மாஸ்டர் நாயகன் விஜயின் மாஸ் திரைப்படங்கள் … லிஸ்ட் இதோ !

சென்னை : "விஜய்" இன்று இந்த பெயரை உச்சரிக்காத தமிழனே இருக்க முடியாது என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் இந்த புகழ் பூவா தலையா போட்டு பார்த்து வந்தது இல்லை என்பது விஜய் ரசிகராய் இருக்கும் பலருக்கும் நன்றாகத் தெரியும். இவர் இந்த நிலைக்கு வர எத்தனை தடைகளையும் எத்தனை ஏளனங்களையும் கடந்து வந்துள்ளார்.

தனது நடிப்பின் மீதான காதல் தனது தந்தையிடம் சொன்ன போது படிக்கற வழியை பாரு என்று அதட்டினார், தாயிடம் கெஞ்சி தந்தையை சமாதனம் செய்து நடித்த முதல் திரைப்படம் நாளைய தீர்ப்பு படுதோல்வி. அப்படத்தில் பணியாற்றிய நடன இயக்குனர் முதல் லைட் மேன் வரை இவரது தோற்றத்தை கேலி செய்தனர்.

இவரெல்லாம் நடிகரா இந்த முகத்தை காசு கொடுத்து பார்க்கனுமா என்று அன்று வசைப்பாடிய நாளிதழ்கள் இன்று, தளபதி தளபதி என்று அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றன. செந்தூரப்பாண்டி, ரசிகன், செல்வா என அவர் நடித்த அனைத்து படங்களும் தோல்வியை சந்தித்தன. அவருக்கு வெற்றியை தேடித்தந்து இன்று அவரை மாஸ் ஹீரோவாக்கிய திரைப்படங்களின் லிஸ்ட் இதோ

 பூவே உனக்காக

பூவே உனக்காக

பல தோல்விகளை சந்தித்தால் வெற்றி கனியை முழுமையாக ருசிக்க முடியும். பூவே உனக்காக தளபதியின் வாழ்வில் முதல் பதிவு அதன் பின்பே அவரை ஒரு நடிகனாக ஏற்றுகொண்டது திரை உலகம். இயல்பான எதார்த்த இளைஞனாக நடித்து மக்கள் மனதில் ஓரளவு பதியம் போட்டப்படம் தான் பூவே உனக்காக. காதலும் கற்று மற என்ற தத்துவம் தான் இப்படத்தை வெற்றிப்பெற செய்தது எனலாம். கொஞ்சமும் மெச்சூரிட்டி பெறாத இளைஞராக இப்படத்தில் நடித்து இருப்பார் விஜய். தனது கண்மூடித்தனமான ஒருதலைக்காதல் தவிக்கும் தவிப்புகளை அற்புதமாக வெளிப்படுத்தி அசத்தி இருப்பார். இறுதியில் காதலும் வேண்டாம், ஒரு மண்ணும் வேண்டாம் என்று படத்திற்கு மேலும் உரமூட்டி இருப்பார். படத்தோட பிளஸ்சே அதுதான்.

 வித்தியாசமான காதல்

வித்தியாசமான காதல்

காதலுக்கு மரியாதை இது ஒரு வித்தியாசமான காதல் கதை தான் உருகி உருகி காதலித்து விட்டு தனது குடும்பத்துக்காக காதலை மறப்பது. இந்த இளசுகள் மத்தியில் வெற்றி பெற்றதோ இல்லையோ இந்த படத்தின் மூலம் அனைத்து வயது ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தார் விஜய். ஷாலினியிடம் காதலை வெளிப்படுத்தும் போதும், அம்மா ஸ்ரீவித்தியாவிடம் அன்பைப் பொழியும் போதும், விஜயின் மென்மையான உணர்வு அழகாக பிரதிபலிக்கும்.

 அனைத்தும் ஹிட்

அனைத்தும் ஹிட்

நினைத்தேன் வந்தாய், பிரியமுடன், நிலாவே வா, துள்ளாத மனமும் துள்ளும், நெஞ்சினிலே, மின்சாரக்கனவு, என்றென்றும் காதல் என வரிசையாக வெளியான அனைத்துப்படங்களும் ஒரளவு ஓடி இவரின் வெற்றிப்புகழைப்பாடின. குஷி திரைப்படத்தில் கல்லூரி இளைஞனாக வந்து கலகலப்புடன் நடித்து அனைவர் இடத்திலும் வெரி குட் வாங்கினார் விஜய். குறும்புத்தனமான பேச்சு, ஆமான்டி, இடுப்ப தான் பாத்தேன் என்ற வசனமும், ஜோதிகாவுடன் ஈகோவில் சண்டையிட்டுக்கொள்ளும் போதும் பல சபாஷ்களை பெற்றுள்ளார்.

