Jana Nayagan: தளபதிக்காக மொத்த மலேசியாவையும் கண்ட்ரோலில் எடுத்த மாலிக்.. இவரோட எஸ்டிடி என்ன தெரியுமா?

மலேசியா: தளபதி விஜய் தான் இந்த வார வார இறுதி முழுவதும் டாக் ஆஃப் த இந்தியா என்பதை விட, டாக் ஆஃப் த வேர்ல்ட் ஆக இருக்கவும் கூட வாய்ப்பு உள்ளது. அவரது கடைசி படமான ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை அதாவது டிசம்பர் 27ஆம் தேதி மலேசியாவில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னரே தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்படி இருக்கும்போது இந்த ஏற்பாடுகளைச் செய்பவர் யார்? அவர் அப்படி என்னென்ன ஏற்பாடுகளை எல்லாம் செய்துள்ளார்? அவரது பின்புலம் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

கேவிஎன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ஜனநாயகன். இந்த படத்தை ஹெச். வினோத் இயக்கி உள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். படம் வரும் ஜனவரி 9ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது. இப்படி இருக்கும்போது படத்தின் இசை வெளியீட்டு விழாவை மிகவும் பிரமாண்டமாக நடத்த படக்குழு முடிவு செய்து மலேசியாவில் ஏற்பாடுகளைச் செய்தது. இந்த இசை வெளியீட்டு விழாவை, நடிகர் விஜய்க்கு ஃபேர்வெல் பார்ட்டி போல நடத்த திட்டமிட்டனர். இதனால் பல பிரபலங்களும் இதில் கலந்து கொள்கிறார்கள்.

இப்படி இருக்கும்போது, தளபதி திருவிழா என்ற பெயரில் நடக்கும் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் என்பது கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னரே மலேசியாவில் தொடங்கிவிட்டது. இப்படி இருக்கும்போது, மலேசியாவில் இந்த ஏற்பாடுகளைச் செய்தவர் மாலிக் என்பவர் தான். அவர் யார் என்ற கேள்வி பலருக்கும் தற்போது எழுந்துள்ளது.

Thalapathy Vijay Jana Nayagan Audio Launch Whole Work Done By Malaysian Dato Abdul Malik

மாலிக்கின் முழு பெயர் டத்தோ அப்துல் மாலிக். இவர் மலேசியாவின் மிகப்பெரிய தொழில் அதிபர்களில் ஒருவர். இதைக் கடந்து மலேசியாவில் அரசியல் வட்டத்திலும் இவருக்கு செல்வாக்கு அதிகம். இந்நிலையில் இந்த இசை வெளியீட்டு விழாவை நடத்திக் கொடுக்கும்படி, கே.வி.என் நிறுவனம் இவரை தொடர்பு கொண்டு, சுமார் ஐந்து மாதங்களுக்கு முன்னரே பொறுப்பை ஒப்படைத்து விட்டார்கள் என்று கூறப்படுகிறது.

தனது வசம் பொறுப்பு வந்ததும், மலேசியா அரசின் சிறப்பு அனுமதியை வாங்கிய அவர், அதன் பின்னர் புகித் ஜலீல் மைதானத்தை சுமார் 5 மாத காலத்திற்கு வாடகைக்கு வாங்கி மேடை அமைப்பு, தொடங்கி, ரசிகர்கள், பிரபலங்கள் வந்து செல்வதற்கான பாதை, அவர்களுக்கான கழிவறை வசதிகள், தண்ணீர் வசதிகள், இருக்கை வசதிகள் உள்ளிட்ட பலவற்றை பார்த்து பார்த்து, செய்து வருகிறாராம். இதில் மேடை அலங்காரம் மற்றும் நுழைவு வாயில் வடிவமைப்பில் மட்டும் விஜய் மற்றும் படக்குழுவின் எண்ணங்களை தெரிந்து கொண்டும் அதற்கு ஏற்ற வகையில் அமைத்துக் கொடுத்துள்ளாராம். நாளை நடைபெற உள்ள நிகழ்ச்சிக்கு முழுப்பொறுப்பும் இவர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Thalapathy Vijay Jana Nayagan Audio Launch Whole Work Done By Malaysian Dato Abdul Malik

திரைத்துறையில் ஆதிக்கம்: அண்மையில் இவர் தொடங்கிய நகைக்கடை திறப்பு விழாவில் தான் நடிகர் சிம்பு கலந்து கொண்டார். தமிழில் வெளியாகும் பல படங்களின் மலேசியா ரிலீஸ் உரிமத்தை இவர்தான் கைப்பற்றுகிறார். ஜன நாயகன் படத்தின் மலேசியா ரிலீஸ் உரிமத்தையும் இவர்தான் கைப்பற்றி உள்ளார். அதேபோல் பராசக்தி படத்தின் மலேசியா ரிலீஸ் உரிமத்தையும் இவர் கைப்பற்றி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X