GOAT: கோட் ஒரு நாடக காதல் படம்.. இணையத்தில் கம்பு சுத்தும் அதிமேதாவிகள்.. இது என்னடா புதுசா இருக்கு?

சென்னை: நடிகர் விஜய் இரண்டு வேடங்களில் நடித்து வெளியாகி பாக்ஸ் ஆஃபீஸில் வசூல் செய்துவரும் படம் என்றால் அது தி கோட். நடிகர் விஜய், முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளதால், சினிமா வாழ்க்கையில் இந்தப் படம் அவரது கடைசி இரண்டாவது படம் ஆகும். இப்படி இருக்கும்போது படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்நிலையில் படம் கடந்த 5ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இப்படம் முதல் நான்கு நாட்களில் ரூபாய் 288 கோடிகளை வசூல் செய்தது. 2024ஆம் ஆண்டு வெளியான தமிழ் படங்களில் மாஸ் ஓப்பனிங் கிடைத்துள்ள படம் என்றால் அது தி கோட் படத்திற்குத்தான். படத்தினை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். படத்தில் நடிகை த்ரிஷா, மட்ட பாடலுக்கு நடனமாடியுள்ளார். அதேபோல் சிவகார்த்திகேயன் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கோட் படத்தினை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தில் விஜய்க்கு டீ-ஏஜிங் செய்யப்பட்டுள்ளது. படத்தினைப் பொறுத்தவரையில், டெக்னிக்கலாக மிகவும் தரமான படமாக உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல், விஜய் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் மற்ற நடிகர்களின் ரசிகர்களையும் திருப்தி படுத்த திரைக்கதையில் ஆங்காங்கே சில காட்சிகள் திரைக்கதையின் வழியிலேயே வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தோனி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித்குமார், விக்ரம் உள்ளிட்டவர்களின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையிலும் திருப்தி கொடுக்கும் வகையிலும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.

goat vijay venkat prabhu

இப்படியான காட்சிகளைப் பார்த்த ரசிகர்கள் தியேட்டரே அதிரும் அளவிற்கு ஆரவாரம் செய்தனர். மேலும், படத்தில் சிவகார்த்திகேயன் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் இரண்டாம் பாதியில் இடம்பெற்றுள்ள மட்ட பாடலுக்கு நடிகை த்ரிஷா நடனமாடியுள்ளார். இதுவும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. மட்ட பாடலில் கில்லி படத்தில் இடம் பெற்றுள்ள 'அப்படிபோடு' பாடலின் நடன அசைவுகளும் இடம் பெற்றிருந்தது. இதுவும் ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக அமைந்தது.

goat vijay venkat prabhu

கேப்டன்: படத்தின் முதல் காட்சியே, ஏ.ஐ., தொழில்நுட்பத்தினைக் கொண்டு உருவாக்கப்பட்ட காட்சியான கேப்டன் விஜயகாந்த் இண்ட்ரோ காட்சி சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தது. இதுவும் ரசிகர்களுக்கு பெரும் சர்ப்ரைஸாக அமைந்தது. படத்தின் ரிலீஸுக்குப் பின்னர் படக்குழு தரப்பில் படம் குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

goat vijay venkat prabhu

நாடக காதல்: படம் வெளியாகி ஒரு வாரத்திற்கு மேல் ஆகின்ற நிலையில், இணையத்தில் கோட் படம், நாடகக் காதல் குறித்து பேசுகின்றது என சிலர் இணையத்தில் கம்பு சுற்றி வருகின்றனர். அதாவது ஜீவன் கதாபாத்திரத்தில் உள்ள விஜய், மீனாட்சி சௌத்ரியை காதலிப்பார். அவர் வில்லன் விஜய் என்பதால், தன்னைப் பற்றிய உண்மையைத் தெரிந்து கொண்டதால், அவரைக் கொலை செய்துவிடுவார். இந்த திரைக்கதையை இணையத்தில் சிலர் படத்தினை நாடகக்காதல் படம் எனக் கூறி வருகின்றனர்.

goat vijay venkat prabhu

வெங்கட் பிரபு: அதாவது ஜீவன் விஜய் நாடகக் காதல் செய்து, மீனாட்சி சௌத்ரியைக் கொலை செய்கின்றார். இதனைத் தெரிந்து கொண்ட காந்தி கதாபாத்திரத்தில் உள்ள விஜய், ஜீவனைக் கொல்கின்றார் என இணையத்தில் சிலர் கம்பு சுத்திக் கொண்டு உள்ளார்கள். இவையெல்லாம், படக்குழுவினருக்கு குறிப்பாக, படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபுவுக்குத் தெரிந்தால் என்னவெல்லாம் கமெண்ட் செய்வார் என பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.

goat vijay venkat prabhu

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X