 அக்ரிமெண்ட் கணவன்

அக்ரிமெண்ட் கணவன்

ப்ளேபாய் இளைஞனாக நடித்தது மட்டும் இல்லாமல் அக்ரிமெண்ட் கணவனாக, தாய்ப்பாசம் கிடைக்காத பரிதாபத்திற்குரிய மகனாக, பல்வேறு பரிமாணங்களில் பரிமளிக்கிறார் விஜய். இந்த படத்தில் தேவைக்கு ஏற்ப சண்டையும், தேவைக்கு ஏற்ப காதலும் கலந்து படமும் ஹிட்டடித்தது. பகவதி படத்தில் தாதாவாக வரும் விஜய் ஸ்டைலாக இருந்தாலும், மனதில் பதிந்தது என்னவோ அந்த டீக்கடை விஜய்தான். அலட்டிக் கொள்ளாத நடிப்பு, ஆர்ப்பாட்டம் இல்லாத சண்டைக்காட்சி என படம் வெற்றி பெற்று அப்ளாஸ்களை வாங்கியது.

 வெற்றிப்புள்ளி

வெற்றிப்புள்ளி

கில்லித் திரைப்படம் விஜய்க்கு ஒரு வெற்றிப்புள்ளி என்று சொல்லலாம். உற்சாகப் புயலாக விஜய் வரும் காட்சிகள் அனைத்தும் கை தட்டலை அள்ளின. ஆகாசத்துக்கும். பூமிக்குமாக பறக்கிற பையன் அடிதடியிலும், காமெடியிலும் பிரமாதமாக ஸ்கோர் பண்ணி இருப்பார் விஜய். துள்ளித் துள்ளி ஓட்டம், தலையைச் சாய்த்து ஒரு சோகம், கண்கள் மின்ன காதல், மின்னல் வேக நடனம் என்று இவருக்கு கொடுத்த அனைத்து பாத்திரத்தையும் கனகச்சிதமாக தேய்த்து பளபளவென மெருகேற்றியிருக்கிறார் விஜய்.

சச்சின்

சச்சின்

குறும்பு, உடம்பு புல்லா கொழுப்பு பிடித்த இளைஞனாக படம் முழுக்க நடித்து கலக்கி இருப்பார் விஜய். அலட்டலான சிரிப்பு, டைமிக் ஜோக் காமெடி என படம் ஒரு விதமான கலகலப்பாகவே போகும். பாடிலேங்குவேஜில் பின்னியெடுத்து இருப்பார் விஜய். இந்த போக்கிரியை ரசிக்கிறதைத் தவிர வேறொண்ணும் பண்ண முடியாது. அடுத்தவங்களைக் காயப்படுத்துற கலாட்டாவா இல்லாம, ரசிக்கிற விதமான எல்லோரையும் மயக்கியவன் இந்த போக்கிரி, வந்துட்டாண்டா நம்ம ஆளுனு விசில் அடிக்க வைக்க வைத்து சந்தோஷப்படுத்துற ஆளு தான் நம்ம போக்கிரி.

 அழகான கதை

அழகான கதை

நண்பன் ஒரு அழகான கருத்து திரைப்படமாகும். பெற்றவர்கள் தங்களது ஆசைகளை பிள்ளைகள் மீது திணிக்காமல் படிப்பு விஷயத்தில் பிள்ளைகளின் விருப்பப்படி விட்டால், அவர்களால் வாழ்க்கையில் முன்னுக்கு வர முடியும் என்பதை அழகாக சொல்லிய திரைப்படம் நண்பன். இந்த படத்தில் பஞ்சவன் பாரிவேந்தனாக பாத்திரம் அறிந்த பளிச்சிடுகிறார் விஜய். துப்பாக்கி படத்தில் ராணுவ வீரர் வேடத்தில் விறைப்பும் முறைப்புமாக இருந்தாலும் அந்த கதாபாத்திரத்திற்கு அழகாக உயிர் கொடுத்து இருக்கிறார் விஜய். நிதானமாகப் பேசிக் கொண்டே தீவிரவாதியின் கை விரல்களை வெட்டும் போதும் அப்ளாஸ்களை அள்ளினார் விஜய்.

