரோவைத்தான், ஆனால் விஜயகாந்த் இண்ட்ரோ திரையில் காண்பிக்கப்பட்டதும், ஆரவாரத்தில் ரசிகர்கள் துள்ளிக்குதித்தனர்.

த்ரிஷா: படத்தில் சிவகார்த்திகேயன் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் இரண்டாம் பாதியில் இடம்பெற்றுள்ள மட்ட பாடலுக்கு நடிகை த்ரிஷா நடனமாடியுள்ளார். இதுவும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. மட்ட பாடலில் கில்லி படத்தில் இடம் பெற்றுள்ள 'அப்படிபோடு' பாடலின் நடன அசைவுகளும் இடம் பெற்றிருந்தது. இதுவும் ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக அமைந்தது.

goat vijay simbu sivakarthikeyan

எஸ்.கே: படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியின்போதுதான் சிவகார்த்திகேயன் கேமியோ இடம் பெற்றிருக்கும். அந்தக் காட்சியின்போது, சிவகார்த்திகேயனிடம், நடிகர் விஜய், "துப்பாக்கிய புடிங்க சிவா" எனக் கூறுவார். இந்த டயலாக்கை அனைவரும் கொண்டாடினர். சினிமாவில் இருந்து விலகி, அரசியலுக்குச் செல்லும் விஜய், சினிமாவை அடுத்த தலைமுறை நடிகரிடம் சினிமாவை ஒப்படைப்பதைப் போல் இருக்கின்றது எனக் கூறுகின்றார் என சிவகார்த்திகேயன் ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் கொண்டாடினர்.

goat vijay simbu sivakarthikeyan

முதல் தேர்வு: இப்படியான நிலையில், சிவகார்த்திகேயன் நடித்த கேமியோ கதாபாத்திரத்திற்கு முதலில் தேர்வு செய்யப்பட்டது, நடிகர் சிம்பு தான் என வெங்கட் பிரபு கூறியுள்ளார். சிம்புவிடம் படத்தில் நடிக்க இது தொடர்பாக கேட்டபோது, அவர் நடிக்க விருப்பம் இருந்தும், சரியான தேதிகள் இல்லாததால் நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர்தான் சிவகார்த்திகேயனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, அவர் இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த தகவல் சிவகார்த்திகேயன் ரசிகர்களையும் விஜய் ரசிகர்களையும் கொஞ்சம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

goat vijay simbu sivakarthikeyan

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X