இப்ப நாம எல்லாம் மெக்ஸிகன் ஃபேமிலி.. நண்பர்களுடன் வித்தியாசமான உடையில் விஜய்.. வைரலாகும் போட்டோ!

சென்னை: நண்பர்கள் என்று வந்துவிட்டாலே நடிகர் விஜய்யை கையில் பிடிக்க முடியாது. அவர்களுடன், நேரத்தை நன்றாக செலவிடுவது, விளையாடுவது, குறும்புத்தனம் என எல்லாமே எக்ஸ்ட்ராவாகத் தான் இருக்கும்.

Recommended Video

Master Vs Soorarai Pottru, Diwali க்கு மோத போகிறது | Surya, Thalapathy Vijay

நீண்ட நாட்களுக்கு முன்னதாக வெளிநாடு சுற்றுலா சென்றிருந்த போது நடிகர் விஜய் தனது நண்பர்களுடன் வித்தியாசமான உடை அணிந்து இருக்கும் புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பரும் டிவி சீரியல் நடிகருமான சஞ்சய் இந்த த்ரோபேக் புகைப்படத்தை தற்போது வெளியிட்டு இருக்கிறார்.

நண்பர்கள் என்றால் உயிர்

நண்பர்கள் என்றால் உயிர்

எல்லோருக்குமே நண்பர்கள் என்றால் உயிர் தான். கோலிவுட்டின் வசூல் மன்னனாக மாறிய பின்னரும், தனது ஆரம்ப கால நண்பர்களுடன் நேரத்தை செலவிட ஒரு போதும் தளபதி விஜய் தயங்கியதே கிடையாது. அவர்களுடன் விளையாடுவது, அரட்டை அடிப்பது என அனைத்து சேட்டைகளுமே செய்வதில் விஜய் இன்று வரையில் கில்லி தான்.

நெருங்கிய நண்பர்

நெருங்கிய நண்பர்

சின்னத்திரை தொடர்களில் நாயகனாக நடித்து அசத்தி வரும் நடிகர் சஞ்சய், தளபதி விஜய்யின் நீண்ட கால நெருங்கிய நண்பர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். விஜய் நடித்த பத்ரி மற்றும் புதிய கீதை படங்களிலும் சஞ்சய்க்கு நடிக்க வாய்ப்புகளை அளித்திருப்பார் விஜய். தற்போது மாஸ்டர் படத்திலும் நடித்துள்ளார்.

மெக்ஸிகன் உடையில்

மெக்ஸிகன் உடையில்

இந்த லாக்டவுன் நேரத்தில் பிரபலங்கள் தங்களின் பழைய நினைவுகளை அவ்வப்போது அசை போட்டு வருகின்றனர். தாங்கள் சேமித்து வைத்திருந்த அரிய புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர். இந்நிலையில், மெக்ஸிகன் உடையில் நடிகர் விஜய் இருக்கும் புகைப்படத்தை சஞ்சய் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தொப்பி எங்கே

தொப்பி எங்கே

2014ம் ஆண்டு மெக்ஸிகோ நகருக்கு நண்பர்களுடன் நடிகர் விஜய் சுற்றுலா சென்றபோது அந்த புகைப்படம் எடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த த்ரோ பேக் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், தளபதி விஜய்க்கு மட்டும் ஏன் தொப்பி தரலைன்னு கமெண்ட்டுகளில் கேட்டு வருகின்றனர். வேட்டைக்காரன் படத்தில் நடித்துள்ள காமெடி நடிகர் ஸ்ரீநாத்தும் அந்த புகைப்படத்தில் உள்ளார்.

நிறைய அப்லோடு பண்ணுங்க

நிறைய அப்லோடு பண்ணுங்க

இன்னும் இது மாதிரி நிறைய அப்லோடு பண்ணுங்க நல்லா இருக்கும் என்றும், இது தான் சூப்பரான த்ரோபேக் புகைப்படம் என்றும், விஜய் அண்ணா எவ்ளோ ஹேண்ட்ஸம்மா இருக்காரு என்றும் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன. விஜய் அண்ணா கூட எடுத்த இன்னும் நிறைய போட்டோ போடுங்க அண்ணா என்ற அன்பான வேண்டுகோளும் குவிகின்றன.

நம்ம ஃபோகஸ்

நம்ம ஃபோகஸ்

நம்ம ஃபோகஸ் எப்போதுமே தளபதி விஜய் அண்ணா மேல தான் இருக்கும் என நண்பர்கள் கூட்டத்தில் இருந்து தனியாக நடிகர் விஜய் படத்தை மட்டும் வெட்டி எடுத்தும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். நடிகர் விஜய்யின் பிறந்தநாள் ஜூன் 22ம் தேதி வரவுள்ள நிலையில், இது போன்ற நிறைய அரிய புகைப்படங்கள், மாஸ்டர் அப்டேட் உள்ளிட்டவை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X