தலைவா

தலைவா

தளபதி தளபதி என பில்டப் பாடலுடன் வரும் விஜய். துள்ளல் நடனம் எள்ளல் காதல் என அடக்கி வாசித்து இருப்பார் விஜய். எளிமையாக, முன்பாதி வசீகரிக்கும் காதல் பின்பாதி ஆர்ப்பரிக்கும் தலைவன் என தலைவா படத்தில் கலக்கோ கலக்கு என கலக்கி இருப்பார் விஜய். தெறி திரைப்படத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக வந்து அட்டசாகப்படுத்தி இருப்பார் விஜய். கதை முழுக்க விஜய்யின் தலைமேல் தான். தெறிப்படத்தில் ஜித்து ஜில்லாடியாக வந்து சோ க்யூட் என சொல்ல வைத்துள்ளார் விஜய்.

 மெர்சல்

மெர்சல்

ஒரு குழந்தை உருவாக பத்து மாசம் ஒரு பட்டதாரி உருவாக மூணு வருஷம், ஆனால் ஒரு தலைவன் உருவாக ஒரு யுகமே தேவைப்படும் என்ற மாஸான டயலாக்கும் மெர்சல் செய்து இருப்பார் விஜய். மாறன் கதாபாத்திரத்தை க்ளாஸாகவும் , வெற்றி கதாபாத்திரத்தை ஸ்டைலாகவும் பண்ணி இருப்பார் விஜய். சர்க்கார் திரைப்படத்தில் விஜய்யின் ஸ்டைல் மற்றும் உடல்மொழி அனைத்து தரப்பினரையும் ஈர்க்கும் விதமாக உள்ளது. வெளிநாட்டில் இருந்து வரும் நவ நாகரீக இளைஞனாக தோன்றும் விஜய், தன் இரு கைகளையும் அகல விரித்தவாறு மேடையேறும் பாணி ஏராளமான கைதட்டல்களை பெறுகிறது.

கோச்

கோச்

பிகில் படத்தில் தந்தை மகன் கதாபாத்திரத்தில்அழகாக நடித்து இருப்பார் விஜய். ராயப்பனாக தந்தை கதாபாத்திரத்திலும் மைக்கலாக மகன் கதாபாத்திரத்திலும் உடல் மொழியில் வேறுபடுத்திக்காட்டி பின்னி எடுத்து இருப்பார். கோச்சாகவும் அசால்ட்டு படுத்தி இருப்பார் தளபதி. மாஸ்டர் படத்தில் மாஸ்டராக மாஸ் காட்டி உள்ளார் விஜய். தன்னுடைய பலம் என்ன என்பதை தெரிந்து வைத்துள்ள விஜய் சும்மா புகுந்து விளையாடி உள்ளார். அலட்டிக்கொள்ளாத நடிப்பை வெளிப்படுத்தி தனது ரசிகர்களை திருப்திப்படுத்தி உள்ளார் விஜய்.

 தமிழனுக்கு பெருமை

தமிழனுக்கு பெருமை

அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்த விஜய் பந்தய குதிரையாய் முன்னேரி வருகிறார். 30 ஆண்டுகாலம் சினிமாவில் நடித்து பிற நடிகர்கள் பிடித்த இடத்தை 10 ஆண்டு கால பயணத்திலே எட்டிப்பிடித்துள்ளார் விஜய். இவரின் வெற்றி பல கோடி தமிழனுக்கு பெருமை சேர்த்துள்ளது. ஒரு சக நடிகனே பார்த்து பொறாமையில் பொங்கும் அளவுக்கு, இவரது வளர்ச்சியை பார்த்து வெறுத்து போய் தான் இருக்கவேண்டும். தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைக்கள் முதல் பெரியவர் வரை அதிக ரசிகர்களை கொண்ட ஒரே தமிழன் "விஜய்" தன்னம்பிக்கையின் அடையாளமாய் விடாமுயற்சியின் விளக்கமாய் விளங்குகிறார் தளபதி விஜய்.

Read more about: vijay விஜய்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X