GOAT: கோட் படத்தில் மங்காத்தா காட்சி? தல- தளபதி ரசிகர்கள் ஹேப்பி.. வெங்கட் பிரபு தரமான சம்பவம்!

சென்னை: நடிகர் விஜய் இரட்டை வேடங்களில் நடித்து இன்று அதாவது செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ள படம் தி கோட். இந்தப் படத்தில் விஜய்யுடன் சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், யோகிபாபு, லைலா, பிரேம் ஜி, ஜெயராம், வைபவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இவர்கள் மட்டும் இல்லாமல் படத்தில் மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த் ஏ.ஐ தொழில்நுட்பத்தின் அடிப்படையில் நடித்துள்ளதைப் போல் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. படத்தினை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். படத்தினை ஏ.ஜி.எஸ் ., எண்டர்டைமெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு இசை வெளியீட்டுவிழாவே நடத்தாமல் படத்தினை பட்டி- தொட்டி எங்கும் கொண்டு போய் சேர்த்துள்ளது, அர்ச்சனா கல்பாத்தியின் குழு.

இந்நிலையில் படத்தின் ரிலீஸ்க்கு முன்னரே ரசிகர்களுக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இது மட்டும் இல்லாமல், படத்தில் பல்வேறு கேமியோ ரோல்கள் இருப்பதாக கூறப்பட்டது. குறிப்பாக நடிகர் அஜித்குமாரும் நடித்துள்ளார் என கூறப்பட்டது. மேலும் த்ரிஷா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார் என கூறப்பட்டது. இது குறித்த கேள்விகளுக்கு எல்லாம், தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தனர்.

goat vijay ajithkumar mankatha

இந்நிலையில், படம் ரிலீஸ் ஆகி பலரது பாராட்டைப் பெற்று வருகின்றது. அதேபோல் நடிகர் விஜயகாந்த் இண்ட்ரோ காட்சி படத்தில் ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் உருவாக்கிய காட்சிகள் இணையத்தில் வெளியாகி பலரது வரவேற்பைப் பெற்றது. அதேபோல் மட்ட பாடலுக்கு நடிகை த்ரிஷா விஜய்யுடன் இணைந்து நடனமாடுகின்றார் எனவும் படம் பார்த்தவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

goat vijay ajithkumar mankatha

வீடியோ: இப்படியான நிலையில், படத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான மங்காத்தா படத்தின் காட்சி இருப்பதாக சில ரசிகர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், கோட் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் நடிகர் விஜய், " சொல்லு.. யார் ஃபேன் நீ" என கேள்வி கேட்கின்றார். உடனே மங்காத்தா படத்தின் பி.ஜி.எம் பின்னணியில் ஒலிக்கின்றது. அப்போது ஒட்டுமொத்த திரையரங்கமுமே ரசிகர்களின் ஆரவாரத்தால் அதிர்கின்றது.

goat vijay ajithkumar mankatha

மங்காத்தா: இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. மேலும் மங்காத்தா படத்தின் பி.ஜி.எம் கோட் படத்தில் இடம் பெற்றுள்ளதைப் பார்த்த ரசிகர்கள் குறிப்பாக அஜித் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது மட்டும் இல்லாமல் படத்தில் 30 முதல் 40 ட்விஸ்ட்கள் இருப்பதாகவும், ஏராளமான கேமியோ கதாபாத்திரங்கள் இருப்பதாகவும் படம் பார்த்த ரசிகர்கள் கூறியுள்ளனர்.

goat vijay ajithkumar mankatha

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X