சென்னையில் புது வீடு வாங்கிய விஜய்..விலை தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!

சென்னை : நடிகர் விஜய் அதிகவிலை கொடுத்து சென்னையில் புதிய வீடு ஒன்றை வாங்கி உள்ளார்.

Recommended Video

Vijay எடுத்த துணிச்சலான முடிவு, ரசிகர்களுக்கு இது Shocking Update தான்

சோஷியல் மீடியாவில் விஜய் பற்றி தகவல் வராமல் இருந்ததே இல்லை, வாரிசு திரைப்படம் பற்றியோ அல்லது தளபதி 67 திரைப்படம் பற்றியோ ஏதேனும் ஒரு தகவல் இணையத்தில் ஆக்கிரமித்து வலம் வரும்.

ஆனால், இன்று இணையத்தில் டிராண்டாக இருக்கும் செய்தி விஜய் புதியதாக வீடுவாங்கிய செய்திதான்.

நடிகர் விஜய்

நடிகர் விஜய்

தளபதி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறார். தீபாவளி, பொங்கல் அன்று விஜய் படங்கள் ரிலீஸ் ஆக கூட தவறியிருக்கலாம். ஆனால் படம் ரிலீஸாகும் நாளை தீபாவளியாக மாற்றிவிடுவார்கள் விஜய்யின் வெறித்தனமான ரசிகர்கள்.

வாரிசு

வாரிசு

விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இதில், விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

அடுத்தடுத்த அப்டேட்

அடுத்தடுத்த அப்டேட்

வாரிசு படத்தின் ஷுட்டிங் ஸ்பாட் போட்டோக்கள் தொடர்ந்து வெளியாகி வருவதால் படக்குழுவினரும், விஜய் ரசிகர்கள் அப்செட்டில் உள்ளனர். வாரிசு படத்தின் ஷுட்டிங் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் நிறைவடையும் என சொல்லப்படுகிறது. விஜய் அடுத்ததாக நடிக்க உள்ள தளபதி 67 படம் பற்றிய அறிவிப்பு மற்றும் அப்டேட்டை தான். தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தகவலை அவரே பல இடங்களில் உறுதி செய்துள்ளார்.

புதிய பிளாட்

புதிய பிளாட்

இந்நிலையில், நடிகர் விஜய், சென்னையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாங்கி இருக்கிறார். அதன் விலை மட்டுமே 35 கோடி என்று சொல்லப்படுகிறது. இந்த பிளாட்டை விஜய் தன்னுடைய அலுவலகமாக பயன்படுத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், அதே வளாகத்தில் அதே விலையில் நடிகர் ஆர்யாவும் ஒரு பிளாட் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X