மோகன் லாலை வீட்டிற்கு அழைத்த விஜய்.. லால் ஏட்டன் பேச்சுக்கு மறுப்பு தெரிவித்த தளபதி

சென்னை: தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது தி கோட் என்ற படம் உருவாகி வருகின்றது. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கின்றார். பிரபுதேவா, பிரசாந்த், மைக் மோகன், சினேகா உள்ளிட்டோர் இந்த படத்தில் நடிக்கின்றனர். விஜய் குரலில் இந்த படத்தில் இருந்து ஒரு பாடல் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

தி கோட் படத்திற்குப் பின்னர் விஜய் தனது 69வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் இயக்குநர் யார் என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் உள்ளது. மேலும் இந்த படத்திற்குப் பின்னர் விஜய் படங்களில் நடிப்பதில் இருந்து முழுமையாக விலகிவிட்டு, முழுநேர அரசியலில் ஈடுபடவுள்ளார் என ஏற்கனவே அறிக்கை வெளியிட்டிருந்தார்.

Vijay Mohanlal The GOAT TVK Vijay Birthday

இதனால் தி கோட் படத்திற்கும் இவரது 69வது படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் வரும் 22ஆம் தேதி விஜய் தனது 50வது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார். இதற்கான ஏற்பாடுகளும் மிகத் தீவிரமாக ரசிகர்கள் மன்றத்தின் சார்பில் ஏற்பாடுகள் முழுமூச்சில் நடைபெற்று வருகின்றது. அதேபோல் அன்றை தினத்தில் தி கோட் படம் குறித்தோ அல்லது 69வது படம் குறித்தோ புதிய அப்டேட் எதாவது வரலாம் எனவும் கூறப்படுகின்றது.

ஜில்லா படம்: ஏற்கனவே நிகழ்ச்சி ஒன்றில் விஜய் ரசிகர்கள் ஏற்பாடு செய்திருந்த 50 கிலோ கேக்கினை, விஜயின் அப்பாவும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திர சேகர் வெட்டி விஜயின் பிறந்த நாள் கொண்டாடத்தில் ஈடுபட்டார். இப்படியான நிலையில் நடிகர் விஜய் குறித்த தகவல் ஒன்று இணையத்தில் பரவி வருகின்றது. அதாவது கடந்த 2015ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியான படம் ஜில்லா. மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி வசூல் ரீதியாக ஓடி தோல்வியைத் தவிர்த்தது. டி.இமான் இசையமைத்திருந்த படத்தில் இடம் பெற்ற பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. படத்தில் விஜய்க்கு அப்பாவாக மோகன் லால் நடித்திருப்பார். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

Vijay Mohanlal The GOAT TVK Vijay Birthday

மோகன்லால் பேச்சைக் கேட்காத விஜய்: படப்பிடிப்பின் போது ஒருநாள் நடிகர் விஜய் தனது வீட்டிற்கு நடிகர் மோகன் லாலை அவரது குடும்பத்துடன் சாப்பிட வரும்படி அழைப்பு விடுத்துள்ளார். அதனால் நடிகர் மோகன் லாலும் அவரது மனைவியும் ஜில்லா படத்தில் நடித்திருந்த நடிகர் ஜோ மல்லூரியும் சென்றுள்ளனர். இவர்கள் மூவரை விஜய், விஜயின் மனைவி மற்றும் அவரது இரண்டு குழந்தைகளும் வரவேற்றுள்ளனர். சாப்பிடும் அறையில் இவர்கள் மூவருக்கு மட்டும் இருக்கை போடப்பட்டுள்ளது. இவர்கள் மூவருக்கும் விஜயும் அவரது மனைவியும் பரிமாறியுள்ளனர். மோகன்லால் பலமுறை விஜயையும் தங்களுடன் அமர்ந்து சாப்பிடச் சொல்லியுள்ளார். ஆனால் விஜய் சிரித்துக் கொண்டே மறுத்து வந்துள்ளார். இது நடிகர் ஜோ மல்லூரியை கடுமையாக கோபமடையச் செய்துள்ளது. மூவரும் சாப்பிட்டு முடித்து அங்கிருந்து புறப்படுள்ளனர்.

Vijay Mohanlal The GOAT TVK Vijay Birthday

காரணம் இதுதான்: அடுத்த நாள் படப்பிடுப்புத் தளத்தில் ஜோ மல்லூரி விஜயை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார். இதனால் ஜோ மல்லூரியை நேரில் அழைத்த விஜய் என்ன எனக் கேட்டுள்ளார். மோகன் லல் போன்ற பெரிய மனிதன் கூறும்போது நீங்கள் சாப்பிட்டு இருக்கலாம் விஜய் எனக் கூறியுள்ளார். இதைக் கேட்ட விஜய், ஜோ, எனக்கு ஒரு பழக்கத்தை எனது பெற்றோர்கள் கற்பித்துள்ளனர். அதாவது வீட்டிற்கு வரும் விருந்தாளிகள் சாப்பிட்டு முடித்த பின்னர்தான் சாப்பிடவேண்டும் என்பதுதான் அது. நீங்கள் போன பின்னர் நாங்கள் சாப்பிட்டோம் எனக் கூறியுள்ளார். விஜய் இதைச் சொன்ன பின்னர்தான் ஜோமல்லூரி தனது கோபத்தில் இருந்து வெளியேறியுள்ளார். இந்த நிகழ்வை ஜோ மல்லூரி ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் உலா வருகின்றது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X